மூன்றாம் கட்ட தளர்வு நடவடிக்கையால் அடுத்த ஆண்டு நடை பெற இருக்கும் தங்களது பதிவு மற்றும் பாரம்பரிய திருமணத் திற்கு அதிகமானோரை அழைக்க முடியும் என்பது குறித்து மகிழ் கின்றனர் மஹாலெக்ஸ்மி-சந்திரேஷ் (மேல் படம்) தம்பதியர்.
"இதனால் முக்கியமாக திருப்தி அடைவது உறவினர்களே," என்று தனியார் வாகன வர்த்தகத்தை நடத்தும் திரு சந்திரேஷ் கூறினார். இருந்தபோதும் மூன்றாம் கட்ட தளர்வு காலக் கட்டத்திலும் எண்ணிக்கை கட்டுப்பாடு தொடர்ந்து இருப்பது நல்லதே என்றார் குமாரி மகா, 29.
"சாதாரண சூழலில் 600 பேர் வரை அழைக்க எங்களுக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும். நிச்சயமின்மை நிலவும் சூழலில் சிக்கனப்போக்கு அவசியம் என்பதால் அதிகம் பேரை அழைக்காமல் இருப்பதே நல்லது," என்று அவர் கூறினார். கோயிலில் நடத்தப்படும் தங்களது திருமணத்தில் நாதசுவர இசை இருக்கும் என்பது இத்தம்பதியருக்கு கூடுதல் மகிழ்ச்சி.
அதேபோல, பதிவுத் திருமணத்தை கடந்த மாதம் முடித்த மகாலட்சுமி-சத்ய சரவணன் தம்பதியர் (கீழ்ப்படம்), மூன்றாம் கட்டத் தளர்வின்போது நிகழும் தங்களது பாரம்பரிய திருமண நிகழ்வுக்கு அதிகமானோரை அழைக்க முடிவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தனர். "இருந்தபோதும் வீட்டில் எட்டுப் பேர் வரை மட்டும் அனுமதிக்க முடியும் என்பது எங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்," என்று மகாலட்சுமி கூறினார்.
மூன்றாம் கட்ட தளர்வு நடவடிக்கைகளுக்கான விதிமுறை களின்படி வீட்டில் நடைபெறும் பதிவுத் திருமணங்களுக்கு எட்டு வருகையாளர்கள் வரை கலந்துகொள்ளலாம்.
பாரம்பரிய திருமண விழாவுக்கு அதிகமானோரை அழைக்க முடியும் என்பது எங்களுக்கு மகிழ்வான செய்தி. இருப்பினும் வீட்டில் நடைபெறும் திருமணம் தொடர்பான நிகழ்வுகளுக்கு எட்டுப் பேருக்கு மேல் அனுமதி இல்லை என்பது சிறிது சிரமத்தை ஏற்படுத்தும்.

