தமிழ்மொழியை தாங்கிப் பிடிக்கும் சமூகம்

தமிழ்மொழியை தாங்கிப் பிடிக்கும் சமூகம்

1 mins read

நம்­மில் பெரும்­பா­லா­னோ­ருக்கு தமிழ் மொழி கற்­றல் என்­பது பள்­ளி­யோடு முடிந்­து­வி­டு­கிறது. பள்­ளிக்கு அப்­பால் என்­ன­தான் தமிழ் திரைப்­ப­டங்­களை பார்ப்­பது, தமிழ் நிகழ்ச்­சி­க­ளுக்கு போவது என்­றி­ருந்­தா­லும் நமது அன்­றாட வாழ்க்­கை­யில் தமிழ் மொழியை பயன்

படுத்­தி­னால்­தான் அது வாழும் மொழி­யா­கும். நமது அன்­றாட வாழ்க்­கை­யில் அங்­கம் வகிக்­கும் இடங்­க­ளி­லும் நமது உரை­யா­டல்­க­ளி­லும் நாம் பிடித்து படிக்­கும் நூல்­க­ளி­லும் தமிழ் பயன்­பாடு இருந்­தால், தமிழ் வாழும் என்­பது திண்­ணம்.

கிட்­டத்­தட்ட 9% இந்­தி­யர்­களை கொண்ட சிங்­கை­யில் தமிழ் மொழியை வாழும் மொழி­யாக்க பல­வற்­றை­யும் செய்­து­வ­ரு­கின்­றன நமது சமூ­க­மும் அர­சாங்­க­மும்.

அண்மைக் கால­மாக இல்­லங்­களில் அதி­க­ரித்­து­வ­ரும் ஆங்­கில மொழி­யின் புழக்­கம், பிற இந்­திய மொழி­க­ளின் ஈடு­பாடு, அதி­கா­ரத்­துவ மொழி­பெ­யர்ப்­பு­களில் ஏற்­படும் தவ­று­கள் போன்­றவை சிங்­கப்­பூ­ரில் தமிழ்­மொ­ழி­யின் வளர்ச்­சிப் பாதை யில் சவால்­களை நட்டு வைத்து உள்­ளன. இருப்­பி­னும் மொழி வளர்ப்­புப் பணி­யில் இடை­ய­றாது ஈடு­பட்­டி­ருக் கும் வர்த்­த­கங்­களும் சமய வழி பாட்­டுத் தலங்­களும் நம்­மி­டையே உள்­ளன. அவற்றை நாடிச் சென்று தமிழ் முரசு திரட்­டிய தக­வல்­களை இங்கே காண்­போம்.