தமிழில் வாசிப்புப் பழக்கம் என்பது வகுப்பறைகளுக்கு அப்பாலும் தொடர்வது ஒருவரின் சிந்தனை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது மட்டுமல்லாமல் தமிழ் மொழிப் புழக்கத்தையும் ஊக்குவிக்கிறது.
சிங்கப்பூரர்களிடையே தமிழ் புத்தக வாசிப்பை அதிகரிக்கவும் ஊக்குவிக்கவும் தேசிய நூலக வாரியம் பல திட்டங்களை கொண்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சரா
சரியாக 2,400 புதிய தமிழ்ப் புத்தகங்களையும் 1,000 புதிய தமிழ் மின்புத்தகங்களையும் (eBooks) அறிமுகப்படுத்துவதோடு சிறியவர், பெரியவர் என்று அனைவருக்கும் பல வகையான வாசிப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வரு கிறது.
"சென்ற ஆண்டு கொவிட்-19 கிருமித்தொற்று பரவல் அதிகம் பாதித்தபோது மின்புத்தகங்களை, மின் வளங்களை மேம்படுத்துவ தில் எங்களது முயற்சிகளை மையப்படுத்தினோம். மின்னிலக்கச் சேவை களை அதிகரிப்பதன்வழி வாசகர்கள் நூலகங்களுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தவாறே தொடர்ந்து புத்தகங்களை வாசித்து மகிழ முடிகிறது. கடந்த ஆண்டு மின்புத்தக வாசிப்புப் பழக்கம் 153% அதிகரித்தது.
"புதுப்பிக்கப்பட்ட தேசிய நூலக வாரியத்தின் கைபேசிச் செயலி, மின்புத்தகங்களையும் மின் வளங்களையும் அணுகுவதை மிகவும் எளிமையாக்குகிறது," என்றார் தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழி சேவைப் பிரிவின் தலைவரான திரு து.அழகிய பாண்டியன்.

