கடையின் பெயரை ஆங்கிலத்திலோ அல்லது தமிழில் ஒலி
பெயர்ப்புச் செய்தோ பயன்படுத்தும் காலத்தில் சில கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் வாழ்ந்து வருகிறது.
லிட்டில் இந்தியாவில் நாம் 'அணிமணிபொற்சாலை', 'முருகப்பா செட்டிநாடு உணவகம்', ' பொன்னி இந்திய மளிகை' என தமிழில் பெயர்ப் பலகைகளை பார்த்திருப்போம்.
ஆனால் செயின்ட் ஜார்ஜஸ் சாலையில் உள்ள 'ப. சுப்பையா' சலவை நிலையத்தின் தமிழ் பெயர்ப் பலகை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெயர்ப் பலகைகள் மட்டும் அல்ல 'ஆனந்த பவன்' போன்ற உணவகங்களின் ரசீதுகள், 'மச்சான்'ஸ் கிச்சன்' போன்ற உணவகங்களின் உணவுப் பட்டியல்கள் ஆகியனவும்
தமிழில்தான் உள்ளன.
'வெற்றிலை பூண்டு சாதம், புளிச்சகீரை சாதம், உருளை தொக்கு' என தமிழில் பட்டிய
லிடப்பட்ட பெயர்களை பார்க்கும் வாடிக்கையாளர்களும் அந்த உணவு வகைகளின் பெயர்களை தமிழில் படித்துத் தெரிந்துகொள்ள வாய்ப்பு
உண்டாகிறது.

