தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தலைமுறைகளைத் தாண்டி தமிழை வளர்க்க நடைபெறும் முயற்சிகள்

2 mins read

வாசிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் தேசிய நூலக வாரியத்தின் திட்டங்களில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.

'புக் நின்­ஜாஸ்/புக் ரேஞ்­சர்ஸ்'

சுவா­ர­சி­ய­மான கதை­கள் மூலம் 3 முதல் 6 வயது வரை­யி­லான சிறார் களின் ஆரம்­ப­கால வாசிப்புத் திறனை வளர்க்­கும் ஒரு திட்­டம்­தான் புக் நின்­ஜாஸ். வேடிக்கை நிறைந்த படைப்பு மற்­றும் வழி­

மு­றை­கள் மூலம் வாசிப்பு, எழு­தும் ஆர்­வத்­தைத் தூண்­ட 7 முதல் 10 வயது வரை­யி­லான சிறு­வர்­க­ளுக்­கா­னது புக் ரேஞ்­சர்ஸ் கிளப்.

இளை­ஞர்­க­ளுக்­கான

வாசிப்­புத் தொடர்

13 முதல் 17 வய­து­டைய மாண­வர்­கள் பல்­வேறு தமிழ் இலக்­கி­யப் படைப்­பு­க­ளைப் படித்து, கதை­கள், நாட­கங்­கள், திரைக்­க­தை­கள் மற்­றும் குறும்­ப­டங்­க­ளாக எவ்­வாறு அவற்றை உரு­வாக்­கு­வது என்­பதை கற்­றுக்­கொள்­கி­றார்­கள். இத்­தொ­டர் மாண­வர்­களை பல்­வேறு தமிழ் இலக்­கிய வகைகளுக்கு அறி­மு­கப்­ப­டுத்­து­கிறது.

இளம் எழுத்­தா­ளர் வட்­டம்

இளம் எழுத்­தா­ளர் வட்­டம் என்­பது தமிழ் மொழி சேவை­க­ளின் கீழ் அடங்­கும் ஒரு கற்­றல் சங்­கம். சிங்­கப்­பூர் தமிழ் எழுத்­தா­ளர்­க­ளாக இளை­ஞர்­களை ஊக்­கு­விப்­ப­தற்கு ஆத­ரிப்­ப­தற்­கும் இது உத­வு­கிறது.

அதன் வரு­டாந்­திர முதன்மை நிகழ்வு சிங்க்­போவ்­ரிமோ - இது தமிழ் மொழி விழா­வின் ஒரு பகு­தி­யாக ஃபேஸ்­புக்­கில் ஒரு மாத காலம் நடை­பெ­றும் தின­சரி கவிதை எழு­தும் போட்டி.

பெரி­ய­வர்­க­ளுக்­கான வாசிப்­புக் குழு

வாச­கர் வட்­டம், கவி­மாலை, மாயா இலக்­கிய வட்­டம், சங்­கப்­ப­லகை, கதைக்­க­ளம்.

கலா­சார மரபு

கலந்­து­ரை­யா­டல் தொடர்

இந்த கலந்­து­ரை­யா­டல் திட்­டம் தமிழ் கலா­சா­ரம், மர­பு­கள் மற்­றும் கலை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டது. இந்தத் தலைப்­பு­களில் தங்­கள் அறி­வைப் பகிர்ந்து கொள்ள நிபு­ணர்­கள் அழைக்­கப்­

ப­டு­கி­றார்­கள்.

சிங்­கப்­பூர் நூலா­சி­ரி­யர் தொடர்

சிங்­கப்­பூ­ரின் இலக்­கிய வளர்ச்­சிக்குப் பங்­க­ளித்த சிங்­கப்­பூர் நூலா­சி­ரி­யர்­க­ளைக் கொண்­டா­டும்

திட்­டம்.