ஒதுக்குவதும் ஒடுக்குவதும் ஓயவில்லை; சாதிக்கொடுமை இன்னும் சாகவில்லை

பெத்­தண்ணா போன்­றோரை குப்பை, கழி­வு­களை அகற்­று­வோர் என இந்­தி­யா­வில் அழைக்­கின்­ற­னர். நக­ரங்­க­ளி­லும் கிரா­மங்­க­ளி­லும் கழி­வ­றை­கள், சாக்­க­டை­களை துடைப்­பங்­க­ளு­டன் கழி­வு­க­ளை­யும் பல சம­யங்­களில் வெறும் கைக­ளை­யும் கொண்டு சுத்­தம் செய்­யும் ஆட­வர், பெண்­டி­ரைக் காண­லாம்.

இவர்­கள் தெருக்­களில், சாக்­க­டை­களில், கழி­வு­நீர்த் தொட்­டி­களில், வீடு­களில், அலு­வ­ல­கங்­களில், மருத்­து­வ­

ம­னை­களில் மனி­தக்க­ழி­வு­களை அகற்­று­வதை சர்­வ­சா­தா­ர­ண­மா­கப் பார்க்­க­லாம். இவர்­களில் சிலர், பூமிக்­க­டி­யில் உள்ள கழி­வு­நீர்க் குழாய்­களில் ஏற்­பட்­டுள்ள அடைப்­பு­களை சரி­செய்ய கழுத்து வரை கழி­வு­நீ­ரில் இறங்கி வேலை செய்ய வேண்­டி­யி­ருக்­கும்.

இந்­தி­யா­வில் கழி­வு­நீரை அகற்­றும் கட்­ட­மைப்பு முழுமை பெறா­மல் இருப்­பது, வீடு­களில் கழி­வறை இல்­லா­த­தால் திறந்­த­வெ­ளி­யில் மலம் கழிப்­பது போன்­ற­வற்­றால் இவர்­க­ளின் பணி அவ­சி­ய­மா­கிறது.

இந்­தி­யா­வின் கிரா­மப்­பு­றங்­க­ளி­லும் சேரிப் பகு­தி­க­ளி­லும் வாழும் மக்­களில் மூன்­றில் ஒரு பகு­தி­யி­னர் இயற்கை உபா­தை­க­ளி­லி­ருந்து விடு­பட தெரு ஓரங்­க­ளை­யும் திறந்­த­வெ­ளி­யை­யுமே நாடு­கின்­ற­னர்.

நகர்ப்­பு­றங்­க­ளில்­கூட கழி­வு­நீரை முறை­யாக அகற்­றும் நீர்­வ­ழிப்­பாதை

30 விழுக்­காட்டு வீடு­களில் மட்­டுமே உண்டு. இங்கு பொதுக் கழி­வ­றை­கள் தேங்கி நின்­றால்­கூட அதைச் சரி­செய்ய ஒரு­வர் தேைவ. அப்­ப­டியே கழி­வு­நீர் அகற்­றும் கட்­ட­மைப்பு இருந்­தா­லும் அது பல சம­யங்­களில் நாள்­பட்­ட­தா­க­வும் எளி­தில் நீர்­தேங்கி நிற்­கும் நிலை­யி­லும் இருக்­கும்.

பெங்­க­ளூரு போன்ற சில நக­ரங்­களில் பெரிய அள­வி­லான அடைப்­பு­களை நீக்க இயந்­திர முறை உள்­ளது. அத்­து­டன், கழி­வு­களை அகற்ற மனி­தர்­களை பயன்­ப­டுத்­து­வது தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

எனி­னும், வேக­மாக வளர்ச்சி கண்டு­ வ­ரும் சுற்­று­வட்­டா­ரங்­களில் கழி­வு­நீரை முறை­யாக அகற்­றும் வழி இல்­லா­த­தால் மனி­தக்­க­ழி­வு­களை அகற்ற, குழாய்­களில் இருக்­கும் அடைப்­பு­களை சரி­செய்ய, பலர் இன்­ன­மும் மனி­தர்­க­ளையே அழைப்­பது வழக்­க­மாக உள்­ளது.

வச­தி­குை­றந்­தோ­ரைத் தவிர பெரும்­பா­லான இந்­தி­யர்­கள் தங்­க­ளது கழி­வ­றை­களை, கழி­வு­நீர்க் குழாய்­களை சுத்­தம் செய்ய யாரா­வது ஒரு­வ­ரைத் ேதடு­வ­து­தான் வழக்­கம். சாதி அடிப்­ப­டை­யி­லான சமு­தா­யத்­தில் தலித்­து­கள் என அழைக்­கப்­ப­டு­வோ­ரில் ஒரு பிரி­

வி­னரே இந்­தப் பணிகளை செய்யுமாறு

கட்­டா­யப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னர்.

பல நூற்­றாண்டு கால­மாக இருந்­து­ வ­ரும் இந்த ஒடுக்­கு­மு­றையை நிவர்த்தி செய்ய இந்­தி­யா­வில் சாதிப் பாகு­பாடு குற்­ற­மாக்­கப்­பட்­டுள்­ளது. அத்­து­டன் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்கை எடுக்­கும் வழி­மு­றை­யும் வகுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வின் தற்போதைய அதி­பர் ஒரு தலித் என்­பது இங்கு நினை­வு­

கூ­ரத்­தக்­கது.

ஆனால், இப்­பொ­ழு­தும் இந்­தி­யா­வில் தலித்­து­கள் பெரும்பாலும் ஏழை­க­ளா­க­வும் சமு­தா­யத்­தில் ஒதுக்கி வைக்­கப்­பட்­ட­வர்­க­ளா­க­வும் உள்­ள­னர். இதில் மிக­வும் ஒடுக்­கப்­பட்ட பிரி­வைச் சேர்ந்­த­வர்­கள் கழி­வு­நீர்க் குழாய்­களை சுத்­தம் செய்­யும் தொழி­லுக்­குத் தள்­ளப்­ப­டு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!