எஸ்பிஎச் ஊடகப் பிரிவு லாப நோக்கற்ற நிறுவனமாக உருமாற்றம்

பங்­குச் சந்­தை­யில் இடம்­பெற்­றுள்ள நிறு­வ­ன­மான எஸ்­பி­எச் நிறு­வ­னம், கடந்த ஆண்­டு­களில் ஊடக விளம்­பர வரு­மா­னம் பெரு­ம­ளவு குறைந்­த­தால் தனது ஊட­கத் தொழிலை தனி­யா­கப் பிரிக்­கப்­போ­வ­தாக இம்­மா­தத் தொடக்­கத்­தில் அறி­வித்­தது. எஸ்­பி­எச் ஊட­கத் தொழி­லு­டன் நிலச்சொத்து உள்­ளிட்ட வேறு தொழில்­க­ளி­லும் முத­லீடு செய்­துள்­ளது.

புதிய நிறு­வ­ன­மான எஸ்­பி­எச் ஊடக அற­நி­று­வ­னம் என்ற அந்த புதிய நிறு­வ­னத்­துக்கு முன்­னாள் அமைச்­சர் கோ பூன் வான் தலைமை தாங்­கு­வார்.

இடைக்­கா­லத் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யாக எஸ்­பி­எச் நிறு­வ­னத்­தின் முன்­னாள் துணைத் தலைமை நிர்­வா­கி­யாக இருந்­த­வ­ரும் நீண்ட கால பத்­தி­ரிகை அனு­ப­வம் உள்­ள­வ­ரு­மான திரு பேட்­ரிக் டேனி­யல் பணி­யாற்­று­வார்.

பட்­டி­யி­லி­டப்­பட்ட நிறு­வ­னத்­துக்­கு­ரிய கட்­டுப்­பா­டு­கள் இந்­தப் புதிய நிறு­வ­னத்­திற்கு இராது.

பட்­டி­ய­லி­டப்­பட்ட நிறு­வ­ன­மாக இருந்­த­போது, எஸ்­பி­எச் ஊட­கங்­கள் லாபம் ஈட்ட வேண்­டும் என்று பங்­கு­தா­ரர்­கள் எதிர்­பார்ப்­பார்­கள். லாபத்­தில் அவர்­க­ளுக்கு பங்கு அளிக்­கப்­படும். இனி­மேல் இந்த நெருக்­கடி இருக்­காது.

புதிய நிறு­வ­னம் தமிழ் முரசு உள்­ளிட்ட எஸ்­பி­எச் செய்­தித்­தாள்­களின் மின்­னி­லக்க மய­மாக்­க­லில் அதிக கவ­னம் செலுத்­தும். மின்­னி­லக்க உரு­மாற்­றம், திறன் வளர்ச்சி போன்ற ஊடக முயற்­சி­களுக்கு அர­சாங்­கத்­தின் உத­வி­யை­யும் வேறு நிதி­யு­த­வி­க­ளை­யும் பெற­மு­டி­யும். இதே­போன்ற நிதி­யு­த­வி­யைப் பெற்று செயல்­பட்டு வரும் சிங்­கப்­பூ­ரின் முக்­கிய ஒளி/ஒலி­பரப்பு ஊட­கம் மீடி­யா­கார்ப்.

எனி­னும், இந்­தப் புதிய நிறு­வ­னம் செயல்­பட வரு­வாய் ஈட்ட வேண்­டும். விளம்­ப­ரம் தேவை. சந்தா தேவை. வாச­கர்­க­ளின் பெருக்­க­மும் கட்­டா­யம் தேவை. நிதி­யு­தவி கூடு­தல் பாது­காப்பு.

புதிய நிறு­வ­னத்­தில் முக்­கிய பங்­கு­தா­ரர்­கள் நிறு­வன இயக்­கு­நர்­கள், ஊழி­யர்­களை நிய­மிப்­பது தொடர்­பாக எடுக்­கப்­படும் தீர்­மா­னங்­களில் சிறப்பு அதி­கா­ரம் பெற்­றி­ருப்­பர். இதன்­மூ­லம் சிங்­கப்­பூ­ரின் நிலைத்­தன்மை, வளப்­பம் ஆகி­ய­வற்­றில் கடப்­பாடு கொண்­ட­வர்­க­ளின் கைகளில் பொறுப்பு இருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

வாச­கர்­க­ளின் மாறி­வ­ரும் தேவை­க­ளுக்கு ஏற்ப மின்­னி­லக்க உரு­மாற்­றம், திறன் வளர்ச்சி போன்ற ஊடக முயற்­சி­க­ளுக்கு அர­சின் உதவி பெறு­தற்கு தடை இராது.

எஸ்­பி­எச்­சின் சீர­மைப்­புப் பரிந்­து­ரையை அர­சாங்­கம் ஏற்­றுக்­கொண்­டது. இதற்­கான தேவை, கார­ணங்­களை விளக்கி தொடர்பு, தக­வல் முன்­னாள் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் சென்ற திங்­கள்­கி­ழமை நாடா­ளு­மன்­றத்­தில் அமைச்­சர்­நிலை அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டார்.

உள்­ளூர் செய்தி நிறு­வ­னங்­கள் பொரு­ளி­யல் அமைப்­பு­கள் மட்­டு­மல்ல, அவை நமது பண்­புெ­ந­றி­களைப் பிர­தி­ப­லிக்­கும், போற்­று­தற்­கு­ரிய அமைப்­பு­கள் என்றார் அவர்.

இந்த ஊடக நிறு­வ­னத்­துக்கு தொடக்க நிதி­யாக $80 மில்­லி­யன் ரொக்­கத்­தை­யும் $30 மில்­லி­யன் பெறு­மா­ன­முள்ள பங்­கு­க­ளை­யும் வழங்­கும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

எஸ்­பி­எச் நிறு­வ­னத்­தின் ஏறக்­கு­றைய 2,500 ஊட­கத்­துறை ஊழி­யர்­கள் எஸ்­பி­எச் ஊடக அற­நி­று­வ­னத்­துக்கு மாறு­வார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 

எஸ்­பி­எச் ஊடக அகா­டமி

முதல் தர மின்­னி­லக்க தொழில்­நுட்ப குழு­வி­னரை உரு­வாக்க எஸ்­பி­எச் ஊடக அகாடமி அமைக்­கப்­படும். அத்­து­டன், செய்தி, மின்­னி­லக்­கத் துறை­களில் கல்வி கற்பதற்கு எஸ்­பி­எச் கல்வி உப­கா­ரச் சம்­ப­ளங்­கள் வழங்­கப்­படும். தற்­போ­தைய செய்­தி­யா­ளர்­க­ளுக்­கும் மேற்­ப­டிப்­புக்­கும் உல­கத்­தர ஊட­கங்­களில் வேலைப் பயிற்­சித் திட்­டங்­களும் வழங்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!