பாதுகாப்புடன் வேலை செய்வதால் ஊழியர்களுக்கு அச்சமில்லை என்றார் கடந்த 30 ஆண்டுகளாக சாங்கி விமான நிலையத்தில் வாடிக்கையாளர் சேவையில் பணிபுரியும் 55 வயது திரு சி. சுகுமாறன்.
"மக்களிடம் தொடர்புகொள்ளும் அனைத்து ஊழியர்களும் முழு பாதுகாப்பு சாதனங்களை அணிவது கட்டாயம். மேலும் 14 நாட்களுக்கு ஒருமுறை கொவிட்-19 பரிசோதனையை அனைவரும் மேற்கொள்வது அவசியம்," என்றார் கிட்டத்தட்ட 100 ஊழியர்களின் பராமரிப்பை கவனிக்கும் மேற்பார்வையாளர் திரு சுகுமாறன்.
"மே 26ஆம் தேதி வரை, பயணிகள், ஊழியர்கள் தவிர்த்து பொதுமக்களுக்கு விமான நிலையத்திற்குள் அனுமதி இல்லை. விமானப் பயணங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்பதில் சிரமமில்லை. தற்போது விமான நிலையத்தின் உணவங்காடியில் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பொதுமக்களிடம் தொடர்புகொள்ள வாய்ப்பில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக இருப்பதால் விரைவில் மீண்டு வருவோம் என்று நம்புகிறோம்," என்றார் சுகுமாறன்.
முன்களத்தில் பணியாற்றும் அனைத்து விமான நிலைய ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். சுகுமாறனும் பிப்ரவரி மாதமே தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தற்போது முனையங்கள் 1, 3 ல் மட்டுமே விமான சேவைகள் உண்டு. முனையங்கள் 2, 4ல் சேவை இல்லை.

