'பயமில்லை, பணிகள் தொடர்கின்றன'

'பயமில்லை, பணிகள் தொடர்கின்றன'

1 mins read

கடந்த 14 ஆண்டுகளாக சாங்கி விமான நிலையத்தில் புதுப்பிப்புப் பணிகள் செய்து வரும் வெளிநாட்டு ஊழியர் 44 வயது திரு லட்சுமணன் முரளிதரன். முனையம் 2ல் பணியாற்றும் அவர் வேலையில் எந்த மாற்றமும் இல்லை என்று குறிப்பிட்டார்.

"வழக்கம்போல முகக்கவசம், 'சேஃப் எண்டரி'யில் பதிவு செய்வது, உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பது என்று பாதுகாப்புடன் வேலை செய்கிறோம். தினமும் காலையில் வேலை தொடங்குவது முன் பாதுகாப்பு விதிமுறைகள், கவனத்தில் கொள்ளவேண்டிய குறிப்புகள் ஆகியவை ஊழியர்களுக்கு வலியுறுத்தப்படும். விடுதியில் சமைத்து உணவு எடுத்து வருகிறோம். போய் வருவதற்கு நிறுவனம் சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்துள்ளது. பயம் எதுவும் இல்லை," என்றார் பொங்கோல் பகுதியில் உள்ள 'எஸ்11' விடுதியில் தங்கும் லட்சுமணன்.

செய்தி: எஸ்.வெங்­க­டே­‌ஷ்­வ­ரன்