அனுமதியின்றி புகைப்படப் பயன்பாடு: மன்னிப்புக் கேட்டது மக்கள் கழகம்

அனுமதியின்றி புகைப்படப் பயன்பாடு: மன்னிப்புக் கேட்டது மக்கள் கழகம்

2 mins read

நோன்­புப் பெரு­நாள் அலங்­கா­ரத்­தில் ஒரு மலாய்/முஸ்­லிம் தம்­பதியின் திரு­ம­ணப் படத்­தை அனுமதியின்றிப் பயன்­ப­டுத்­தி­ய­தற்­காக மக்­கள் கழ­கம் மன்­னிப்­புக் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

தியோங் பாரு வீட­மைப்­புக் கழக குடி­யி­ருப்பு வட்­டா­ரத்­தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த அந்த அலங்­கா­ரத்தை மக்­கள் கழ­கம் அகற்­றி­விட்­டது.

ராடின் மாஸ் குழுத்­தொ­கு­தி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மெல்­வின் யோங் குடி­யி­ருப்­பா­ளர்களுக்கு நோன்­புப் பெரு­நாள் வாழ்த்­துக்­கூறும் பதா­கை­யில், மலாய் பாரம்­ப­ரிய உடை அணிந்த தம்­பதியருடன், திரு­மண சின்­னங்­களும் இருந்த அப்­ப­டம் இடம்­பெற்­றி­ருந்தது. ஓர் அலங்­கா­ரப் பகு­தி­யில் இந்­தப் பதாகை வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இது குறித்த இன்ஸ்­ட­கி­ரா­மில் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்ற பல செய்­தி­களை 10,000க்கும் அதி­க­மா­னோர் பார்­வை­யிட்­ட­னர். அதில், தமது திரு­ம­ணப் படம் அலங்­கா­ரத்­தில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தமது நண்­பர்­கள் இரு­வர் தமக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­ய­தாக கூறி­யி­ருந்­தார் திரு­மதி சாரா பாஹி­ராப், 30.

அந்­தப் படத்­தைப் பயன்­ப­டுத்த தம்­மி­டமோ, தமது கண­வ­ரி­டமோ அல்­லது புகைப்­ப­டக்­கா­ர­ரி­டமோ அனு­மதி கோரப்­ப­ட­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார். அவரது திரு­ம­ணம் 2017ல் நடந்­தது.

தமது அந்­த­ரங்­கத்தை ஊடு­ரு­வி­யது ஒரு பக்­கம் இருக்க, தமது படம் கேளிக்­கைக்­கா­வும் பொழுது போக்­கிற்­கா­க­வும் பயன்­ப­டுத்­தப்­பட்­டதே தம்­மைக் கோபப்­ப­டுத்­தி­ய­தாக தொடர்­புத்­ து­றை­யில் பணி­பு­ரி­யும் திரு­மதி சாரா ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னார்.

"அவர்­கள் அந்­தப் படத்­தைப் பெரி­தாக்கி, எங்­கள் முகங்­க­ளைத் தனி­யாக வெட்­டி­யெ­டுத்து, அந்­தப் படத்­து­டன் தொடர்பே இல்­லாத நோன்­புப் பெரு­நாள் கொண்­டாட்­டத்­திற்­குப் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர்," என்­றார் அவர்.

வராபி எண்­டர்­பி­ரைஸ் (கலைக்­கூ­டம்) என்ற நிறு­வ­னத்தை அந்த அலங்­கா­ரத்­தைச் செய்ய ராடின் மாஸ் தொகுதி அலு­வ­ல­கம் ஈடு­ப­டுத்­தி­யது. நிறு­வ­னம் இணை­யத்­தி­லி­ருந்து அந்­தப் படத்­தைப் பதி­வி­றக்கி பயன்­ப­டுத்­தி­யுள்­ளது. பதாகை உள்­ளிட்ட அலங்­கா­ரத்தை ராடின் மாஸ் தொகுதி அலு­வ­ல­கம் வைத்­தது என்று மக்­கள் கழ­கத்­தின் அறிக்கை விளக்­கம் அளித்­தது.

இது நடந்­தி­ருக்­கக்­கூ­டாது. நிறு­வ­னமோ, ராடின் மாஸ் அலு­வ­ல­கமோ படத்­தைப் பயன்­ப­டுத்த அனு­மதி பெற­வில்லை. இது நடை­முறை கொள்­கை­க­ளுக்கு எதி­ரா­னது. இது ­கு­றித்து மேல் ­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அது கூறி­யது.

மேலும், கலா­சா­ரங்­க­ளைப் புரிந்து, உணர்­வு­க­ளுக்கு மதிப்­புக்­கொ­டுக்க தமது ஊழி­யர்­கள், ஈடு­படுத்­தப்­படும் வெளி­நி­று­வ­னங்களுக்கு வழி­காட்ட நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்­றும் கழ­கம் கூறியது.

இது­கு­றித்து தஞ்­சோங் பகார் நகர மன்­றத்­துக்­கும் மக்­கள் கழக தலைமை நிர்­வாக இயக்­கு­நர் திரு லிம் ஹோக் யுவுக்கும் வெள்­ளிக்­கி­ழமை மின்­னஞ்­சல் அனுப்­பி­ய­தாகக் கூறி­னார் திரு­மதி சாரா.

திரு லிம் மன்­னிப்­புக் கேட்டு மின்­னஞ்­சல் அனுப்­பி­ய­தா­க­வும் கலா­சார, சமூக, இளை­யர் துணை­அமைச்­ச­ரும் இரண்­டா­வது சட்ட அமைச்­ச­ரு­மான எட்­வின் டோங் தனிப்­பட்ட செய்தி மூலம் மன்­னிப்­புக்கேட்­ட­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். திரு டோங், மக்­கள் கழ­கத்­தின் துணை தலை­வ­ரு­மா­வார்.

இதி­லி­ருந்து பாடம் கற்­றுக்­கொள்­ளப்­படும் என்று நம்­பு­வ­தாக சாரா கூறி­னார்.