ஒரே திட்டம்வழி இரு வேறு பிரிவினருக்கு ஆதரவுக்கரம்

இந்து இளங்­கோ­வன்

உண­வ­கங்­க­ளுக்­குச் சென்று சாப்­பி­டும் வழக்­கம் சில கால­மா­கவே நின்­று­போ­னது. உணவு விநி­யோ­கமே பெரி­தும் நாடப்­ப­டு­கிறது. இந்த மாற்­றத்­தால் உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். பல உண­வங்­காடி­கள் மின்­னி­லக்க முறைக்கு மாறி, கிரு­மிச் சூழல் மாற்­றங்­களை ஏற்­றி­ருந்­தா­லும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் விகி­தம், வியா­பா­ரம் இரண்­டும் கடும் சரி­வைக் கண்­டுள்­ளன.

அமோய் ஸ்தி­ரீட் உண­வங்­காடி­யில் கடை வைத்­தி­ருக்­கும் 65 வயது திரு­மதி சல்மா, கடந்த 11 ஆண்­டு­க­ளாக தம் கடைக்கு வரும் அலு­வ­ல­கக் கூட்­டத்­தி­ன­ருக்­காக சுவை­யான உணவை விற்­பனை செய்து வந்­தார். கிரு­மிச் சூழல் துவங்­கி­ய­தி­லி­ருந்து 70% வாடிக்­கை­யா­ளர்­களை இழந்­து­விட்­ட­தாக அவர் தெரி­வித்­தார். மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தில் அமைந்­துள்ள இவ­ரது கடை, உணவு விநி­யோ­கச் சேவை­யை­யும் வழங்­கு­வ­தில்லை.

அண்­மை­யில் மேலும் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்ள கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளால் வியா­பா­ரம் மேலும் கடு­மை­யான வீழ்ச்சி கண்­டி­ருப்­ப­தாக அவர் கூறி­னார். இருப்­பி­னும், திரு­மதி சல்மா ஒவ்­வொரு நாளும் தமது கடையை நடத்­தி­வ­ரு­கி­றார்.

சிபிடி உண­வங்­கா­டி­க­ளைத் தவிர, வெளி­நாட்டு ஊழி­யர் தங்கு­வி­டு­தி­வா­சி­க­ளை­யும் இந்­தக் கிரு­மித்­தொற்­றுச் சூழல் விட்டு வைக்­க­வில்லை. பல­த­ரப்­பட்ட கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளால் அவர்­க­ளது நட­மாட்­டச் சுதந்­தி­ரம் கணி­ச­மா­கக் குறைந்­துள்­ளது.

இந்த இரு குழுக்­க­ளுக்­கும் ஒரே நேரத்­தில் ஆத­ரவு வழங்­கும் அறப்­பணி­தான் 'விஇட்' (WeEat). சிங்­கப்­பூ­ரர்­க­ளி­ட­மி­ருந்து நன்­கொடை திரட்டி, அப்­ப­ணத்­தில் உண­வங்­கா­டி­க­ளி­லி­ருந்து உணவை வாங்கி, அதை வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்கு விநி­யோ­கம் செய்­யும் திட்­ட­மா­கும். கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரர்­களுக்கு வரு­மா­ன ரீதி­யாக உத­வ­வும் மன ரீதி­யாக ஆத­ரவு வழங்­க­வும் தொடங்­கப்­பட்ட முயற்­சி­தான் இது. இதை உள்­ளூர்க் கலை­ஞர் ஷபீ­ரின் 'ஷபீர் மியூ­சிக் ஏஷியா', கொவிட்-19 வெளி­நாட்டு ஊழி­யர் ஆத­ர­வுக் கூட்­டணி அமைப்பு இரண்­டும் இணைந்து '24 நியூஸ் ஏஷியா'வின் ஆத­ர­வோடு நடத்­தி­வரு­கின்­றன.

தற்­போ­தைய கட்­டுப்­பா­டு­கள் வய­தான ஓர் உண­வங்­கா­டிக் கடைக்­கா­ரரை எவ்­வாறு பாதித்­துள்­ளது என்­ப­தைப் பற்­றிய செய்தி ஒன்­றைப் படித்த ஷபீர், பாதிப்­புக்­குள்­ளா­கிய இத்­த­கைய கடைக்­காரர்­க­ளுக்­குக் கைகொ­டுக்­க­வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தார். 'ஷபீர் மியூ­சிக் ஏஷியா'வின் இயக்­கு­நர் திரு புவ­னின் உத­வி­யு­டன் இந்த அறப்­பணி வெற்­றி­க­ர­மாக நடந்­து­வ­ரு­கிறது.

"இந்­தக் கடி­ன­மான கால­கட்­டத்­தில் உண­வங்­கா­டிக் கடைக்­காரர்­க­ளுக்கு நிதி உதவி மட்­டும் தேவைப்­ப­டு­வ­தில்லை. தங்­க­ளது உணவை ருசிக்க மக்­கள் கூட்­டம் வரும் என்ற நம்­பிக்­கை­யும் அதி­கம் தேவைப்­ப­டு­கிறது," என்று கூறி­னார் திரு புவன். இத்­திட்­டத்­துக்­காக இணைந்த தொண்­டூ­ழி­யர்­கள், இம்­மாத முதல் வாரத்­தில் அமோய் ஸ்தி­ரீட் உண­வங்­காடி நிலை­யத்­திற்­குச் சென்று அங்­குள்ள கடைக்­கா­ரர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னர். சுமார் 170 'கோரேங் பீசாங்' பொட்­ட­லங்­களை, திரு நூர் என்­ப­வ­ரின் கடை­யி­லிருந்து வாங்கி தங்­கு­வி­டு­தி­வாசி­களுக்கு விநி­யோ­கம் செய்­த­னர் தொண்­டூ­ழி­யர்­கள்.

ஜூன் மாத இறு­திக்­குள் $10,000 திரட்­டு­வதை இலக்­கா­கக் கொண்­டுள்­ளது இந்த உத­வித் திட்­டத்­தின் ஏற்­பாட்­டுக் குழு. இது­வரை­ $2500 திரட்­டப்­பட்­டுள்­ளது. நிதி உத­விக்­கும் அப்­பால் சமூ­கத்தை ஒரு­சே­ரக் கொண்­டு­வரும் ஒரு வாய்ப்­பாக இத்­திட்­டத்­தைத் கரு­து­கிறது ஏற்­பாட்­டுக் குழு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!