தமிழ் பெண் அடையாளத்தை ஆவணப்படுத்தும் ‘தமிழச்சி’

'தமி­ழச்சி'. அவ­ளின் அடை­யா­ளம் ஒரு குறு­கிய விளக்­கத்­தில் அடங்­காது, அது விரி­வா­னது என்­பதை உணர்த்­தும் முயற்­சியே 'தமி­ழச்சி' அருங்­காட்­சி­ய­கம். இணை­யம் வழி நடை­பெ­றும் இது, சிங்­கப்­பூர் தமிழ் பெண் என்­ப­வள் யார் என்­பதை சிங்­கப்­பூர்­வாழ் சரா­சரி தமிழ் பெண்­களே கூறி நமது சிந்­த­னை­யைத் தூண்­டும் படைப்­பா­கும்.

'தமி­ழச்சி: கட்­டு­மா­னத்­தில் உள்ள, தமிழ் பெண்­ணின் இலக்­க­முறை அருங்­காட்­சி­ய­கம்' என்ற தலைப்­பைக் கொண்­டுள்ள இந்த அருங்­காட்­சி­ய­கம், 'T:>Works' நிறு­வ­னம் ஏற்­பாடு செய்­துள்ள N.O.W.2021 விழா­வின் ஒரு பகுதி­யா­னது. 'பிர­வுன் வாய்­சஸ்' நாட­கக் குழு­வால் சுவா­ர­சி­ய­மான வகை­யில் படைக்­கப்­ப­டு­கிறது.

இந்த அருங்­காட்­சி­யக உரு­வாக்­கத்­தின் ஒரு பகு­தி­யாக, 'சிங்­கப்­பூர் தமிழ் பெண்­கள்' என்ற அடை­யா­ளம் கொண்­டுள்ள 22 பெண்­க­ளு­டன் நடந்­தே­றிய தொடர் ஆலோ­சனை பட்­ட­றை­களில் சேக­ரிக்­கப்­பட்ட கருத்­து­கள், அவர்­களது வாழ்க்­கை­யில் முதன்மை பெறும் சில பொருட்­கள் ஆகி­யவை அருங்­காட்­சி­ய­கத்­தில் அங்­கம் வகிக்­கின்­றன.

சிங்­கப்­பூர் தமிழ் பெண்­க­ளின் கதை­க­ளைச் சொல்­லும் வித­மாக, 'ஸ்டிக்­கர் பொட்டு', 'தாலி', 'மஞ்­சள்', 'அலு­மி­னிய பானை', போன்ற சில பொருட்­கள் அருங்­காட்­சி­ய­கத்­தில் உள்­ளன. இவை வளர்ந்து வரும் ஒரு தமி­ழச்­சி­யின் வாழ்க்­கைப் பகுதி என்­கின்­ற­னர் அருங்­காட்­சி­ய­கக் குழு­வி­னர்.

"இந்த அருங்­காட்­சி­ய­கத்­திற்­குக் காலக்­கெ­டுவோ ஒரு முடிவோ இல்லை, இதில் சிங்­கப்­பூர் தமிழ் பெண்­க­ளின் பங்­க­ளிப்­பு­கள் தொடர்ந்து சேக­ரிக்­கப்­படும் அத­னால்­தான் இதை 'கட்­டு­மா­னத்­தில் உள்ள அருங்­காட்­சி­ய­கம்' என்று அழைக்­கி­றோம்," என்­றார் படைப்­பிற்கு கருத்­து­ரு­வாக்­கம் தந்து தொடக்கி வைத்த மேற்­பார்­வை­யா­ள­ரும் ஆராய்ச்­சி­யா­ள­ரு­மான குமாரி வித்யா சுப்­ர­ம­ணி­யம். இவ­ரு­டன் பிர­பல உள்­ளூர் நாட­கக் கலை­ஞர் கிரேஸ் கலைச்­செல்வி இயக்­கு­ந­ரா­க­வும் நாடக எழுத்­தாளர் ராஜ்­கு­மார் தியா­க­ராஜ் எழுத்­தா­ள­ரா­க­வும் இந்த அருங்­காட்­சி­ய­கத்­திற்கு மெரு­கூட்­டி­யுள்­ள­னர்.

அருங்­காட்­சி­ய­கத்­தின் பொருட்­காட்­சி­யில், திரு­மதி ஜான்­சி­ராணி தங்­க­வேல், 65, என்­ப­வ­ரின் பட்­டச் சான்­றி­த­ழும் இடம்­பெற்­றுள்­ளது. 1978ஆம் ஆண்­டில் அப்­போ­தைய நன்­யாங் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பட்­டம் பெற்ற ஜான்­சி­ராணி, அன்று சீன மொழி பல்­க­லைக்­க­ழ­க­மாக இருந்த நன்­யாங் பல்­க­லைக்­க­ழ­கம் ஆங்­கில மொழி ஊட­கப் பல்­கலைக்­க­ழ­க­மாக மாறிய போது, முதன்­மு­த­லில் சேர்ந்த மாண­வர்­களில் ஒரு­வர். அப்­பொ­ழு­தெல்­லாம் தமிழ் பெண்­கள் பட்­டம் பெறு­வ­தென்­பது அரிது. அந்த பட்­டச் சான்­றி­தழ் தமது அடை­யாளத்­தின் பெருமை என்று குறிப்­பிட்­டி­ருக்­கி­றார் தமது 52வது வய­தில் முது­கலை பட்­டம் பெற்­றுள்ள திரு­மதி ஜான்­சி­ராணி.

சிங்­கப்­பூர் தமிழ் பெண் என்­ப­வள் யார், அவள் எவ்­வித வாழ்க்கை முறை­யைக் கொண்­ட­வள் என்­பதை வெளிக்­கொ­ண­ரும் ஒரு தள­மாக இந்த அருங்­காட்­சி­ய­கம் அமை­யும் என்று நம்­பு­வ­தாக தெரி­வித்­தார் எழுத்­தா­ளர் ராஜ்­கு­மார்.

இந்த அருங்­காட்­சி­ய­கத்தை பார்­வை­யிட: https://www.notordinarywork.com/thamizhachi-by-brown-voices

செய்தி: இந்து இளங்­கோ­வன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!