மனப்போக்கை மாற்ற பல வழிகள்

சிங்­கப்­பூர் கவ­னத்­து­டன் செயல்­ப­டா­விட்­டால் இன­வா­தம், வெளி­நாட்­டி­னர் மீதான வெறுப்பு போன்­றவை வழக்­க­மா­ன­வை­யாக மாறி­வி­டும் என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் எச்­ச­ரித்­துள்­ளார்.

பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­கள் கண்­ணி­ய­மா­ன­வர்­கள். இன­வா­தத்­து­டன் தொடர்­பில்­லா­த­வர்­கள். இருப்­பி­னும் இன­வாத நெருப்பு கிள­றி­வி­டப்­ப­டு­வது தொடர்ந்­தால் நமது நிலைமை அதிக இக்­கட்­டில் சிக்­கி­வி­டும் என்ற திரு சண்­மு­கம், இந்­தப் போக்கு சரி­யல்ல என்­பதை அனைத்­துத் தரப்­பி­ன­ரும் வெளிப்­ப­டை­யா­கக் கண்­டிப்­பது அவ­சி­யம் என்­றார்.

சிங்­கப்­பூ­ரின் பல இன கலா­சா­ரத்தை மெத்­த­ன­மாக எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டாது என்று என்­பதை அண்­மைய இன­வாத சம்­ப­வங்­கள் நினை­வு­ப­டுத்­து­வ­தா­கக்­கூ­றிய வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், பல இன சமூ­கத்­தில் வாழ்­கி­றோம் என்­பதை நினை­வில் கொண்டு தொடர்ந்து நல்­லி­ணக்­கம் பேண உழைக்க வேண்­டும் என்­றார்.

இன­வா­தத்­துக்கு எதி­ரான போராட்­டம் சிக்­க­லான, கடி­ன­மான பணி. ஆனால் அதற்கு எதி­ராக கருணை, இரக்­கம், புரி­த­லு­டன் போரிட வேண்­டும் என்று 30க்கும் மேற்­பட்ட அமைப்­பு­க­ளின் சார்­பாக அண்­மை­யில் வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் சிங்­கப்­பூர் தமி­ழர் பேரவை தெரி­வித்­துள்­ளது.

கொள்கை மாற்­றம்

முனை­வர் அ.வீர­ம­ணி­யின் பரிந்­துரை சில கொள்கை மாற்­றங்­கள் வேண்­டும் என்­பது.

சிண்­டா­வில் சீன­ரும் மெண்­டாக்­கி­யில் இந்­தி­ய­ரும் சீன சங்­கத்­தில் மலாய்க்­கா­ர­ரும் பங்­காற்­றி­னால், தனித்­தனி சமூ­கங்­க­ளின் தனிப்­பட்ட பலங்­க­ளை­யும் பல­வீனங்­க­ளை­யும் மற்ற சமூ­கங்­கள் புரிந்­து­கொள்­ளும். இனங்­க­ளுக்­கி­டை­யி­லான வெறுப்­பைக் களை­வ­தில் மேல்­மட்ட நிலை­யில் இன்­னும் அதிக முயற்சி எடுக்­க­லாம்.

எடுத்­துக்­காட்­டாக இந்­தி­யா­வு­ட­னான முழு­மை­யான பொரு­ளி­யல் உடன்­பாடு (CECA) குறித்த வெறுப்­பு­ணர்­வுக்கு அது­கு­றித்த அறி­யாமையே கார­ணம். உல­க­ளா­விய திற­னா­ளர்­களை பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் வேலைக்கு அமர்த்தி அவர்­களை இங்கே நிலைப்­ப­டுத்­தி­யுள்­ளன. இத­னால் சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லுக்கு லாபம். அவர்­களை விரட்­டு­வது இந்­நாட்­டுக்கு நஷ்­டம் என்­பது தெளி­வாக விளக்­கப்­பட வேண்­டும்," என்­றார் அவர்.

சம­ர­சம் மாயம் செய்­யும்

"இத்­த­கைய பிரச்­சினை எல்­லாக் காலத்­தி­லும் இருக்­கவே செய்­யும். நான் படித்த காலத்­தில் பல­த­ரப்­பட்ட அடை­மொ­ழி­க­ளால் கேலி செய்­வார்­கள். இது புரிந்­து­ணர்வு இல்­லா­மல் செய்­யப்­படும் செயல். புரிந்­து­ணர்­வை­யும் விழிப்­பு­ணர்­வை­யும் ஏற்­ப­டுத்­து­கி­றோம் என்­பது எப்­படி அணு­கு­வது என்­ப­தைப் பொறுத்து," என்­றார் 25 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக அடித்­தள அமைப்­பு­களில் பணி­யாற்றி வரும் திரு. திரு­நா­வுக்­க­ரசு.

நேரடி தொடர்பு, உற­வா­டல்­களை அதி­க­ரிப்­ப­தன் மூலம் பிரச்­சி­னை­க­ளைத் தவிர்க்­க­லாம் என்­றார் அவர்.

முத­லில் பேசித் தீர்க்க முயற்சி செய்ய வேண்­டும். அப்­படி முடி­யா­த­போது, சமூக சம­ரச மன்­றத்தை நாட­லாம். $5.00 தான் கட்ட வேண்­டும். இது தனிப்­பட்ட முறை­யில் நடை­பெ­றும் பஞ்­சா­யத்­தா­கும். பெரும் பணம் செல­வ­ழித்து வழக்­க­றி­ஞர், நீதி­மன்­றம் என்று செல்ல வேண்­டி­ய­தில்லை. வெளி­யில் தெரி­யா­மல், தனி அறைக்­குள் பிரச்­சி­னை­யைத் தீர்த்­து­வி­ட­லாம்.

உல­கத்­தி­லேயே சம­சர மைய­மாக சிங்­கப்­பூர் உள்­ளது. சம­ச­ரப் பேச்­சின் தாக்­கம் குறித்து பல­ருக்­கும் இன்­னும் தெரி­ய­வில்லை என்ற அவர், சமூக மன்­றங்­களில் தற்­போது சம­ரச மன்­றங்­கள் திறக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் திருநாவுக்கரசு கூறி­னார்.

இன, மத வேறு­பா­டு­களும் புரிந்­து­ணர்­வின்­மை­யும் எப்­போ­தும் இருக்­கும். அதை ஒரு சமூ­கம் எவ்­வாறு கையாள்­கிறது என்­ப­தைப் பொறுத்த அதன் பாதிப்­பின் அளவு இருக்­கிறது. சிங்­கப்­பூ­ரில் வசிப்­ப­வர்­கள் அதிர்ஷ்­டம் செய்­த­வர்­கள் என்­றார். இங்கு சட்­டப் பாது­காப்பு உள்­ளது. பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்­கான வழி­மு­றை­கள் உள்­ளன என்று குறிப்­பிட்­டார் டாக்­டர் சீதா.

தொடர் உரை­யா­டல் தேவை

கடந்த 20 ஆண்­டு­க­ளாக மன­நல ஆலோ­சனை வழங்­கி­வ­ரும் திரு­வாட்டி ‌‌ஷர்­மினி என். ராமச்­சந்­திரா, அர­சாங்­கம், பொது, தனியார் துறை என அனை­வ­ரும் இணைந்தே இன­வா­தத்­திற்­கான தீர்­வு­க­ளைக் கண்­ட­றி­ய­மு­டி­யும் என்­றார்.

நோய்ப் பர­வ­லுக்கு எதி­ரான இன­வா­தத்தை எதிர்­கொள்­ள­வும் அமைச்­சு­கள் நிலைப் பணிக்­குழு ஏற்­ப­டுத்­தப்­பட்டு இப்­பி­ரச்­சி­னை­யைக் களைய வரை­ய­ரை­க­ளை­யும் திட்­டப்­ப­ணி­யை­யும் வெளி­யி­ட­லாம் என்று ஷர்­மினி பரிந்­து­ரைத்­தார்.

நிபு­ணர்­கள், இதர பங்­கு­தா­ரர்­களை உள்­ள­டக்­கிய குழு­வாக அது இருக்­க­லாம் என்­றும் சொன்­னார். மதுப் பழக்­கம், போதைப் புழக்­கம், சூதாட்­டம், குடும்ப வன்­முறை, மக­ளிர் பாது­காப்பு போன்­ற­வற்­றுக்­காக பல தரப்­பி­லும் உரை­யா­ட­லுக்­கும் ஆத­ர­வுக் குழுக்­களும் உள்ள நிலை­யில் இன­வா­தத்­திற்கு எதி­ரா­கப் பாது­காப்பை நிலை­நாட்ட ஆத­ர­வுக் குழுவோ, நிரந்­தர தொடர் உரை­யா­டல் தளமோ தேவை என்­றார்.

இன­வா­தத்­துக்கு எதி­ரான தனது நிலைப்­பாட்டை அண்­மை­யில் உறு­திப்­ப­டுத்­தி­ய கல்வி அமைச்சு, இன­வா­தச் செயல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு ஆலோ­சனை தரப்­படும்; அவர்­கள் மீது ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் கூறி­யது.

எவரும் விதிவிலக்கல்ல

இன­வா­தச் செய­லால் பாதிக்­கப்­ப­டு­ப­வர் சிறு­பான்­மை­யி­னர் மட்­டும்­தான் என்ற பொது­வான முடி­வோடு செயல்­ப­டக்­கூ­டாது என்றார் மருந்­த­கத் துறை­யில் பணி­யாற்­றும் குமாரி ரஞ்­சிதா சுப்­ர­மணி­யம், 38. தமது அண்டை வீட்டு சீனர், பொது போக்­கு­வரத்­தில் இந்­தி­யர்­க­ளால் கேலி செய்­யப்­பட்ட சம்­ப­வத்தை பகிர்ந்­த அவர், அந்­தச் சீன மாது தகாத வார்த்­தை­க­ளா­லும் கைய­சை­வு­க­ளா­லும் மோச­மான கேலிக்­குள்­ளா­னார் என்று கூறினார்.

"சிறு­பான்­மை­யி­னர் என்ற முறை­யில் நமக்கு ஏற்­படும் பாத­கங்­களை மட்­டுமே பேசு­வதை விட்டு, நாமும் மற்ற இனத்­த­வரை அர­வ­ணைத்து, ஏற்று, மதித்து வாழ­வேண்­டும். நாம் கொடுக்­கும் மரி­யா­தையே அவர்­களை நம்­மீது அதி­க­ள­வில் மரி­யாதை செலுத்த வழி­வ­குக்­கும். இதுவே சமூ­கப் பிணைப்­புக்­கும் நல்­லி­ணக்­கத்­திற்­கும் நாம் ஆற்­றும் சிறு பங்கு," என்­றார் குமாரி ரஞ்­சிதா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!