இனவாதத்துக்கு எதிரான சட்டங்கள்

 சமய, இன உணர்­வு­க­ளைக் காயப்­ப­டுத்­தும் வார்த்­தை­களை வெளிப்­ப­டுத்­து­வது குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 298 சட்­டப்­படி குற்­றம்.

 வெவ்­வேறு இனங்­க­ளுக்­கும் சம­யங்­க­ளுக்­கும் மத்­தி­யில் விரோத உணர்வை ஏற்­ப­டுத்­து­வதும் நல்­லி­ணக்­கத்­திற்கு எதி­ரான செயல்­களும் பிரிவு 298ஏ சட்­டத்­தின்­படி குற்­ற­மா­கும்.

இந்­தப் பிரி­வு­க­ளின்­படி அதி­க­பட்­ச­மாக 3 ஆண்டு சிறை தண்­ட­னையோ அப­ரா­தமோ அல்­லது இரண்­டுமோ விதிக்­கப்­பட்­ட­லாம்.

 அண்­மைய தண்­ட­னை­களில் இந்­தச் சட்­டத்­தின்­கீழ் $3,000 முதல் $4,000 வரை அப­ரா­தம் அல்­லது மூன்று முதல் எட்டு வாரச் சிறை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

 இவற்­றைப் போன்றே சீர்குலைவுச் சட்­ட­மும் இன­வா­தத்­திற்கு எதி­ராக தனி­ந­பர்­க­ளைப் பாது­காக்­கிறது.

 சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே வெவ்­வேறு இன, சமூ­கத்­தி­ன­ரி­டையே வெறுப்­பு­ணர்­வை­யும் சண்­டை­யை­யும் மூட்­டி­னால் அது குற்­றம் என்று இச்­சட்­டத்­தின்­கீழ் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதோடு இன நல்­லி­ணக்­கச் சட்­டத்­தின்­கீழ், எந்த சமய குழு­வையோ தலத்­தையோ இன­வா­தச் செய­லுக்கு உந்­து­தல் தரும் எந்த தனி­ந­ப­ருக்கு எதிராகவோ அமைச்­சர் தடுப்பு ஆணை பிறப்­பிக்­க­லாம்.

இத்­த­கைய சட்­டத்­திட்­டங்­கள் இன­வா­தத்­திற்கு எதி­ராக தடுப்பு அரணாக இருந்­தா­லும் சட்­டம் இயற்றி இன­வா­தத்­தைத் தடுப்­பது என்­றில்­லா­மல் அதை தணிக்க கல்வி மூலமே செயல்பட வேண்­டும் என்­றார் ஃபீனிக்ஸ் சட்ட நிறு­வ­னத்­தின் வழக்­க­றி­ஞர் திரு என். திவா­னன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!