இந்திய சமூகம் அக்கறை கொள்ள வேண்டிய அம்சங்கள் மனநலம், மின்னிலக்க அறிவு, பெண்கள் முன்னேற்றம்

இந்திய சமூகம் அக்கறை கொள்ள வேண்டிய அம்சங்கள் மனநலம், மின்னிலக்க அறிவு, பெண்கள் முன்னேற்றம்

3 mins read

பெருந்­தொற்­றி­லி­ருந்து மீண்டு வரும் நிலை­யில், சிங்­கப்­பூர் கவ­னம் செலுத்த வேண்­டிய முக்­கிய விஷ­யங்­க­ளாக மன­ந­லம், மின்­னி­லக்க அறிவு ஆகி­ய­வற்­றைக் குறிப்­பிட்­டார் அமைச்­சர் இந்­தி­ராணி. இந்­திய சமூ­க­மும் இவற்­றில் அக்­கறை காட்­ட­வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

"பலர், குறிப்­பாக குறைந்த வரு­மா­னம் உள்­ள­வர்­கள் வீட்­டி­லேயே இருக்க வேண்­டிய நிலை­யில் மன­ந­லம் பாதிக்க அதிக வாய்ப்­புள்­ளது. சிறிய வீட்­டில் எந்­நே­ர­மும் ஒன்­றாக இருக்­கும்­போது குடும்ப வன்­முறை அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது. குடும்ப வன்­மு­றைக்கு உள்­ளா­கும் பெண்­களுக்கு வெளியே செல்ல முடி­யாத நிலை­யில், மற்­ற­வர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்ள இய­லா­த­போது இது ஒரு பிரச்­சினை. சிக்­கல்­க­ளுள்ள பின்­ன­ணி­யி­லி­ருந்து வரும் பிள்ளை ­க­ளுக்­கும் இச்­சூ­ழல் பிரச்­சி­னை­யா­கும்.

"கடந்த காலங்­களில், குறைந்­த­பட்­சம் வெளி­யில் செல்­ல­லாம். மனதை வருத்­தும் எந்­த­வொரு விஷ­யத்­திற்­கும் வடி­கா­லாக ஏதா­வது ஓரி­டம் இருக்­கும்.

"இப்­போது வீட்­டி­லேயே இருக்­கும்­போது எல்­லா­வற்­றை­யும் வீட்டில் இருப்­ப­வர்­கள் மீதே கொட்­டித்­தீர்க்க வேண்­டி­யுள்­ளது. முன்­னர் பொது­வாக வார இறுதி நாட்­களில், பொது விடு­மு­றை­யில் குடும்ப வன்­முறை அதி­க­ரிப்பதாக புள்ளி விவரங்கள் காட்டின. இப்­போது வீட்­டி­லி­ருந்தே வேலை செய்ய வேண்­டி­ய­நிலை.

"பாதிப்­புக்­குள்­ளா­கக்­கூ­டி­ய­வர்­கள், குடும்ப வன்­மு­றைக்கு உள்­ளா­கக் கூடி­ய­வர்­க­ளுக்கு அப்­பால் பொது­வா­கவே எந்த வரு­மான வரம்­பில் இருந்­தா­லும், பல­ருக்­கும் வெளியே சென்று விரும்­பி­ய­வற்றைச் செய்ய முடி­யா­மல் வீட்­டி­லேயே இருப்­பது பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. குறிப்­பாக தனி­யாக வசிப்­ப­வர்­க­ளுக்கு.

எனவே மன­ந­லம் என்­பது கவ­னிக்க வேண்­டிய முக்­கி­ய­மான பிரச்­சினை என்று நான் நினைக்­கி­றேன்," என்­றார் அமைச்­சர் இந்தி­ராணி ராஜா.

ஒட்­டு­மொத்­த­மாக, சிங்­கப்­பூ­ரில் ஏழு பேரில் ஒரு­வ­ருக்கு அவர்­களது வாழ்­நா­ளில் மன­ந­லப் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. 18 முதல் 34 வரை­யி­லான வய­துள்­ள­வர்­களில் 21.6% பேர் குறைந்­தது ஒரு­வகை மன­நலப் பிரச்­சி­னை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். 35 முதல் 49 வரை வய­துள்­ள­வர்­களில் 15.4% பேர் குறைந்­தது ஒரு­வகை மன­ந­லப் பிரச்­சி­னை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­தி­யர்­களில் 17% பேர் குறைந்­தது ஒரு­வகை மன­ந­லப் பிரச்­சி­னை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று 2016ஆம் ஆண்டின் சிங்கப்பூர் மனநல ஆய்வு காட்டுகிறது.

2017ஆம் ஆண்­டில் 'அடெல்பி சைக் மெடி­சின் கிளி­னிக்' மேற்­கொண்ட சுயேட்சை ஆய்­வின்­படி, சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் இந்­தி­யர்­களின் தற்­கொலை விகி­தம் 17 விழுக்­கா­டாக உள்­ள­தாக சிங்­கப்­பூர் அபய ஆலோ­சனை சங்­கம் (எஸ்­ஓ­எஸ்) தெரி­விக்­கிறது.

மின்­னி­லக்க அறிவு

இன்று எல்­லாமே மின்­னி­லக்­க­மா­கி­விட்ட நிலை­யில், மின்­னி­லக்க அறிவு வய­தா­ன­வர்­க­ளுக்­கும் மிக­வும் அவ­சி­ய­மாக இருப்­பதை அமைச்­சர் சுட்­டினா்.

கணக்­கு­க­ளைச் சரி­பார்க்க, கடை­யில் பொருள் வாங்க, மருத்­து­வம் முதல் அனைத்து சேவை­களுக்­கும் பதிவு செய்­ய­வும் தக­வல்­களை அறிந்­து­கொள்­ள­வும் இன்று இணை­யமே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது என்­ப­தால் இணைய அறிவு அனை­வ­ருக்­கும் அத்­தி­யா­வ­சி­ய­மாக இருப்­பதை அமைச்­சர் சுட்­டி­னார்.

குறிப்­பாக, தனி­யாக வசிக்­கும் முதி­யோ­ருக்கு இணை­யம், மின்­னி­லக்­கப் பயன்­பாடு குறித்­துச் சொல்­லித்­தர கூடு­தல் முயற்­சி­கள் தேவை என்றார் அவர்.

வசதி குறைந்­த­வர்­களில் (அடி­மட்­டத்­தில் உள்ள 10%) 42 விழுக்­காட்­டி­னரே மின்­னி­லக்க அர­சாங்க சேவை­கள் மூலம் பயன்­பெ­று­கின்­ற­னர். வச­தி­மிக்­க­வர்­களில் (உயர்­மட்­டத்­தில் உள்ள 10%) 36% மின்­னி­லக்க அர­சாங்க சேவை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தில்லை. வய­தா­ன­வர்­கள் மின்­னி­லக்க சேவை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தில் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­வ­தா­க­வும் ஜூன் மாதம்­வெளி­வந்த அந்த ஆய்வு சுட்டுகிறது.

பெண்கள் மேம்­பாடு

இந்­திய சமூ­கத்­தைப் பொறுத்­த­வரை அனைத்து வயது பிரி­வி­ன­ரி­லும் தன்­னம்­பிக்கை உள்ள மாதர் இருப்­பது முக்­கி­யம். பெண்கள் முன்னேற வேண்டும் என வலி யுறுத்தினார் குமாரி இந்திராணி.

"குடும்­பத்­தில் பெற்­றோர் இரு­வரும் பிள்ளை வளர்ப்­பில் துடிப்­பு­டன் ஈடு­ப­டு­வது அந்­தப் பிள்ளைக்கு நன்மை பயக்­கும். இதை சிண்­டா­வும் தனது குடும்­பத் திட்­டத்­தில் இதன் தொடர்பில் கவனம் செலுத்துகிறது.

"ஏனெ­னில், பிள்­ளை­க­ளின் கல்வி, வளர்ச்சி, மேம்­பாடு ஆகி­ய­வற்­றில் பெற்­றோர் முத­லீடு செய்­வது பிள்ளைகள் தன்­னம்­பிக்­கை­யு­ட­னும் சூழ­லுக்­கும் ஏற்­ற­வாறு சரி­செய்து கொண்­டும் வளர உதவுகிறது. இதில் அந்­தச் சுமையை பெண்­கள் ஒரு­வ­ராக சுமக்­கா­தது அவர்­களுக்­கும் நல்­லது.

இது வலு­வான குடும்­பங்­களை உரு­வாக்க உத­வும். பெண்கள் மேம்­பாடு முக்­கி­ய­மான ஓர் அம்­சம்," என்று வலி­யு­றுத்­தி­னார் அமைச்­சர்.

பெண்­க­ள் மேம்­பாட்­டிற்­கான உத­வி­கள் குறித்து சிண்டா ஆலோ­சித்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட சிண்­டா­வின் தலை­வ­ரு­மான இந்­தி­ராணி ராஜா, இதன் தொடர்­பில், திட்­டம் ஒன்றை வகுப்­ப­தில் ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும் சொன்­னார்.

விவ­ரங்­கள் பின்­னர் அறி­விக்­கப்­படும் என்­றார் அவர்.