கேட்போம், பேசுவோம், தீர்வுகாண்போம் சிங்கப்பூரில் இனம், இனவாதம் குறித்த இளையரின் கருத்துகள்; தமிழ் முரசு, பெரித்தா ஹரியான் நடத்திய மாஜுலா கருத்தரங்கு

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

இனப் பாகு­பா­டு­களும் வேறு­பா­டு­களும் அற்ற சமு­தா­யத்தை நோக்­கிய பய­ணத்­தில் சிங்­கப்­பூர் தொடர்ந்து முன்­னேற்­றம் காண­வேண்­டும். அதற்கு சிங்­கப்­பூ­ரில் செய்ய வேண்­டி­யவை பல உள்­ளன என்­பது சிங்­கப்­பூரின் பல இனங்­க­ளை­யும் சேர்ந்த இளை­யர்­க­ளின் கருத்து. இன நல்­லி­ணக்­கத்­திற்கு முன்­னு­ரிமை அளித்து, சமூ­கங்­க­ளுக்­கி­டையே புரிந்­து­ணர்வை வளர்க்க பல­வ­ழி­களில் பாடுபடும் சிங்­கப்­பூ­ரில் இத­னைச் சாத்தி­யப்­ப­டுத்த முடி­யும் என்­பது அவர்­க­ளது நம்­பிக்கை.

சிங்­கப்­பூ­ரின் ஒரே தமிழ் நாளி­த­ழான தமிழ் முர­சும் ஒரே மலாய் மொழி நாளி­தழான பெரித்தா ஹரி­யானும் இணைந்து அண்­மை­யில் 'மாஜுலா கருத்­தரங்கு: இன வேறு­பா­டின்றி' என்ற கலந்­து­ரை­யா­ட­லுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

சீன, மலாய், இந்­திய சமூ­கங்­களை பிர­தி­நிதித்து மூன்று இளை­யர்­கள் நேரடி கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர். மேலும் அறு­வ­ரது கருத்­து­கள் உரை­யா­ட­லில் முன்­வைக்­கப்­பட்­டன.

பாகு­பா­டு­க­ளுக்கு அப்­பாற்­பட்ட சமூ­க­மாக எந்­த­வொரு பல இன சமூ­க­மும் இருக்க முடி­யாது என்­பது யதார்த்­தம்.எனி­னும், இனப் பாகு­பாடு குறித்த விழிப்­பு­ணர்வை அதி­க­ரிப்­பது உட்­பட பல வழி­க­ளி­லும் முடிந்த அள­வில் முயற்­சி­களை மேற்­கொண்­டால், பாகு­பா­டு­கள் அற்ற சமு­தா­யத்தை உரு­வாக்­கு­வது ஓர­ள­வுக்கு சாத்­தி­ய­மா­க­லாம். ஆனால் இலக்கு மாறிக்­கொண்­டே­தான் இருக்­கும் என்­பது கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்ற இளை­யர்­க­ளின் ஒரு­மு­க­மான கருத்து.

"இனம் குறித்த எந்த அம்­ச­முமே சமூ­கப் பிரச்­சி­னை­யாக இல்­லாத நிலை என்­பது கன­வு­ல­கத்­திற்கு நிக­ரா­னது," என்ற மெண்­டாக்கி மன்­றத்­தின் தலை­வி­யான 32 வயது ஃபரிடா முகம்­மது சாட், கொள்கை அள­வில் மாற்­றங்­கள் தேவை எனக் கருத்­து­ரைத்­தார்.

சீனர் மேம்­பாட்டு உதவி மன்­றம், மெண்­டாக்கி, சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம் (சிண்டா), யூரே­ஷியர் சங்­கம் முத­லிய சுய உதவி அமைப்­பு­கள் அந்­தந்த சமூ­கங்­க­ளின் மேம்­பாட்­டுக்­காக அமைக்­கப்­பட்­டவை என்­றா­லும் இன்­றைய சூழ­லில் அவற்­றின் தேவையை மீண்­டும் பரி­சீ­லனை செய்­ய ­வேண்­டும் என்­றார் அர­சாங்க ஊழி­ய­ரான அவர்.

"மலாய் முஸ்­லிம் சமூ­கத்­தைச் சேர்ந்த இளை­யர்­கள் தங்­க­ளின் வாழ்க்­கைத் தொழில் கன­வு­களை நன­வாக்­க­வும் மீண்­டும் சமூ­கத்­திற்­குப் பங்­க­ளிக்­க­வும் ஆத­ரவு வழங்­கு­கிறது மெண்­டாக்கி கிளப் அமைப்பு. ஆனால் அண்­மைக் கால­மாக சீன, இந்­திய சமூ­கத்­தைச் சேர்ந்த தொண்­டூ­ழி­யர்­கள் இதில் பங்­காற்­று­கின்­ற­னர். இன நல்­லி­ணக்­கத்­தைப் பறை­சாற்­றும் இத்­த­கைய நிலை நில­வும் பட்­சத்­தில் சுய உதவி அமைப்­பு­களை இன ரீதி­யாக பிரிப்­பது குறித்து சிந்­திக்­க­லாம்," என்­றார் ஃபரிடா.

அண்­மைக் காலங்­களில் இன­வா­தம் குறித்த கலந்­து­ரை­யா­டல்­களில் பேசப்­பட்ட 'எஸ்­ஏபி' எனப்­படும் சிறப்பு ஆத­ர­வுத் திட்­டப் பள்­ளி­கள் குறித்­தும் இளையர்கள் பேசி­னர். பெரும்­பா­லும் சீன சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­களே பயி­லும் அத்­த­கைய பள்­ளி­களில், மாண­வர்­க­ளுக்கு மற்ற இனத்­த­வர்­க­ளு­ட­னான தொடர்­புகள் குறை­வாக இருப்­பது சுட்­டிக்காட்­டப்­பட்­டது.

"அத்­த­கைய பள்­ளி­களை பல வழிகளில் மாற்­றி­ய­மைக்­க­லாம் என்­பதே எங்கள் வாதம். உதா­ர­ணத்­துக்கு சீன வகுப்­பு­களை விருப்­பப்­பா­ட­மாக சிறு­பான்மை சமூ­கத்­தி­ன­ருக்கு வழங்­க­லாம். மற்ற இனத்­த­வ­ரு­டன் படித்து, வள­ரும் வாய்ப்பை எல்­லாத் தரப்பு மாண­வர்­க­ளுக்­கும் வழங்க வேண்­டும்," என்­றார் 36 வயது சோ வேஹாவ்.

அக்­கம்­பக்­கப் பள்­ளி­களில் படித்த மாண­வர்­க­ளுக்கு இனம், இன­வா­தம் குறித்த நுணுக்­க­மான புரிந்­து­ணர்வு இருப்­ப­தை­யும் தான் அக்­கம்­பக்­கப் பள்­ளி­யில் படித்து பல இன நண்­பர்­க­ளு­டன் காற்­பந்து விளை­யாடி வளர்ந்த அனு­ப­வத்­தை­யும் பகிர்ந்­தார் அடித்­தள அமைப்­பு­க­ளின் தலை­வ­ரும் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மொன்­றின் முத­லீட்டு இயக்­கு­ந­ரு­மாக உள்ள திரு வேஹாவ்.

"எஸ்­ஏபி பள்ளி மாண­வர்­க­ளுக்கு இன­வா­தம் தவறு என்­பது தெரி­யும். ஆனால் உற்று நோக்கி, வெங்­கா­யத்தை உரிப்­ப­து­போல ஒவ்­வொரு படி­நி­லை­யை­யும் தாண்டி ஆழ­மா­கப் பார்த்­தால் அவர்­கள் இனம் குறித்த சில அம்­சங்­க­ளைக் கையாள சிர­மப்­ப­டு­வது தெரி­யும்," என்றார் பத்­தாண்­டு­க­ளாக வங்கி, முத­லீட்­டுத் துறை­களில் பணி­யாற்­றும் அவர்.

பல இனங்­க­ளுக்­கி­டையே நல்­லு­றவை மேம்­ப­டுத்த வெவ்­வேறு சமூ­கத்­தி­ன­ருக்கு இடையே வெளிப்­ப­டை­யான உரை­யா­டல்­கள் அவ­சி­யம் என்ற கருத்தை முன்வைத்­தார் 21 வயது குமாரி மிருதுளா குமார்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத் தமிழ் இலக்­கிய மன்­றத்­தின் தலை­வ­ரான குமாரி மிரு­துளா, சமூக ஊட­கங்­களில் பெரும்­பான்மை, சிறு­பான்மை இனங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் தங்­க­ளின் கருத்­து­களை மரி­யா­தை­யான முறை­யில் வெளிப்­ப­டுத்­து­வ­தால் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் புரிந்­து­ணர்வு பலப்­ப­டு­கிறது என்­றார். அத்­த­கைய உரை­யாடல்­கள் சிறு வய­தி­லி­ருந்து தொடங்க வேண்­டும் என்­றும் பள்­ளி­களில் அந்­தக் கற்­றல் தொட­ர­வேண்­டும் என்­றார் சிண்டா இளை­யர் குழு தொண்­டூ­ழி­ய­ரு­மான மிரு­துளா.

அண்­மை­யில் தஞ்­சோங் பகார் குழுத்­தொ­கு­தி­யில் இடம்­பெற்ற தேசிய தின விளம்­ப­ரப் பதா­கை­யில் இந்­தி­யக் குடும்­பத்­தின் படம் இடம்­பெற்­றி­ருப்­பது குறித்து சமூக ஊட­கத்­தில் எழுந்த இன­வா­தக் கருத்­து­கள் குறித்­தும் பேசப்­பட்­டது.

"பல சிங்­கப்­பூ­ரர்­க­ளைப் போலவே எனக்­கும் அதிர்ச்­சி­யா­க­வும் வருத்­த­மா­க­வும் இருந்­தது. அத்­த­கைய வெறுப்பு மிகுந்த கருத்­து­கள் பெரும்­பா­லான சிங்கப்­பூ­ரர்­க­ளைப் பிர­தி­ப­லிப்­ப­வை­யல்ல. சமூக ஊட­கங்­களில் வெறுப்­பு­மி­குந்த கருத்­து­க­ளின் தாக்­கம் பல­ம­டங்கு பெரிதா­கி­வி­டு­வ­தும் ஒரு கார­ணம்," என்று குமாரி மிரு­துளா சொன்­னார்.

பல இன சமு­தா­யத்­தில் சிறு­பான்­மை­யி­னர் எதிர்­கொள்­ளும் சவால்­கள் அதி­கம் என்­பதை ஏற்­றுக்­கொள்­ளும் அதேவேளையில் பாது­காப்­பாக உரை­யா­டும் தளங்­களை உரு­வாக்­கு­வதும் வேற்­று­மை­களைக் களைந்து நல்­லி­ணக்­கம் பேணு­வதும் முக்­கி­யம் என்று பங்­கேற்­பா­ளர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!