'நம்பிக்கை தரும் கலந்துரையாடலை தமிழ் முரசு முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது'

'நம்பிக்கை தரும் கலந்துரையாடலை தமிழ் முரசு முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது'

2 mins read

தமிழ், மலாய் நாளிதழ்கள் இணைந்து நடத்திய இக்கலந்துரையாடல் காணொளி ஆகஸ்ட் 9ஆம் தேதி இணையத்தில் பதிவேற்றப்பட்டது.இக்கலந்துரையாடல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மக்களிடையே உரையாடல்களையும் ஏற்படுத்தியுள்ளது. காணொளி குறித்த மக்களின் கருத்துகள் சிலவற்றை இங்கே பகிர்கிறோம்.

இளையர்கள் இதுபோன்ற கலந்துரையாடல்களில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. சிங்கப்பூரின் வருங்காலத் தலைவர்களோடு நாங்களும் பயணிக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி. இப்படி மனம் திறந்து, பல இனங்களும் ஒன்றாக உரையாடுவது அவசியம். இத்தகைய வெளிப்படையான உரையாடல்கள் மூலம் நாம் பாதுகாப்பான விவாதங்களைத் தொடரலாம். பாதுகாப்பான தளத்தில் பாகுபாடுகளைக் களைவதில் நாளிதழ்கள் இதில் சிறந்த பங்கை ஆற்ற முடியும்.

ராம் குமார், 55, வர்த்தகர்.

இதை ஒரு மிகப் பெரிய மாற்றமாகப் பார்க்கிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்னர் இனவாதம் குறித்து பேசுவது சரியாக இருக்காது என்ற எண்ணம் இருந்தது. இது பேசக்கூடாத ஒன்றாக இருந்தது. இப்போது பல இளையர்கள் இன விவகாரங்கள் குறித்துப் பேசுகிறார்கள். மூத்த தலைமுறையினரும் இந்தப் போக்குக்கு தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.

கலையரசி, 42

இத்தகைய விஷயங்கள் குறித்த வெளிப்படையான உரையாடல்கள் தேவை. கீழ்மட்டத்திலிருந்து பல இளையர்கள் தங்கள் அனுபவங்களையும் எண்ணங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்கிறார்கள். ஆனால், இதுபோன்ற எல்லாரையும் சென்றடையக் கூடிய தளங்களில் பேசுவது அவசியம். முக்கியமாக, பெரும்பான்மையினரை இத்தகைய உரையாடல்களில் ஈடுபடுத்துவது அவசியம்.

இந்து இளங்கோவன், 25

தமிழ் முரசும் பெரித்தா ஹரியானும் இனம் குறித்த கலந்துரையாடலை இணைந்து ஏற்பாடு செய்திருப்பதை மிகவும் வரவேற்கிறேன். இது கவனத்தில் கொள்ளத் தக்க ஒன்று. இனம் குறித்து நாம் அதிகம் பேசுவது முக்கியம் என நினைக்கிறேன். ஊடகங்களில் இந்த விஷயத்தில் வெளிப்படையான போக்கைப் பின்பற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

கோ.நஸரேன் குமார், 24

நமது சமூகம் தொடர்பான சில முக்கிய விஷயங்களை பல இனங்களையும் சேர்ந்த இளையர்கள் ஒன்றாக அமர்ந்து பேசியிருப்பது வரவேற்கத் தக்கது. இதுபோன்ற வெளிப்படையான உரையாடல்கள், பல இன, சமய மக்கள் வாழும் சமூகத்தில் புரிந்துணர்வையும் நல்லிணக்கத் தையும் வளர்க்கும்.

ஷாகுல் ஹமீது, 48

அண்மைய காலத்தில் இனவாதம் குறித்து நடந்த சம்பவங்கள் எனக்கு அதிர்ச்சி தந்தன. இதெல்லாம் சிங்கப்பூரில் நடக்கக்கூடாது. இது போன்ற கலந்துரையாடல் களால் புரிதல் அதிகரிக்கி கிறது. நம் ஒற்றுமை வலுவடைகிறது. தமிழ் முரசு இதை ஏற்பாடு செய்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. எதிர்காலத்தில் சிங்கப்பூர் தொடர்ந்து பல இன சமுதாயமாக இயங்கும் என்ற நம்பிக்கையை இந்தக் கருத்தரங்கு தருகிறது.

கண்ணகி பிள்ளை, 61