நம்பிக்கையும் உறுதியும் தந்த கொண்டாட்டம்

ரெட் லயன்ஸ்' சிவப்புச் சிங்கங்கள் ஐவர் விமானத்திலிருந்து குதித்து அழகிய வானிற்கு மேலும் அழகுச் சேர்த்து பார்வையாளர்களின் ஆரவார வரவேற்புடன் வந்து துல்லியமாக மிதக்கும் மேடையில் வந்திரங்கினர்.

அந்த ஐவரில் மூத்த வாரண்ட் அதிகாரி மகேஸ்வரன் பிராங்க்ளின் மிராண்டாவும் ஒருவர். இதுவரை 1550 முறை அவர் 'பேர‌ஷூட்' மூலம் குதித்துள்ளார்.

இரண்டு 'அபாச்சி' ஹெலிகாப்டர்களும் 'எஃப்15எஸ்ஜி' ரக போர் விமானங்களும் பார்வையாளர்களுக்கு மிதக்கும் மேடைக்கு மேல் வான் சாகசம் செய்து பிரமிக்க வைத்தனர். ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்ற சடங்குபூர்வ அணிவகுப்பு நேற்றைய முற்பகுதியில் மீண்டும் நடைபெற்றது.

'ரெட் லயன்ஸ்' சிவப்பு சிங்கங்கள், 'அன்றாட கதாநாயகர்களான' முன்களப் பணியாளர்களுக்கு நன்றி நல்குதல், இசை, நாடகப் பிரிவின் படைப்பு, 'செசைரி செஸாலி' மற்றும் 'தி ஃப்ரெ‌ஷ்மன்' இருவரின் பிரத்யேக இசைப் படைப்பும் அணிவகுப்புக்கு முந்தைய அங்கத்தில் இடம்பெற்றன.

தேசிய தினக் கொண்­டாட்­டத்­தில் படைப்­பா­ளர்­களும் பார்­வை­யா­ய­ளர்­களும் கொரோனா கிருமி சூழல் கார­ண­மாக மிகக் குறை­வாக இருந்­தா­லும் தொழில்­நுட்­ப­மும் முப்­ப­ரி­மா­ணக் காட்­சி­களும் நிகழ்ச்­சியை பிரம்­மாண்­ட­மாக்­கின.

வண்ண விளக்­கு­கள் மேடை­யை­யும் காலி இருக்­கை­க­ளை­யும் நிறைத்­தன. ஒவ்­வோர் இருக்­கை­யி­லும் பொருத்­தப்­பட்டு இருந்த 'ஸ்மார்ட் லைட்ஸ்' திறன் விளக்­கு­கள் அந்­தந்த அங்­கத்­திற்கு ஏற்ப வண்­ணத்தை மாற்றி கொண்­டாட்ட உணர்­வைப் பெரு­கச் செய்­தது.

வழக்­க­மாக 25,000 பேர் நிறைந்து இருக்­கும் அரங்­கில் 1,000 பேர் மட்­டுமே இம்­முறை அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

அணி­வ­குப்பை அதி­பர் பார்­வை­யிட்­ட­போது, மிதக்­கும் மேடைக்கு வலப்­பு­றம் நீரில் நிலை­கொண்­டி­ருந்த கப்­ப­லி­லி­ருந்து 21 முறை ஒலித்த மரி­யாதை பீரங்­கிக் குண்டு முழக்­கம், நாட்­டின் மீட்­சி­யைப் பறை­சாற்­று­வ­தாக கம்­பீ­ரத்­து­டன் ஒலித்­தது.

இந்த ஆண்­டின் மற்­றொரு வித்­தி­யா­ச­மான அங்­க­மாக மிதக்­கும் மேடை­யைத் தவிர்த்து வேறு நான்கு இடங்­களில் இருந்­தும் நிகழ்ச்சி அங்­கங்­க­ளைப் படைத்­த­னர்.

முன்­கூட்­டியே பதி­வு­செய்­யப்­பட்ட அந்த அங்­கங்­கள் நேரடி நிகழ்ச்­சி­யில் கோவை­யாக இணைக்­கப்­பட்­டன. ஜுவல் சாங்கி, மரினா அணைக்­கட்டு, சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம், இயோ சூ காங் அரங்கு ஆகிய இடங்­க­ளி­லி­ருந்து பதிவு செய்­யப்­பட்ட அந்த அங்­கங்­களில் 600 பேர்­வரை பங்­கெ­டுத்­த­னர்.

சிங்­கப்­பூ­ரின் தேசிய தினக் கொண்­டாட்­டம் நேற்று பத்­தா­வது முறை­யாக மரினா பே மிதக்­கும் மேடை­யில் கொண்­டா­டப்­பட்­டது.

முதன் முத­லில் தற்­கா­லிக மேடை­யாக அமைக்­கப்­பட்ட இந்த மிதக்­கும் மேடைக்கு புக­ழா­ரம் சூட்­டும் வகை­யில் காணொளி ஒன்று ஒளி­ப­ரப்­பட்­டது.

இங்கு முதன் முத­லாக 2007ஆம் ஆண்­டில் தேசிய தினக் கொண்­டாட்­டத்­திற்கு தலைமை தாங்­கிய திரு தியோ ஜிங் சியோங், மிதக்­கும் மேடை தேசிய தினக் ெகாண்­டாட்­டத்தை தாங்­கக்­கூ­டியதாக, வலு­வாக உள்­ள­தாக எனப் பல­ரும் ேகட்க அவர்­க­ளுக்கு உறு­தி­ய­ளிக்க வேண்­டி­யி­ருந்­த­தா­கக் கூறி­னார்.

இங்கு நிரந்­த­ர­மாக அமை­ய­வுள்ள தேசிய சேவை சதுக்­கத்தை அமைக்­கும் பணி­கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்­க­வுள்­ளன.

இந்த மிதக்­கும் ேமடை­யில் தேசிய தினக் கொண்­டாட்­டங்­கள் தவிர அடிப்­படை ராணு­வப் பயிற்சி நிறைவு அணி­வ­குப்­பு­கள், புத்­தாண்டு வர­வேற்பு கொண்­டாட்­டங்­கள், ரிவர் ஹொங்­பாவ் கொண்­டாட்­டங்­களும் போன்­வ­றை­யும் இடம்­பெ­று­கின்­றன.

இவ்­வாண்டு தேசிய தின கொண்­டாட்ட ஏற்­பாட்­டா­ளர்­கள் சுற்­றுச்­சூ­ழலை பாது­காக்­கும் வித­மாக பல்­வேறு பசுமை இயக்­கங்­க­ளு­டன் இணைந்து அணுக்­க­மா­கப் பணி­யாற்­றி­னர்.

இவர்­கள் தேசிய தின சிறப்பு அன்­ப­ளிப்­புப் பைகளில் சுற்­றுச்­சூ­ழலைப் பாது­காக்­கும் வித­மா­க­வும் அதே சம­யம் நீடித்து உழைக்­கக்­கூ­டி­ய­தா­க­வும் உள்ள அன்­ப­ளிப்­புப் பகைளை உரு­வாக்க எத்­த­கைய பொருட்­க­ளைப் பயன்­ப­டுத்­த­லாம் என ஆலோ­சனை செய்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!