மன­ந­லனைப் பேணிக் காக்க உதவும் அமைப்புகள்

நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் கடந்த ஆண்டு விதிக்­கப்­பட்ட நிலை­யில் இங்­குள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­களி­டையே மனச்­சோர்வு, மன அழுத்­தம் போன்ற அறி­கு­றி­கள் அதி­க­மா­கக் காணப்­பட்­ட­தாக புதிய ஆய்வு ஒன்று கண்­ட­றிந்­துள்­ளது.

தங்­க­ளின் தங்­கு­வி­டு­தி­கள், வேலை­யி­டங்­கள், குறிப்­பிட்ட பொழுது­போக்கு மையங்­கள் ஆகி­ய­வற்­றுக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்­களு­டன் ஒப்­பி­டு­கை­யில், தங்­கு­விடுதி அல்­லது அறை­யில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட ஊழி­யர்­களி­டம் மன­ந­லப் பிரச்­சி­னை­கள் அதி­கம் காணப்­பட்­ட­தாக யேல்-என்­யு­எஸ் நடத்­திய ஆய்வு குறிப்­பிட்­டி­ருந்­தது.

“ஊழி­யர்­க­ளின் மன உறுதி குறைந்­து­விட்­டது. நோய்ப் பர­வ­லுக்கு ஒரு முடிவு இல்­லா­த­து­போல் தோன்­று­கிறது. எல்­லாம் சரி­யாகி வரும்­போது சமூ­கத் தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரிப்­ப­தும் மன உளைச்­சல் தரு­கிறது,” என்­றார் ‘AGWO’ என்ற வெளி­நாட்டு ஊழி­யர் நல்­வாழ்வு இயக்­கத்­தின் நிறு­வன உறுப்­பி­னர் திரு சாமு­வேல் கிஃப்ட் ஸ்டீ­பன், 44.

அவ­ரது இயக்­கம் 70 பங்­காளித்­துவ அமைப்­பு­க­ளு­டன் இணைந்து செயல்­பட்டு வரு­கிறது. ஊழி­யர்­களு­டன் தொடர்­பு­கொண்டு பேசு­வது, உண­வுப்­பொ­ருட்­களை அனுப்­பு­வது போன்ற சமூ­க­நல சேவை­களில் இயக்­கம் ஈடு­பட்ட வரு­வ­தா­க­வும் திரு சாமு­வேல் கூறி­னார். பொழு­து­போக்கு மையங்­களில் சமய வழி­பா­டு­க­ளுக்­கும் இயக்­கம் ஏற்­பாடு செய்து வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

மன­ந­லப் பாதிப்­புக்கு ஆளா­கி­யுள்ள ஊழி­யர்­கள், ஆக்­க­க­ர­மான வகை­யில் சிந்­திக்­க­வும் பேச­வும் வேண்­டும் என்­றார் ‘கிளப் டு கேர்’ தலை­வ­ரும் மன­நல ஆலோ­ச­கரு­மான திரு­வாட்டி ஷர்­மினி என். ராம­சந்­திரா, 49. ‘கிளப் டு கேர்’ என்­பது இந்­திய சமூகத்தினருக்கான மன­நல ஆலோ­சனை சமூ­கக் குழு ஆகும்.

“கிரு­மித்­தொற்று இல்­லாத காலத்­தி­லேயே குடும்­பம், நெருங்­கிய உற­வு­க­ளைப் பிரிந்து இங்கு வேலை செய்ய வரு­கின்­ற­னர். கிரு­மித்­தொற்­றுச் சூழல் அதை மேலும் மோச­மாக்­கி­விட்­டது.

“இருப்பினும் தொழில்­நுட்ப வளர்ச்­சி­யால் வெளி­நாட்­டில் உள்ள உற­வு­க­ளு­டன் பேச வாய்ப்பு கிடைக்­கிறது. அடிப்­ப­டைத் தேவை­களை அர­சாங்­கம் பூர்த்தி செய்து ஊழி­யர்­க­ளைக் கவ­ன­மாக பார்த்­துக்­கொள்­கிறது,” என்­றார் ஷர்­மினி.

“ஊழி­யர் ஒரு­வ­ருக்­குத் தொற்று ஏற்­பட்­டால் மொத்த தங்­கு­வி­டு­திக்­கும் பரவ வாய்ப்பு அதி­கம். இதில் பல அம்­சங்­கள் அடங்­கி­யுள்­ள­தால் அர­சாங்­கத்­தின் விதி­மு­றை­க­ளைப் புரிந்­து­கொள்­வ­தும் அவ­சி­யம்,” என்­றும் அவர் கூறி­னார்.

மன­நல உதவி தேவைப்­ப­டு­வர்­களுக்கு ‘ஹெல்த்­செர்வ்’ போன்ற அமைப்­பு­கள் உதவி வழங்­கு­கின்­றன என்­றும் அவர் தெரி­வித்­தார்.

‘ஹெல்த்­செர்வ்’ அமைப்­பின்

24 மணி நேரச் சேவை

சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கா­கவே முதன்­மு­த­லாக 24 மணி நேர உதவி வழங்­கும் தொடர்­புச் சேவையை ‘ஹெல்த்­செர்வ்’ தொடங்­கி­யுள்­ளது.

நெருக்­கடி தொடர்­பில் அனு­ப­வம் வாய்ந்த நிபு­ணர்­களும் தொண்­டூ­ழி­யர்­களும் இச்­சேவை வழி ஆலோ­சனை வழங்­கு­வர். வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வெவ்­வேறு தாய்­மொ­ழி­க­ளைக் கொண்­டுள்ள நிலை­யில், அம்­மொ­ழி­களை அறிந்­தோ­ரும் நிபு­ணர்க் குழு­வில் இடம்­பெற்­றுள்­ள­னர்.

ஆலோ­சனை பெற விரும்­பு­வோர், +65 3129 5000 என்ற எண்­ணில் அமைப்பை நாட­லாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!