அரும்பணிக்கு அங்கீகாரம்

நல்லாசிரியர் விருது 2020/2021

தொன்மொழியாயினும் இளமை குன்றா இன்மொழியாம் செந்தமிழ் நாளும் தழைத்தோங்கி, செழிப்புற்று, வாழும் மொழியாய் நிலைத்திருக்க முதன்மைப் பங்காளர்களாகத் திகழ்வது தமிழாசிரியர்களே! அப்பெரும்பணியில் அரும்பணியாற்றியோரை, ஆற்றி வருவோரைச் சிறப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

ப.பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சூழ­லில் சவால்­களை வெற்­றி­க­ர­மாக எதிர்­கொண்டு, மெய்­நி­கர் பாணி­யில் மாண­வர்­க­ளுக்­குக் கற்­றுக்­கொ­டுத்து, தொடர்ந்து மாண­வர்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக விளங்­கும் தமி­ழா­சி­ரி­யர்­களை இவ்­வாண்­டின் நல்­லா­சி­ரி­யர் விருது நிகழ்ச்சி கெள­ர­வித்­தது.

தமிழ் முரசு நாளி­தழ், சிங்­கப்­பூர்த் தமிழ் ஆசி­ரி­யர் சங்­கம், தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்சிக் குழு ஆகி­யவை இணைந்து நடத்­திய 'நல்­லா­சி­ரி­யர் விருது 2020/2021' விழா, இம்­முறை நேர­டி­யா­க­வும் இணை­யம் வழி­யா­க­வும் இடம்­பெற்­றது.

சென்ற ஆண்டு 117 ஆசி­ரி­யர்­க­ளின் பெயர்­கள் விரு­துக்கு முன்­மொ­ழி­யப்­பட்ட நிலை­யில், கொரோனா பர­வல் கார­ண­மாக கடந்த ஆண்டு இவ்­வி­ருது நிகழ்ச்சி ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

இவ்­வாண்டு 596 ஆசி­ரி­யர்­கள் விருதுக்குப் பரிந்­து­ரை செய்யப்பட்டனர்.

இந்­நி­லை­யில், இவ்­விரு ஆண்­டு­க­ளின் பரிந்­து­ரை­களும் விரு­துக்­கான பரி­சீ­ல­னை­யில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்டு, வெற்­றி­யா­ளர்­கள் முடி­வு­செய்­யப்­பட்­ட­னர்.

மூவர்க்கு வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விருது, தொடக்­கப் பள்­ளிப் பிரி­வில் மூவர், உயர்­நிலைப் பள்ளி மற்­றும் தொடக்­கக் கல்­லூ­ரிப் பிரி­வில் இரு­வர், தேசிய கல்­விக் கழ­கப் பயிற்சி ஆசி­ரி­யர் பிரி­வில் ஒரு­வர் என மொத்­தம் ஒன்­பது பேர்க்கு விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

"தமி­ழா­சி­ரி­யர்­கள் ஆற்றி வரும் பங்­க­ளிப்பை வெளிச்­சம் காட்­டும் நிகழ்­வாக நல்­லா­சி­ரி­யர் விருது விழா ஒவ்­வோர் ஆண்­டும் நடத்­தப்­பட்டு வரு­கிறது. கடந்­தாண்டு கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் இவ்­வி­ருது விழாவை ஒத்­திப்­போட வேண்­டி­ய­தா­யிற்று. இம்­முறை இந்­நி­கழ்வை நடத்­தி­ய­தன் மூலம் தொடர்ந்து அவர்­க­ளுக்கு ஊக்­கம் தரும் விரு­தின் நோக்­கத்தை நிறை­வேற்ற முடிந்­தது," என்­று செம்­ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு­வின் தலை­வரு­மான விக்­ரம் நாயர் தெரிவித்தார்.

"கடந்த ஆண்­டி­லி­ருந்து சிர­ம­மான கால­கட்­டத்தை எதிர்­கொண்டு வரும் ஆசி­ரி­யர்­கள் குறு­கிய காலத்­திற்­குள் புதிய வி‌ஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொள்­வ­தாக இருந்­தது. வேலைப்­பளு, மனச்­சோர்வு ஆகி­ய­வற்றை எதிர்­கொள்­ளும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு இந்த நல்­லா­சி­ரி­யர் விருது பெரும் ஊக்கம் தருவதாக விளங்குகிறது. கடந்த இருபது ஆண்­டு­களாக ஆசி­ரி­யர்­க­ளின் அர்ப்­ப­ணிப்பை அங்­கீ­கரித்­து­வ­ரும் இவ்­வி­ருது நிகழ்ச்சி, இன்­னும் பல ஆண்­டு­கள் நிலைத்­து இ­ருக்க வேண்­டும்," என்றார் சிங்­கப்­பூர்த் தமிழ் ஆசி­ரி­யர் சங்­கத்­தின் தலை­வர் தன­பால் குமார்.

சென்ற ஆண்டு வந்த பரிந்­து­ரை­க­ளை­யும் சேர்த்து, மொத்­தம் 713 பரிந்­து­ரை­களில் இருந்து விரு­துக்­குத் தகு­தி­யான ஆசி­ரி­யர்­க­ளைத் தேர்ந்­தெ­டுப்­பது ஏற்­பாட்­டுக் குழு­விற்­குப் பெரும் சவா­லாக விளங்­கி­யது என்று தமிழ் முர­சு நாளிதழின் இணை ஆசி­ரி­ய­ரும் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்சிக் குழு­வின் உறுப்­பி­ன­ரு­மான வீ.பழ­னிச்­சாமி குறிப்­பிட்­டார்.

'தமிழ் வகுப்பு என்பது தாய்வீடுபோல'

இந்து இளங்­கோ­வன்

சில மாண­வர்­க­ளுக்­குத் தமிழ் வகுப்பு என்­பது தாய்­வீ­டு­போல என்­கி­றார் கடந்த 15 ஆண்­டு­களாக தமி­ழா­சி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் திரு­வாட்டி யோகேஸ்­வரி பால­சுப்­பி­ர­ம­ணி­யன்.

2007ஆம் ஆண்டு ஆசி­ரி­யப் பணி­யைத் தொடங்­கிய இவர், சில ஆண்­டு­கா­லம் தொடக்­கப் பள்­ளி­யில் ஆங்­கி­லம், கணி­தம், அறி­வி­யல் பாடங்­க­ளைக் கற்­றுத்­தந்­தார். அப்­போ­தெல்­லாம் தமி­ழா­சி­ரி­யர்­க­ளு­டன் தமிழ் மாண­வர்­கள் எவ்­வளவு அன்­பாக உள்­ள­னர் என்­ப­தைக் கண்டு மனம் நெகிழ்ந்த திருவாட்டி யோகேஸ்வரிக்கு தமிழ்­மொ­ழி­மீ­து மிகுந்த ஆர்­வம்­ இருந்ததால் தமிழ் கற்­பிக்க வேண்­டும் என்ற ஆசை தோன்­றி­யது. அதனைத் தொடர்ந்து, இந்­தி­யா­விற்­குச் சென்று தமிழ் இலக்­கி­யத்­தில் இளங்­கலைப் பட்­டம் பெற்ற இவர், தற்போது பொங்­கோல் உயர்­நி­லைப் பள்­ளி­யில் தமிழ் ஆசிரியராகப் பணி­பு­ரிகிறார்.

கற்றல் இன்பத்தை உணர்ந்தால் மாணவர்களே முன்வந்து கற்றுக்கொள்வர் எனக் கூறும் திருவாட்டி யோகேஸ்வரி, 'வகுப்­ப­றைக் கலா­சா­ரம்' எனும் மாண­வர்­க­ளின் ஒருங்­கி­ணைந்த உணர்­வில் தொடர்ந்து கவ­னம் செலுத்து­கி­றார்.

ஒரு மாண­வர் எழுந்து நின்று தமி­ழில் ஏதே­னும் சொல்­லும்­போது, அதில் பிழை­யோ தடு­மாற்­றமோ இருந்­தா­லும் அவரது படைப்­பின் நிறை­களை எடுத்­துக் கூறும்படி பிற மாண­வர்­களிடம் திரு­வாட்டி யோகேஸ்­வரி சொல்­வார். சக நண்­பர்­கள் தம்­மைப் பார்த்­துச் சிரிக்­கா­மல் தமது படைப்பைப் பாராட்­டும்­பொ­ழுது, அந்த­ மா­ண­வர்க்குத் தன்­னம்­பிக்கை அதி­க­ரிக்­கும் என்று இவர் உறு­தி­யாக நம்­பு­கி­றார்.

"நாம் கற்­றுத்­த­ரு­வதை மாண­வர்­கள் கவ­னித்து, உள்­வாங்­கிக் கற்­றுக்­கொள்­ள­வேண்­டும் என்று எதிர்­பார்ப்­ப­தை­விட அவர்­க­ளுக்கு ஏற்ப, நமது கற்­றல் முறை­களை மாற்­றிக்­கொள்ள வேண்­டும்," என்­கி­றார் இந்­தத் தமி­ழா­சி­ரியை.

2011ஆம் ஆண்டு சிங்­கப்­பூ­ரில் தமி­ழா­சி­ரி­ய­ரா­கத் தமது பணியைத் தொடங்­கிய திரு­வாட்டி சுமதி திரு­மா­ற­னுக்கு (இடப்படம்), சிங்­கப்­பூர் கற்­றல் முறை­களும் தொழில்­நுட்­ப­மும் புது­மை­யாக இருந்­தன. இந்­தப் பத்­தாண்­டு­களில் தமது பணி­யின்போது நிறைய சுய­கற்­ற­லும் மேம்­பாடும் இருந்­த­தா­கக் குறிப்­பிட்ட இவர், மாண­வர்­களின் தேவை­க­ளுக்கும் காலத்­திற்கும்­ ஏற்ப ஆசி­ரி­யர்­கள் தங்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்­வது அவ­சி­ய­மா­னது என்றார்.

தமி­ழா­சி­ரி­யர்­க­ளுக்கு இடையே தேசிய அள­வி­லான பகிர்­தல்­களை ஊக்­கு­விக்­கும் திருவாட்டி சுமதி, அதன்­வழி ஓர் ஆசி­ரி­யச் சமூ­க­மாக தாங்கள் மேம்­பட முடி­யும் என்று நம்­பு­கி­றார். 2019ஆம் ஆண்டு நடந்த கல்வி அமைச்­சின் தாய்­மொ­ழி­க­ளுக்­கான கருத்­த­ரங்­கில் இவர் படைத்த தமிழ் இணை­யச் செய்­தி­ம­டல் ஆசி­ரி­யர்­க­ள் பல­ரது கவ­னத்தை ஈர்த்­தது.

மார்­சி­லிங் உயர்­நி­லைப் பள்­ளி­யில் பணி­புரி­யும் இவர், தம் மாண­வர்­களில் பலரை வருங்­கா­லத் தமி­ழா­சி­ரி­யர்­க­ளாக உரு­வாக்க ஆசைப்­படு­கி­றார். மாண­வர்­களைத் தொடர்ந்து ஊக்கு­விக்க புதிய வழி­மு­றை­களை நாடும் இவ­ரது வகுப்­பு­கள் யாவும் ஆடல், பாடல், கவிதை என உற்­சா­க­மூட்­டும் வண்­ணம் அமை­கின்­றன.

'மாணவர்களின் முன்னேற்றமே ஆசிரியர்களுக்கு விருது'

கி.ஜனார்த்­த­னன்

தக­வல், தொடர்­புத் துறை­யி­லும் உள­வி­ய­லி­லும் பட்­டம் பெற்­றுள்­ள­போ­தும், இறு­தி­யில் தாம் படித்த ஜிங் ஷான் தொடக்­கப் பள்­ளி­யி­லேயே ஆசி­ரி­ய­ரா­கச் சேர்ந்­தது மன­நி­றைவு அளித்­த­தா­கத் தெரி­வித்­தார் திரு­வாட்டி வசந்­தன் லாவண்யா, 37.

கற்­ற­லுக்கு முதல் எதிரி அச்­சமே எனக் கூறும் இவர், மாண­வர்­க­ளின் அச்­சத்­தைப் போக்க பல்­வேறு உத்­தி­க­ளைக் கையாண்டு வரு­கி­றார்.

"முத­லில் வகுப்­பில் வாசித்­தலை ஊக்­கப்­ப­டுத்­து­வேன். மாண­வர்­கள் உரக்­கப் படிக்க வாய்ப்பு கொடுக்­கும்­போது அவர்­களது நம்­பிக்கை படிப்­ப­டி­யாக வளர்­கிறது. சுய­ம­திப்­பீ­டு­க­ளைச் செய்ய ஊக்­கு­விப்­பதால் தன்­னம்­பிக்­கை­யும் கூடுகிறது," என்­றார் திரு­வாட்டி லாவண்யா.

தாம் கற்ற உள­வி­யல் கல்­வி­யைப் பயன்­படுத்தி, தள்­ளிப்­போ­டு­தல் உள்­ளிட்ட சில மனப்­போக்­கு­க­ளைத் திருத்­த­வும் முடி­வதாக இவர் குறிப்பிட்டார்.

மாண­வர்­க­ளின் முன்­னேற்­றமே விரு­தா­கக் கருதி வந்­த­தா­கக் கூறிய திரு­வாட்டி லாவண்யா, சிறந்த தமி­ழா­சி­ரி­யர் விருது கிடைத்­தி­ருப்­பதை தமது 11 ஆண்டு கற்பித்தல் சேவைக்­கான கூடு­தல் அங்­கீ­கா­ர­மா­கக் கரு­து­கி­றார்.

'ஒவ்­வொரு மாண­வ­ரும் தலை­வரே, ஒவ்­வொ­ரு­வ­ர்க்­கும் தனித்­தி­ற­மை­கள் உள்ளன' என்ற கொள்­கையை உறு­தி­யாக நம்­பும் இந்த ஆசி­ரி­யர், தம்­மால் முடிந்த அள­விற்கு அவர்­களை முன்­னேற்­று­வதை இலக்­கா­கக் கொண்­டுள்­ளார்.

'கற்றுக்கொள்வது ஆசிரியர்களே'

பள்ளி விடு­முறை என்­றாலே மாண­வர்­களுக்­குப் பெரு­ம­கிழ்ச்சி என்­றா­லும் தம்­மை­விட்­டுப் பிரி­வ­தற்கு கவ­லை­யாக இருப்­ப­தா­கக் கூறிய மாண­வி ஒருவரின் வார்த்­தை­கள் இன்­றும் தம் மனத்­தி­ல் எதி­ரொ­லிப்­பதா­கக் கூறுகிறார் திரு­வாட்டி மலர்­விழி ராம­சாமி, 55.

பெற்­றோர் இரு­வ­ருமே தமிழாசி­ரி­யர்­கள் என்­ப­தால் இயல்­பா­கவே தமக்குத் தமிழ்த்­துறை மீதான ஆர்­வம் வளர்ந்­த­தா­கத் தெரி­வித்­தார் கடந்த 32 ஆண்­டு­க­ளாக ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றி வரும் இவர்.

தொடக்­கப் பள்ளி மாண­வர்­க­ளுக்­குக் கற்­றுத் தரு­வ­தில் திரு­வாட்டி மலர்­வி­ழிக்கு மட்­டற்ற மகிழ்ச்சி. தொழில்­நுட்ப மாற்­றங்­களு­டன் கற்­பிக்­கும் உத்­தி­க­ளுக்கு ஏற்ப வும் மாற­வேண்டி இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட இவர், "பத்தாண்­டு­க­ளுக்கு முன்பு இருந்­த­தைக் காட்­டி­லும் இப்­போது தொழில்­நுட்­பம் மேலும் முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்­ளது. கடந்­தாண்டு தொடங்­கிய கொவிட்-19 பர­வ­லும் அம்முக்­கி­யத்­து­வத்தை அதி­க­ரித்­துள்­ளது," என்­றார்.

காலப்­போக்­கில் மாண­வர்­க­ளின் துணிச்­ச­லும் தொழில்­நு­பட்­பத் திற­னும் உயர்­வ­தைக் கண்டு உவ­கை­கொள்­ளும் இவர், மாண­வர்­க­ளி­ட­மி­ருந்தே ஆசி­ரி­யர்­கள் கற்­றுக்­கொள்ள முடி­யும் என்று பெரு­மி­தத்­து­டன் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் பலனை எதிர்­பா­ரா­மல் கடு­மை­யாக உழைக்­கும் ஆசி­ரி­யர்­கள் இருப்­ப­தா­கக் கூறிய ஆசி­ரி­யர் மலர்­விழி, நல்­லா­சி­ரி­யர் விரு­தின்­மூ­லம் தாம் சிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்பிட்டார்.

மனநிறைவு தரும் ஆக்கப்பூர்வ மாற்றம்

கிட்­டத்­தட்ட 35 ஆண்­டு­க­ளுக்குமுன் தற்­கா­லிக ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றிய திரு கி.மலை­ய­ரசு, ஆசி­ரி­யப் பணி பிடித்­துப்­போ­ன­தால் தொடர்ந்து ஆசி­ரி­ய­ரா­கச் செயல்­பட முடிவு செய்­தார்.

"பெற்­றோர்­க­ளுக்கு அடுத்து, ஆசி­ரி­யர்­கள்­தாம் ஆக்­கப்­பூர்­வ­மா­ன­தொரு தாக்­கத்தை மாண­வர்­க­ளி­டத்­தில் ஏற்­ப­டுத்த முடி­யம் என்­பது என்­னு­டைய நம்­பிக்கை.

மாண­வர்­க­ளின் நல­னில் ஈடு­பாடு, அவர்­க­ளால் சாதிக்க முடி­யும் என்ற நம்­பிக்கை, தொழில் சார்ந்த சுய­முன்­னேற்­றம், தொடர்ந்து கற்­றுக்­கொள்­ளும் ஆர்­வம், காலத்­திற்கு ஏற்ப மாறும் தன்மை ஆகி­யவை சிறந்த ஆசி­ரி­யர்­க­ளுக்­குத் தேவைப்­படு­வ­தா­க திரு மலை­ய­ரசு குறிப்பிட்டார்.

மாணவர்களிடம் அச்சத்தைப் போக்கி, மகிழ்ச்சி தரும்படியான வகுப்பறைச் சூழல் இருந்தால்தான் அவர்கள் விரும்பிக் கற்பர் என்பது இவரது திடமான எண்ணம்.

இளம் ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவும் தமிழை என்றென்றும் ஒரு வாழும் மொழியாக தழைக்கச் செய்யவும் விரும்பும் திரு மலையரசு, கற்பித்தலில் உன்னதத்தை அடைய விரும்புவதாகவும் சொன்னார்.

தனித்துவ வழியில் வளரும் பிறை

யுவான் சிங் உயர்­நி­லைப் பள்ளி மாண­வி­யாக இருந்­த­போது உயர்­தமிழ் வகுப்பிற்காக ஜூரோங் வெஸ்ட் உயர்­நி­லைப் பள்ளிக்குச் சென்றுவந்த குமாரி ரேவதி குண­சேகரன் (படம்), இப்­போது சிறந்த பயிற்சி ஆசி­ரி­யர் விருது பெறும் அள­விற்கு உயர்ந்திருக்கிறார்.

சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழில் கல்­லூ­ரி­யில் வர்த்­தக நிர்­வா­கத் துறை­யில் பட்­ட­யம் பெற்ற குமாரி ரேவதி, அலு­வ­லக வேலை­யில் ஈடு­பட விருப்­ப­மின்றி, பிடித்த வேலை­யைச் செய்­வது என்­ப­தில் உறு­தி­யாக இருந்­தார்.

இத­னை­ய­டுத்து, கடந்த 2016ஆம் ஆண்­டில் என்­டியு - தேசிய கல்­விக் கழக கற்­பித்­தல் கல்வி­மான்­கள் திட்­டத்­திற்கு விண்­ணப்­பித்­தார். அத்­திட்­டத்­தின்­கீழ், தமிழ்­மொழி தொடர்­பான கல்­வித் துறை சார்ந்த இளங்­கலைப் பட்­டப்­ப­டிப்பை நான்காண்­டு­கள் பயின்­றார். அந்த ஆண்டு அப்­பட்­டக்­கல்­விக்கு இவர் மட்­டுமே விண்­ணப்­பித்து இ­ருந்­த­தால், பெரும்­பா­லும் வகுப்­பில் சக மாண­வர்­கள் இல்­லா­மல் தனிப்­பட்ட முறை­யில் விரி­வு­ரை­யா­ளர்­கள் இவ­ருக்கு வகுப்பு எடுக்க வேண்டி­ இ­ருந்­தது.

"அத்­திட்­டத்­திற்­குத் தகுதி பெற்ற முதல் மாணவர் என்­ப­தால் என் தோள்­களில் அதிக எதிர்­பார்ப்­பைச் சுமப்­பது போன்ற உணர்வு ஏற்­பட்­டது. அத்­து­டன், மூன்றாண்­டு­கள் தமிழ்­மொ­ழியைக் கற்­றி­டாத இடை­வெளி இருந்­த­தால் தொடக்­கத்­தில் சில சிர­மங்­களை எதிர்­நோக்­கி­னேன்," என்­றார் 25 வய­தான குமாரி ரேவதி.

ஆயினும், விரி­வு­ரை­யா­ளர்­கள் தம்­மீது வைத்­தி­ருந்த நம்­பிக்­கை­யும் அவர்­கள் புரிந்த உத­வி­யும் இவ­ருக்கு ஊக்­கம் அளித்­தன.

பட்­டப்­ப­டிப்­பின்­போது தைவான் சென்று அங்­குள்ள தொடக்­க­நிலை மாண­வர்­க­ளுக்கு ஆங்­கி­லம் கற்­றுத் தந்­த­தும் வேல்ஸ் நாட்­டின் கார்­டிஃப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஆறு மாத மாண­வர் பரி­மாற்­றத் திட்­டத்­தில் பங்­கேற்­ற­தும் கற்­றல் -கற்­பித்­த­லில் இவ­ருக்­குக் கூடு­தல் அனு­ப­வ­மாக அமைந்­தது.

தேசிய கல்­விக் கழ­கத்­தில் பயின்­ற­போது, மற்ற மாண­வர்­களுக்கு இவர் முன்­மா­தி­ரி­யாகத் திகழ்ந்­த­தாக விரி­வு­ரை­யா­ளர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

கடந்த ஆண்டு பட்­டம் பெற்ற குமாரி ரேவதி, அதன்­பின் கிறைஸ்ட் சர்ச் உயர்­நி­லைப் பள்ளி­யில் தமிழாசி­ரி­யராகச் சேர்ந்­தார்.

அங்கு மாண­வர்­க­ளு­டன் நட்­பு­றவை வளர்த்­துக்­கொள்­வ­தில் இவர் மும்­மு­ரம் காட்டி வரு­கி­றார்.

மாண­வர்­க­ளின் ஐயங்­க­ளைத் தீர்த்து வைப்­ப­தில் கிடைக்­கும் மன­நி­றை­வும் அவர்­க­ளி­ட­மி­ருந்து வரும் நன்­றிக்­கு­றிப்­பு­களும், 'நான் சரி­யான பணி­யைத்­தான் தேர்ந்­தெ­டுத்­துள்­ளேன்' என்பதை உணர்த்­து­வ­தாக உள்­ளன என்­றார் குமாரி ரேவதி.

செய்தி: ப.பாலசுப்பிரமணியம்

கௌரவிக்கப்பட்ட ஆதரவாளர்கள்

நல்லாசிரியர் விருதுக்கு ஆதரவளித்து, உறுதுணையாக இருந்து வருவோர்க்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. அவ்வகையில், 'எம்இஎஸ்' குழுமத்தின் தோற்றுநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அப்துல் ஜலீலுக்கு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார் தமிழ் முரசு ஆசிரியர் ஜே.ராஜேந்திரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!