தொழில்நுட்பம், சுகாதாரப் பராமரிப்பில் புதிய வேலை வாய்ப்புகள்

கொவிட்-19 பெருந்­தொற்­றுச் சூழ­லில் பலர் வேலை­ வாய்ப்புகள் பற்றி கவலை அடைந்­துள்ள நிலையிலும், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, தொழில்­நுட்­பம் போன்ற துறை­களில் புதிய வாய்ப்­பு­கள் உரு­வா­கி­யுள்­ளன என்று கலா­சா­ரம், சமூ­கம், இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் கூறி­யுள்­ளார்.

முன்­னைய தலை­மு­றை­க­ளை­விட இன்றுள்ள­வர்­க­ளுக்கு வெளி­யு­ல­கத் ­தொ­டர்­பு­கள் அதி­கம் என்­ப­தால் அவர்­க­ளுக்கு இன்­னும் பல வாய்ப்­பு­கள் உள்­ளன. வாழ்வின் பல்வேறு கட்­டங்­களில் வெவ்­வேறு தொழில்­க­ளைச் செய்­வது இயல்­பா­கி­விட்­டது என்­றார் அவர்.

தொழில்­நுட்­பம், அர­சாங்­கத் துறை­ போன்றவற்றில் உள்ள தலை­வர்­களை வேலை வாய்ப்பு தேடு­வோ­ரு­டன் இணைக்­கும் 'கரி­யர்ஸ் அன்­மாஸ்க்ட்' எனும் கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சி­யில் அமைச்­சர் நேற்று பேசி­னார். வட­கி­ழக்கு சமூக மேம்­பாட்டு மன்­றம் ஏற்­பாடு செய்த அந்த நிகழ்ச்சி சன்­டெக் மாநாட்டு, கண்­காட்சி நிலை­யத்­தில் இடம்­பெற்­றது.

நேர­டி­யா­க­வும் இணை­யம் வழி­யா­க­வும் சுமார் 250 பேர் அதில் கலந்து­ கொண்­ட­னர்.

தொழில்­து­றை­களும் வர்த்­த­கங்­களும் உரு­மாறி வரு­வ­தால் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­கள் வேலை­களை எவ்­வாறு மாற்­றி­யுள்­ளன என்­பதை ஆராய இது நல்ல நேரம் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

பெருந்­தொற்­றுச் சூழ­லில் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் நல்­வாழ்வை மேம்­ ப­டுத்த அதி­க­மான சமூக சேவை ஊழி­யர்­கள் தேவைப்­ப­டு­கின்­ற­னர் என்று திரு டோங் சுட்­டி­னார். அல்­லது, வழக்­க­மான துறை­களில் உரு­வா­கி­யுள்ள புதிய வேலை­வாய்ப்­பு ­க­ளை ஒருவர் தேடிப் பார்க்­க­லாம்.

உதா­ர­ணத்­துக்கு வங்­கி­களில் இணை­யத்­த­ளம் அல்­லது செய­லி­யில் பய­னீட்­டா­ளர்­கள் பயன்­ப­டுத்­தும் இடைத்­த­ளத்தை வடி­வ­மைக்­கும் வேலை­யில் ஒரு­வர் சேர­லாம்.

அர­சாங்­கத் துறை­யிலும் வேலை­கள் மாறி­யுள்­ள­தைச் சுட்­டிய திரு டோங், தக­வல் பகுப்­பாய்வு, பாது­காப்பு போன்ற திறன்­க­ளைக் கற்றுக் ­கொள்­ளும்­படி இளை­யர்­களை ஊக்­கு­வித்­தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!