உயிர் காக்கும் ‘மெமோகிராம்’ பரிசோதனை

ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­மு­றை­யைக் கொண்­ட­வர் 46 வயது திரு­மதி தைலம்மை காத்­தி­யப்பா. தின­மும் உடற்­ப­யிற்சி செய்­வது, உண­வில் இனிப்பை முற்­றி­லும் தவிர்ப்­பது போன்ற பழக்­கங்­களைக் கடைப்­பி­டித்து வந்­தார். கடந்த ஆண்டு அவ­ருக்கு முதற்­கட்ட மார்­ப­கப் புற்­று­நோய் இருப்­பது உறு­தி­யா­னது.

வேலை கார­ண­மாக 2018ஆம் ஆண்­டில் தமது வழக்­க­மான பரி­சோ­த­னைக்கு அவ­ரால் போக முடி­ய­வில்லை. ஈராண்­டுக்­குப் பிறகு புற்­று­நோ­யால் தமது நெருங்­கிய தோழி அவ­திப்­பட்­ட­தைக் கண்டு, அதே மாதத்­தில் பரி­சோ­த­னைக்­குச் சென்­றார். 'மெமோ­கி­ராம்' பரி­சோ­த­னைக்­குப் பிறகு 'அல்ட்­ரா­ச­வுண்ட்' பரி­சோ­த­னைக்­குச் செல்­லு­மாறு அவ­ருக்கு அறி­வு­றுத்­தி­னார்­கள் மருத்­து­வர்­கள்.

"அல்ட்­ரா­ச­வுண்ட் பரி­சோ­த­னை­யின்­போது அங்கு ஒரு திரை இருந்­தது. எனது மார்­ப­கத்­தில் கட்டி போன்ற ஒன்று இருப்­பதை நான் அந்­தத் திரை­யில் பார்த்­தேன். உடனே ஒரு மார்­ப­கப் புற்று­நோய் நிபு­ண­ரைச் சந்­திக்க எனக்­குப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டது. எனக்கு மார்­ப­கப் புற்­று­நோய் இருப்­பதை அந்த நிபு­ணர் உறு­தி­செய்­தார்.

"எனக்கு அது மறக்க முடி­யாத ஒரு தரு­ண­மாக இருந்­தது. மார்­ப­கப் புற்­று­நோய் எனக்கு இருப்­ப­தாக அவர் கூறி­ய­போது அதை என்­னால் நம்­ப­மு­டி­ய­வில்லை. அந்­தச் சந்­திப்­பில் அவர் கூறிய வேறு எது­வுமே என்­னுள் பதி­ய­வில்லை. 'புற்­று­நோய்' என்ற சொல் மட்­டுமே என் மன­தில் ஒலித்­துக்­கொண்டே இருந்­தது," என்­றார் அவர்.

புற்­று­நோ­யால் மற்­ற­வர்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தைப் பார்த்­தி­ருப்­போம், கேள்­விப்­பட்­டி­ருப்­போம். ஆனால் அதை நாமே அனு­ப­விப்­பது என்­பது முற்­றி­லும் வேத­னைக்­கு­ரிய ஒன்று என்று கூறி­னார் திரு­மதி தைலம்மை.

உட­ல­ள­வில், மன­த­ள­வில், குடும்ப ரீதி­யாக, வேலை ரீதி­யாக அவர் பல மாற்­றங்­க­ளை­யும் பாதிப்­பு­க­ளை­யும் சந்­தித்­தார்.

'கீமோ­தெ­ரபி', 'ரேடி­யோ­தெ­ரபி' சிகிச்­சை­க­ளுக்­குச் சென்­ற­பின் இவர் உடல் சோர்ந்து போய்­வி­டும். தலை­முடி மட்­டு­மல்­லா­மல் நடை, பேச்சு, நினை­வாற்­றல், தோல் அனைத்­தி­லும் அவ­ருக்­குப் பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­டன. சுறு­சு­றுப்­பாக ஓடி­யாடி வேலை பார்த்த அவ­ரால், சமை­ய­ல­றை­யி­லி­ருந்து படுக்கை அறைக்கு நடந்து செல்­வ­து­கூட சிர­ம­மா­கி­விட்­டது.

கீமோ சிகிச்­சைக்­குச் சென்­று­கொண்­டி­ருந்த கால­கட்­டத்­தில் ஒரு­முறை கண­வர் சுப்­பை­யா­விற்­குத் தாம் சமைத்த உண­வைப் பரி­மா­றி­னார். உண­வைச் சாப்­பிட்­டு­விட்டு, "என்ன இதில் உப்பே இல்லை?" என்று கண­வர் கூறி­ய­தற்­குப் பதில் அ­ளிக்க முடி­யா­மல் திகைத்து நின்­றதை நினை­வு­கூர்ந்­தார் திரு­மதி தைலம்மை.

சிகிச்­சை­யி­னால் தன்­னால் ருசி பார்க்­க­வும் முடி­யா­மல் போனதை உணர்ந்­தார் அவர்.

ஓராண்டு காலம் தொடர்ந்து தேவை­யான சிகிச்­சை­க­ளுக்­குச் சென்று இன்று புற்­று­நோ­யி­லி­ருந்து மெல்ல மீண்டு வரு­கி­றார், இரு பிள்­ளை­க­ளுக்­குத் தாயான இவர். இந்­தப் புற்­று­நோயை ஆரம்ப கட்­டத்­தி­லேயே கண்­ட­றிந்­தது தமக்கு நன்­மை­யில் முடிந்­தது என்று அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

மருத்­து­வப் பரி­சோ­த­னை­கள், குறிப்­பாக மெமோ­கி­ராம் பரி­சோ­த­னை­யைப் பல ஆண்­டு­க­ளாக செய்து­கொள்­ளா­மல் சிலர் இருக்­கின்­ற­னர் என்ற செய்தி இவ­ருக்கு அதிர்ச்சி தரு­கிறது.

"நம் உட­லில் ஏற்­படும் மாற்­றம், கண்­க­ளுக்­குப் புலப்­ப­டாது. யாருக்­கும் எப்­போது வேண்­டு­மா­னா­லும் புற்­று­நோய் வர­லாம். மெமோ­கி­ராம் பரி­சோ­தனை மூலம் ஆரம்­பக் கட்ட மார்­ப­கப் புற்­று­நோய் இருப்­பதை உடனே உறு­தி­செய்­யும். அதற்­கான சிகிச்­சையை நாடி நம்­மால் நம் உயி­ரைக் காத்­துக்­கொள்­ள­லாம்," என்­றார் தைலம்மை.

நோயி­லி­ருந்து இவர் மீண்­டு­வரும் பய­ணத்­தில் உள­வி­ய­லா­ளர், தொழில்­முறை சிகிச்­சை­யா­ளர், பாலி­யல் நிபு­ணர், ஊட்­டச்­சத்து நிபு­ணர் ஆகி­யோ­ரும் முக்­கிய பங்கு வகித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!