பெருமைமிகு மரபு

கி.ஜனார்த்தனன்

சிங்­கப்­பூ­ரின் இரண்டு முக்­கிய இந்து சமய விழாக்­களில் ஒன்று தீமி­தித் திரு­விழா. ஏறக்­கு­றைய 200 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தமி­ழர்­கள் சிங்கப்பூரில் குடி­யே­றிய காலந்­தொட்டு தீமி­தித் திரு­விழா பக்­தி­யோடு கொண்­டா­டப்­பட்டு வரு­கிறது.

சவுத் பிரிட்ஜ் சாலை­யில் ஸ்ரீ மாரி­யம்­மன் கோயில் 1827ஆம் ஆண்­டில் எழுப்பப்பட்டது. 1840ஆம் ஆண்டு முதல் இங்கு பூக்­குழி இறங்­கும் நிகழ்வு இடம்­பெற்று வந்­த­தற்­கான சான்­றாக வர­லாற்று ஆவ­ணங்­களும் கறுப்பு வெள்ளை காணொ­ளிப் பட­மும் திகழ்­கின்­றன.

"சிங்­கப்­பூ­ரில் திரு­விழா என்­றால் தைப்­பூ­ச­மும் தீமி­தி­யும்­தான். பல நாள்­க­ளுக்கு முன்பே கொண்­டாட்­டம் தொடங்­கி­வி­டும். கோயி­லுக்­குச் செல்­வோம். பல ஆண்­டு­க­ளா­கவே அம்மா, நான், குடும்­பத்­தில் அனை­வருமே கும்­பி­டு­தண்­டம் போட்டு, பால்­கு­டம் எடுத்து, நேர்த்­திக்­க­டனை நிறை­வேற்றி வரு­கி­றோம். தீமிதி முடிந்தபின் பூக்­கு­ழியை வலம்­வருவோம். பூக்­குழி மூடப்­பட்ட பிறகு­தான் தீபா­வளி தொடங்­கும். வீட்­டில் எண்­ணெய்ச் சட்டி வைப்­போம், புத்­தாடை எடுப்­போம்," என்­றார் பாலர் பள்ளி ஆசி­ரி­யையான நிவேதா லோக­நா­தன், 23.

சீனர்­க­ளின் பாரம்­ப­ரிய, வர்த்­தக மைய­மான சைனாடவு­னின் மத்­திய பகு­தி­யில், இடப்­பு­றம் ஜாமிஆ சூலியா பள்ளி­வா­சலுக்கும் வலப்­புறம் புத்­தர் ஆலயத்திற்கும் நடுவே அமைந்­து உள்ள ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லின் இந்த முக்­கியத் திரு­விழா, இந்­துக்­களோடு இன, சமய பேதமின்றி சிங்­கப்­பூர் மக்­கள் அனை­வரும் பங்­கேற்று மகி­ழும், சுற்­றுப்­பயணி­க­ளை­யும் ஈர்க்­கும் நிகழ்வாகத் திகழ்கிறது.

மும்மாதப் பெருவிழா

தீமிதித் திரு­விழா ஒரு­நாள் விழா அல்ல என்று கூறிய ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லின் மூத்த அர்ச்­ச­க­ரான சந்தி­ர­சே­கர், இது கொடி­யேற்­றத்­தில் தொடங்கி, கொடி­யிறக்­கும் வரை­யில் கிட்­டத்­தட்ட மூன்று மாத கால விழா என்று குறிப்­பிட்­டார். இதன் சிறப்­பம்­சம் என்­ன­வெ­னில், திரௌ­பதை அம்­ம­னுக்கு உகந்த நாள் திங்­கட்­கி­ழமை என்­ப­தால், விழாவின் முக்­கி­ய­மான நிகழ்­வு­கள் எல்­லாம் அந்­நா­ளில்­தான் நடை­பெ­றும் என்­றார் திரு சந்­தி­ர­சே­கர்.

காலங்­கா­ல­மாக மக்­கள் பெருந்­தி­ர­ளா­கப் பங்­கேற்­கும் இப்­பெ­ரு­விழா, கடந்த ஈராண்­டு­க­ளாக கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக சிறிய அள­வில் நடை­பெற்று வரு­கிறது. பாது­காப்­புக் கார­ணங்­களுக்­காக பார்­வை­யா­ளர்­கள், பங்­கேற்­பா­ளர்­களின் எண்­ணிக்­கை­யும் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனி­னும், மரபை விட்­டு­வி­டா­மல் சடங்­கு­கள் வழக்­கம்­போல் இந்த ஆண்­டும் நடை­பெற்று வரு­கின்­றன.

ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லில் தனிச் சன்னிதி­யில் குடி­கொண்­டி­ருக்­கும் திரௌபதை, மகா­பா­ர­தத்­தின் நாயகி; பஞ்ச பாண்­ட­வர்­க­ளின் மனைவி; தர்­ம­ரின் பட்­டத்து அரசி. பார­தப் போருக்கு கார­ண­மாக விளங்­கிய துணி­வும் உறு­தி­யும் மிக்க பெண். இப்பெருமகளை மையப்­ப­டுத்­தியே தீமி­தித் திரு­விழா நடை­பெ­று­கிறது.

பெரி­யாச்சி பூசை

திருவிழாவின் முதல் நிகழ்வாக பத்ரகாளியின் மறுவடிவம் என்று கூறப்படும் பெரியாச்சி அம்மனுக்கு வழிபாடு நடத்தப்படும். அன்று தலைமைப் பண்டாரம் வேப்பிலைக் கரகம் சுமப்பார், தீச்சட்டி ஏந்துவார்.

ஆஞ்­ச­நே­ய­ரின் உரு­வம் பதித்த கொடி ஏற்­றப்­பட்டு, விழா தொடங்­கும். தொடர்ந்து திரௌ­பதை திருக்­கல்­யா­ணம் நடைபெறும். அர்­ஜுனன் தன் அன்னை குந்­தி­தே­வியிடம் பாஞ்­சாலியை அறி­மு­கம் செய்த பின்னர், மண­விழா ஏற்­பா­டு­கள் நடை­பெ­றும். பாண்­ட­வர்­கள் - பாஞ்­சாலி மண­விழா வெகு­சி­றப்­பாக நடை­பெ­றும். இந்­நி­கழ்­வு­கள் மூன்று வாரங்­கள் தொடர்ந்து ஒவ்­வொன்­றாக இடம்­பெ­றும்.

மகா­பா­ர­தப் போரை ஒட்டி விழா நிகழ்­வு­கள் நடை­பெ­றும். பாண்­ட­வர்­க­ளுக்­கும் கௌர­வர்­க­ளுக்­கும் 18 நாள்­கள் நடந்த முக்­கிய நிகழ்­வு­கள் நாட­க­மாக நடத்­தப்­படும். அக் காலத்­தில், தீமி­தித் திரு­வி­ழா­வின்­போது ஒவ்­வொரு நாளும் மகாபார­தம் வாசிப்­பர் என்று நினைவு­கூர்ந்­தார் மூத்த தொண்­டூ­ழி­யர் ஒரு­வர்.

அர்ஜுனன் தபசு

போர் தொடங்­கி­ய­தும் திரௌ­பதை அம்­மன் வண்­ணப்­பு­ட­வை­க­ளை­யும் அலங்­கா­ரங்­க­ளை­யும் துறந்து, ஒற்றை மஞ்­சளாடை­யி­ல் இருப்­பார். அவை நடு­வில் தன்னை அவமதித்த துரி­யோ­த­ன­னின் தொடை­யைப் பிளந்து அவன் ரத்­தத்­தைத் தட­வும் வரை­யில் கூந்­தல் முடிக்க மாட்­டேன் எனச் சப­தம் எடுத்து, தலை­விரி கோல­மா­கவே இருப்­பார்.

பஞ்ச பாண்­ட­வர்­கள் வன­வா­சத்­தின்­போது, சிவ­பெ­ரு­மா­னி­டம் ஆயு­தம் பெற அர்­ஜுனன் தவம் செய்­யும் 'அர்ஜுனன் தபசு' ஒரு முக்கிய நிகழ்வு.

அர்ஜுனனின் தவத்­தைக் கலைக்க அசு­ரன் ஒரு­வன் காட்­டுப்­பன்றி உருவெடுத்து பரணை முட்­டும் காட்­சி­யும், அர்ஜுன­னின் கடும் தவத்­தில் மகிழ்ந்து, சிவ­பெரு­மான் அவ­ருக்கு ஆற்­றல்­மிக்க பாசு­பதாஸ்­தி­ரத்தை அளிப்­பதும் இந்த ­நி­கழ்­வில் சித்­தி­ரிக்­கப்­படும். அர்ஜுனனை மயக்­க துரி­யோ­த­ன­னால் அனுப்­பப்­படும் மோகி­னி வரும் காட்­சி­கள் முன்பு இடம்பெற்றன என்றார் ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லின் செய­லா­ளர் கதி­ரே­சன் சண்­மு­கம்.

அரவான் களப்பலி

போர் தொடங்­கு­முன் அர்ஜுன­னுக்­கும் நாக கன்னிக்கும் பிறந்த நல்லரவன் என்ற அர­வான், பாண்­ட­வர்­கள் போரில் வெல்ல வேண்­டும் என்­ப­தற்­காக காளிக்குத் தன்­னையே பலி­கொ­டுப்­பார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!