நூறு ஊழியர்களுக்கு தீபாவளி விருந்து

கொவிட்-19 சூழ­லால் வெளியே செல்ல முடி­யா­மல் தங்களுடைய தங்­குவிடு­தி­க­ளி­லேயே ஓராண்­டுக்கு மேலாக அடைப்பட்டிருக்கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் முகத்­தில் புன்­ன­கை­யைக் கொண்டுவர­வேண்­டும் எனும் நோக்­கில் 100 வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு மதிய உணவு வழங்­கி­யது ஞானா­னந்­தம் மி‌‌ஷன் சிங்­கப்­பூர் கிளை.

'அற்­றார் அழி பசி தீர்த்­தல் அஃ­தொ­ரு­வன் பெற்­றான் பொருள்­வைப் புழி' என்­னும் திரு­வள்­ளு­வர் வாக்­கிற்கு ஏற்ப, 'உண்டி கொடுத்­தோர், உயிர் கொடுத்­தோர்' என்று அன்­ன­தா­னத்­தின் சிறப்பை குறிப்­பி­டு­வர் நம் முன்­னோர்.

'சை ஜூ கன்ஸ்ட்­ரக்­‌ஷன்ஸ்' நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றும் நூறு ஊழி­யர்­க­ளுக்கு அவர்­கள் பணி புரி­யும் மரினா சவுத் வட்­டா­ரத்­தில் உள்ள கட்­டு­மா­னத் தளத்­தி­லேயே மதிய உணவு வழங்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. அனை­வ­ருக்­கும் சைவ பிரி­யா­ணி, இனிப்­புப் பல­காரங்­கள் வழங்­கப்­பட்­டன.

தம் சொந்­தங்­களை விட்­டுப் பிரிந்து, கடந்த ஒன்­றரை வருட கால­மாக இவ்­வு­லகை ஆட்­டிப் ­படைத்து வரும் கொரோனா நோயின் தாக்­கத்­தால் வெளி­யே­கூடச் செல்ல முடி­யா­மல் தவித்­துக்­கொண்­டி­ருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு, தீபா­வளி திரு­நாளை­யொட்டி, ஒரு வேளை உணவு மற்­றும் இந்­திய இனிப்புப் பல­கா­ரங்­களை கொடுப்­ப­தில் மிக்க மகிழ்ச்சி அடை­கி­றோம்," என்றார் ஞானா­னந்­தம் மி‌‌ஷன் அமைப்பின் நிர்­வாக இயக்­கு­னரான பூஜ்­ய­ஸ்ரீ நிரஞ்­ச­னா­னந்த கிரி சுவா­மி­கள்.

"மக்­க­ளின் முகத்­தில் குறிப்­பாக நலிந்­தோ­ரின் முகத்­தில் சிரிப்­பைக் கொண்டு வரு­வதே எங்­கள் அமைப்­பின் முக்­கிய இலக்கு.

"இந்த விழாக் காலத்­தில் குறிப்­பாக தங்­க­ளது குடும்­பங்­க­ளை­யும் அன்­புக்­கு­ரி­ய­வர்­களையும் விட்டுப் பிரிந்து இருக்­கும் 100 வெளி­நாட்டு நண்­பர்­க­ளின் முகத்­தில் சிரிப்­பைக் கொண்டு வர வாய்ப்பு கிடைத்­த­தில் பெரு­ம­கிழ்ச்சி அடை­கி­றோம். எதிர்­கா­லத்­தில் மேலும் பல நிகழ்வு­ கள் மூலம் இன்­னும் பல­ரு­டன் அன்­பைப் பகிர்ந்துகொள்ள விழை­கி­றோம்,'' என்று மின்­னி­யல் பொறி­யி­யல் நிபு­ண­ரா­கப் பணிபுரி­யும் ஞானா­னந்­தம் மி‌‌ஷன் சிங்­கப்­பூர் கிளை­யின் உள்­ளூர் நிர்­வாக இயக்கு­ந­ரும் மின் பொறி­யி­யல் நிபு­ண­ரு­மான டாக்­டர் கஜன், 41, கூறினார். வெளி­நாட்டு ஊழி­யர்­கள் நிலை­யத்­து­டன் (MWC) இணைந்து ஞானா­னந்­தம் மி‌‌ஷன் சிங்­கப்­பூர் கிளை இந்த உணவு வழங்­கும் நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தது. இதற்­குப் பல நண்­பர்­களும் உதவி செய்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!