புத்தாக்கத்துடன் செயல்படும் இளம் வர்த்தகர் ஷரீன்

ஒரு­முறை ஹஜ்­ஜுப் பெரு­நாளை முன்­னிட்டு தற்கா­லி­கக் கடை (popup booth) ஒன்றை அமைத்து மரு­தாணி இடும் சேவையை வழங்க தயா­ராக இருந்த 22 வயது ஷரீன் பேகத்­திற்கு (படம்) ஏமாற்­றமே மிஞ்­சி­யது. கடை திறந்து மூன்று நாட்­க­ளா­கி­யும் வியா­பா­ரம் நடக்­க­வில்லை.

இருப்­பி­னும், இந்­தத் தோல்வி அவ­ரது வர்த்­த­கப் பய­ணத்­திற்­குப் பாட­மாக அமைந்­தது.

தற்­போது மரு­தாணி கலை மட்­டும் அல்ல அணி­க­லன்­கள் குறிப்­பாக, கையால் செய்­யப்­பட்ட தோடு­க­ளைத் தயா­ரித்து இணை­யம் மூலம் விற்­பனை செய்து வரு­கி­றார் ஷரீன்.

தொடக்­கப்­பள்ளி காலத்­தி­லி­ருந்தே தமது பாடப்­புத்­த­கங்­களில் பூக்­கள் வரைந்து பழ­கிய இவர், இப்­போது அழ­கிய மரு­தாணி வடி­வ­மைப்­பு­களை மிக எளி­மை­யாக இடும் ஆற்­றல் கொண்­டுள்­ளார். சிங்­கப்­பூ­ரில் பல மரு­தாணி கலை­ஞர்­கள் இருந்­தா­லும், தனது மரு­தாணி வர்த்­த­கத்­தைத் தனித்­து­வப்

படுத்த புது­மையை நாடி­யி­ருக்­கி­றார் இவர். 'ஜாகுவா ஜெல்' என்ற இயற்கை வகை கறுப்பு மையைப் பயன்­ப­டுத்தி மரு­தாணி வடி­வங்­களை வரைய துவங்­கி­யி­ருக்­கி­றார் ஷரீன். கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக ஷரீ­னின் மரு­தா­ணி­யி­டும் வர்த்­த­கம் பெரு­ம­ளவு பாதிப்­புக்­குள்­ளா­னது. வாடிக்­கை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை குறையத் தொடங்­கி­யது. நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு மரு­தாணி இட முடி­யாதநிலை ஏற்­பட்­டது. இதற்­குப் புத்­தாக்­கச் சிந்­த­னை­யு­டன் தீர்வு கண்­டார் ஷரீன். மரு­தாணி வடி­

வ­மைப்பு ஸ்டென்­சில் விற்­

ப­னையைத் தொடங்­கி­னார். பெண்­கள் வீட்­டி­லி­ருந்­த­வாறு இந்த ஸ்டென்­சில்­க­ளைக் கொண்டு மரு­தாணி இட்டுக் கொள்­ள­லாம். மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப தாமும் மாறிக்­கொண்டு தமது வர்த்­த­கத்தில்­

புது­மையைப் புகுத்­து­கி­றார் ஷரீன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!