உடற்குறையுள்ளோர் எளிதாக நடமாட ஏற்பாடு

உடற்குறையுள்ளோர் எளிதாக நடமாட ஏற்பாடு

2 mins read

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கக் குடி­யி­ருப்­புப் பேட்­டை­க­ளி­லும் மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தி­லும் உடற்­

கு­றை­யுள்­ளோர் எளி­தாக நட­மா­டத் தேவை­யான ஏற்­பா­டு­கள் செய்­யப்

­ப­டு­கின்­றன.

அதற்­குத் தேவை­யான உள்­

கட்­ட­மைப்­பு­கள் மேம்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. உடற்­கு­றை­யுள்­ளோர் இலகுவாக நட­மாட வகை செய்­யும் கட்­ட­மைப்பு எனும் புதிய திட்­டத்தை தேசிய வளர்ச்சி அமைச்­சர்

டெஸ்­மண்ட் லீ நேற்று அறி­வித்­தார்.

பரா­ம­ரிப்­பா­ளர்­கள் தலை­மை­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் திட்­ட­மான CaringSG. திட்­டத்­தின் அறி­முக விழா­வில் இந்த அறி­விப்பு செய்­யப்­பட்­டது.

பொது இடங்­களில் உடற்­கு­றை­யுள்­ளோர் எளி­தாக, வச­தி­யாக நட­மா­டு­வதே இத்­திட்­டத்­தின் இலக்கு. மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தில் நட­மா­டும்­போது உடற்­கு­றை­யுள்­ளோர் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­கள் அடை­யா­ளம் காணப்­படும்.

"மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தில் பலர் வேலைக்­குச் செல்­கின்­ற­னர். ஆனால் அந்த வட்­டா­ரத்­தில் வேலை செய்­யும், வேலை செய்ய விரும்­பும் உடற்­கு­றை­யுள்­ளோர் ஓர் இடத்­தி­லி­ருந்து இன்­னோர் இடத்­துக்­குச் செல்ல சிர­மப்­ப­டு­கின்­ற­னர்," என்று அமைச்­சர் லீ தெரி­வித்­தார்.

உடற்­கு­றை­யுள்­ளோர் எளி­தில் நட­மா­டத் தேவை­யான வச­தி­களை அமைத்­துத் தரு­வது குறித்து உடற்­கு­றை­யுள்­ளோர் சங்­கம், உடற்­

கு­றை­யுள்­ளோர் நல்­வாழ்­வுச் சங்­கம் ஆகி­ய­வற்­று­டன் இதர சமூக அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்­தும் உடற்

­கு­றை­யுள்­ளோ­ரி­ட­மும் கருத்து

சேக­ரிக்­கப்­படும்.

குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­க­ளி­லும் உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­குத் தேவை­யான வச­தி­களை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

முத­லில் பூன் லே வட்­டா­ரத்­தி­லும் அத­னைத் தொடர்ந்து நீ சூன் சென்ட்­ர­லி­லும் அதற்­கான பணி­கள் மேற்­கொள்­ளப்­படும்.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கக் குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் குடி­யி­ருப்­பா­ளர்­கள் எளி­தில் நட­மா­டு­கின்­ற­னர் என்­ற­போ­தி­லும் உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­குக் கூடு­தல் வச­தி­களை ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டும் என்­றார் அமைச்­சர் லீ.

உடற்­கு­றை­யுள்­ளோர் நட­மாட வச­தி­யாக மாற்­றங்­க­ளைச் செய்ய ஏறத்­தாழ 150 கட்­ட­டங்­கள் கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தின் $40 மில்­லி­யன் நிதி­யைப் பயன்­ப­டுத்­தி­இருப்­ப­தாக திரு லீ தெரி­வித்­தார்.

இந்த நிதி 2007ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.