தளர்வுகள் தந்துள்ள நம்பிக்கை

படங்கள்:

திமத்தி

டேவிட்

செய்தி:

பாவை சிவக்குமார்

ஈராண்­டு­க­ளுக்­கு­முன் சீனா­வில் தோன்றி, உல­கையே உலுக்­கி­வ­ரும் கொவிட்-19 கிரு­மி­யால் மனி­த­குலம் எதிர்­கொண்டு வரும் சிர­மங்­களைச் சொல்லி மாளாது!

அதனால் பாதிக்கப்படாத நாடு, அதன் தாக்கமில்லாத துறை எதுவுமில்லை என்று சொல்­லும் அளவிற்குப் படா­த­பாடு படுத்தி வரு­கிறது.

மக்­கள் வெளி­யில் தலை­காட்­டவே அஞ்­சும் நிலையை ஏற்­ப­டுத்தி­விட்­டது கொரோனா பர­வல்.

அந்த அச்­சத்­தா­லும் அக்­கி­ருமி­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் அர­சாங்­கத்­தின் அறி­விப்­பு­க­ளா­லும் சாரை சாரை­யாக மக்­கள் வந்­து­செல்­லும் லிட்­டில் இந்­தியாவிற்கு­வந்துசெல்வோர் எண்ணிக்கை வெகு­வா­கக் குறைந்­து­விட்­டது.

இந்­நி­லை­யில், சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில் 85 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ளதை அடுத்து, அரசாங்கம் படிப்படியாகக் கட்டுப் பாடுகளைத் தளர்த்தி வருகிறது.

அவ்­வ­கை­யில், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருந்­தால் உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் காப்­பிக் கடை­களி­லும் ஐவர் சேர்ந்து உண்­ண­லாம்; வெளியிடங்களில் அதி­க­பட்­சம் ஐந்து பேர் ஒன்­று­கூ­ட­லாம்; வீடு­களில் ஒருநாளைக்கு விருந்­தி­னர்­ ஐவரை வர­வேற்­க­லாம் என்பன போன்ற தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

இருப்­பி­னும், லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­கள், தங்­க­ளின் வணி­கத்­தில் பெரி­தாக எது­வும் மாற்­றம் இல்லை என்று தெரி­வித்­த­னர்.

“முன்பு திரு­மண நிகழ்­வு­களில் ஏறக்­கு­றைய ஆயி­ரம் பேர் கலந்து­கொள்­வர். அதற்கு ஏற்­றாற்­போல், ஆயி­ரம் முழம் பூக்­களை வாங்கிச் செல்­வர். இப்­போது நூறு பேர் மட்­டுமே கலந்­து­கொள்ள முடி­யும் என்­றால் நூறு முழம் பூவைத்­தானே வாங்­கு­வார்­கள்?” என்­றார் ‘ஓம் சிவ­சக்தி’ பூக்­கடை உரி­மை­யா­ளர் திரு முரு­கே­சன் வேலு­மணி.

சென்ற ஆண்­டைக் காட்­டி­லும் இந்த ஆண்டே கொவிட்-19 பர­வல் தங்­க­ளது வணி­கத்­தில் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­களில் பல­ரும் கூறு­கின்­றனர்.

“இந்த ஆண்டு சிங்­கப்­பூ­ரர்­களை­விட பெரும்­பா­லும் மலே­சியர்­களே எங்­க­ளது கடை­களில் துணி­ம­ணி­கள் வாங்கினர்,” என்று தேக்கா நிலை­யத்­தின் செய­லா­ள­ரும் பூஜா துணிக்­க­டை­யின் உரி­மை­யா­ள­ரு­மான திரு அஜித் குமார் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் அதி­க­மாக இணை­யம் வழி­யா­கத் துணி­ம­ணி­களை வாங்கு­வ­தால் தங்­க­ளது வியா­பா­ரம் சற்று மந்­தம் அ­டைந்­துள்­ளது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

“எங்­க­ளால் முடிந்­த­வரை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குச் சிறந்த சேவையைத் தொடர்ந்து வழங்­கி வரு­கி­றோம். எங்களது சேவைக்­கா­கவே வாடிக்­கை­யா­ளர்­கள் பலர் எங்­க­ளுக்குத் தொடர்ந்து ஆத­ரவு அளிக்­கி­றார்­கள்,” என்று சொன்­னார் அணி­க­லன்­கள் வணி­க­ரான திரு க.குண­சே­க­ரன்.

நேற்று முன்­தி­னம் மாலையில் தேக்கா நிலை­யத்­திற்­குத் தமிழ் முரசு சென்­றி­ருந்­த­போது, அங்­கு இ­ருந்த உண­வங்­காடி நிலை­யத்­தில் கூட்­டம் குறை­வாக இருந்­த­தைக் காண முடிந்­தது.

“இன்று வெள்­ளிக்­கி­ழமை போலவே இல்லை!” என்று அங்கு பிரி­யா­ணிக் கடை வைத்து நடத்தி­வரும் திரு­வாட்டி சித்தி ஜுபை­தா­வும் அவ­ரின் மகள் ரதி­யா­வும் வருத்­தத்­து­டன் கூறி­னார்.

கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு இன்­னும் ஒரு ­வாரம்­கூட ஆக­வில்லை என்­ப­தால் இனி படிப்­ப­டி­யாக மக்­கள் வருகை கூடும் என்­றும் இவ்­வார இறு­தி­யி­லேயே அத­னைக் காண­லாம் என்­றும் லிட்டில் இந்­தியா வணி­கர்­கள் நம்­பிக்­கை­யு­டன் கூறி­னர்.

வணிகர்கள் வரவேற்பு

கொவிட்-19 சூழல் காரணமாக விடுதிகளைவிட்டு வெளியேற வெளிநாட்டு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் மெல்ல மெல்லத் தளர்த்தப்பட்டு வருவதை லிட்டில் இந்தியா வணிகர்கள் வரவேற்றுள்ளனர். இப்போது வாரந்தோறும் 21,000 வெளிநாட்டு ஊழியர்கள் வெளியில் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், சிங்கப்பூர் -மலேசியா இடையே தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்கான தரைவழி ‘விடிஎல்’ பயணத் திட்டமும் நாளை 29ஆம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது. முதற்கட்டமாக நாளொன்றுக்கு 2,880 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றாலும் வாராந்திர அடிப்படையில் அந்த எண்ணிக்கை மறுஆய்வு செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்து இருக்கிறது. இவற்றுடன், இந்தியா உள்ளிட்ட மேலும் பல நாடுகளுக்கு மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்படவுள்ளன. இந்தத் தளர்வுகளையும் புதிய அறிவிப்புகளையும் படிப்படியாகப் பழைய நிலைக்குத் திரும்புவதற்கான முதற்படியாகக் கருதும் வணிகர்களும் தொழில்துறையினரும், தங்களுக்கு இனி நல்லகாலம்தான் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர்!

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!