சிங்கப்பூர் கடந்த மூன்று ஆண்டுகளாக கிருமித்தொற்று ஏற்படுத்திய கசப்பான அனுபவங்களைத் தாண்டி வந்துள்ளது. கொள்ளைநோய்க்குப் பிந்திய காலம் எப்படியிருக்கும் என்பதை கணிக்கவும் முடியவில்லை. இந்நிலையில் கிருமித்தொற்றுடன் வாழ்ந்து பொருளியலை மீட்டெடுக்கும் முயற்சிகளில் சிங்கப்பூர் இறங்கியுள்ளது. வர்த்தக நடைமுறைகளை உருமாற்றுவது, வேலை வாய்ப்புகளை கவர்ச்சிகரமாக்குவது, மின்னிலக்க தொழில்நுட்பங்களைப் புகுத்தி காலத்திற்கு ஏற்ப மாறுவது, பசுமைச் சூழலை உருவாக்குவது, உலக நாடுகளுக்கு சிங்கப்பூரை ஒரு மையமாக உருவாக்குவது, குறைந்த வருமானக் குடும்பங்களின் சிரமங்களைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் அது கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு ஏற்ப இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் முக்கியமாக எட்டு அம்சங்கள் இடம்பெறும் என எதிபார்க்கப்படுகிறது.
வரவுசெலவுத் திட்ட எதிர்பார்ப்புகள்
1 mins read

