மனிதவளப் பிரச்சினையும் அதிகரித்துள்ள ஊழியர் செலவினமும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு பெருங்கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.
வெளிநாட்டு ஊழியர்கள் மீதான கட்டுப்பாடுகள், தங்களுடைய நிறு வனங்களுக்குத் தேவையான திறன் களைக் கொண்ட ஊழியர்களைக் கண்டறிவதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றால் சிங்கப்பூர் நிறுவனங்கள் ஊழியர் நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. இதனால் ஊழியர் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்கும் கொள்கைகள் அறிவிக்கப்படலாம் என்று பரவலாக நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. மனிதவளப் பற்றாக்குறையால் இந்திய உணவகங்களும் ெபரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கோமளாஸ் உணவகங்களின் ஆர்.டி. சேகர் தெரிவித்தார். பல இடங்களில் இந்திய உணவகங்கள் மூடப்பட்டன.
மேலும் சில மூடப்படும் சூழ்நிலையில் உள்ளன என்றார் அவர்.
எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் சில நிவாரணங்கள் உடனடியாகக் கிைடக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும் 2022ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளுக்கும் வளர்ச்சிக்கும் ஆதரவான கொள்கை மாற்றங்களை அரசாங்கம் அறிவிக்கும் என நிறுவனங்கள் நம்பிக்கையோடு உள்ளன. கடந்த மாதம் சிங்கப்பூர் கணக்காய்வாளர் கழகத்தில் நடைபெற்ற வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் அதிகரித்துள்ள தொழில் செலவுகளும் ேதவையான திறன்கொண்ட ஊழியர்களைக் கண்டறிவதும் நிறுவனங்களுக்கு முக்கிய சவால்களாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை கொவிட்-19 எல்லைக் கட்டுப்பாடுகளும் வெளிநாட்டு ஊழியர்கள் மீதான கட்டுப்பாடுகளும் மேலும் மோசமாக்கியுள்ளன.

