குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஆதரவு

குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஆதரவு

1 mins read

கொள்­ளை­நோய்க்­குப் பிந்­திய காலம் எப்­ப­டி­யி­ருக்­கும் என்­பது தெரி­ய­வில்லை. இந்­தச் சூழ்­நி­லை­யில் பொருள் சேவை வரி உயர்வு குடும்­பங்­க­ளின் சுமையை அதி­க­ரிக்­க­லாம். இதன் கார­ண­மாக இவ்­வாண்டு வரவு செல­வுத் திட்­டத்­தில் குடும்­பங்­க­ளின் சிர­மத்­தைக் குறைக்­கும் சமூக ஆதரவுத் திட்டங்கள் இருக்­க­லாம் என எதிர்­பார்க்­கப்படு­கிறது.

மரின்­ ப­ரேட் குழுத் தொகுதி நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரும் என்­டி­யுசி ஃபேர்பி­ரை­சின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யு­மான சியா கியான் பெங், வாழ்க்­கைச் செல­வி­னம் தனிப்­பட்ட விவ­கா­ரம் என்று குறிப்­பிட்­டுள்­ளார். இருந்­தா­லும் அனை­வ­ருக்­கும் செல­வு­க­ளைக் குறைக்க உத­வும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்­கம் வெளி­யி­ட­வில்லையென்­றால் நான் ஆச்­ச­ரி­யப் ­ப­டு­வேன் என்று தெரி­வித்­துள்­ளார்.