வேலை மறுவடிவமைப்பு, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்

வேலை மறுவடிவமைப்பு, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்

1 mins read

இவ்­வாண்­டின் வரவுசெல­வுத் திட்­டத்­தில், வேலை­களில் ஆர்­வத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான மறு­வ­டி­வ­மைப்­பில் நிறு­வ­னங்­க­ளுக்கு அதிக உதவி கிடைக்­க­லாம்.

மேலும் நடுத்­தர வய­தில் வேலை தேடு­வோரை வேலை­யில் அமர்த்­து­வ­தற்­கான ஊக்­கு­விப்­பு­கள் இருக்­கும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், பொரு­ளி­யல் நிபு­ணர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.

அதே சம­யத்­தில் ஊழி­யர்­கள் தங்­க­ளு­டைய திறன்­களை மேம்­ப­டுத்­தும் திட்­டங்­களும் இடம்­பெ­றக்­கூ­டும்.

புக்­கிட் பாஞ்­சாங் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான லியாங் எங் ஹுவா, வேலை­களை மறு­வ­டி­வ­மைப்­ப­தில் நிறு­வ­னங்­க­ளுக்கு அர­சாங்­கம் உதவ வேண்­டும் என்று தெரி­வித்­துள்­ளார்.

அப்­போ­து­தான் உள்­ளூ­ரில் வேலை தேடு­வோரை அதி­கம் ஈர்க்க முடி­யும் என்று கூறிய அவர், உள்­ளூர் மனி­த­வ­ள­மும் பெரு­கும் என்று குறிப்­பிட்­டார்.

ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­து­வ­தற்­கான ஊக்­கு­விப்­பு­கள் மட்­டும்­அல்­லா­மல் உரிய வேலை­யைக் கண்­ட­றிந்து வேலை­களில் அமர்த்­தும் ஏற்­பா­டு­களை அர­சாங்­கம் மேம்­ப­டுத்­த­லாம் என்று அவர் யோசனை கூறி­யி­ருந்­தார்.

தேசிய ெதாழிற்­சங்­க காங்­கி­ர­சின் துணைத் தலை­வ­ரான அப்­துல் சமத் அப்­துல் வஹாப், ஊழி­யர் அணி­யில் சிங்­கப்­பூ­ரர்­கள் வலு­வாக இடம்­பெ­றும் இயக்­கம், சாத­க­மான வேலை வாய்ப்­பு­களை உறுதி செய்­வ­தோடு அது நல்ல சம்­ப­ளத்­தை­யும் எதிர்­கா­லத்­தை­யும் அடைய உத­வும் என்­றார்.