செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட கூடுதல் வரி

செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட கூடுதல் வரி

1 mins read

2022 வரவுசெல­வுத் திட்­டத்­தில் செல்­வத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு கூடு­தல் வரி அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­லாம்.

இது, அர­சாங்க நிதி வளத்­தைப் பெருக்­கும். மேலும் மக்­க­ளி­டையே உள்ள ஏற்­றத் தாழ்­வு­க­ளைக் குறைக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதில் சொத்து வரி உயர்வை அமல் ­ப­டுத்­து­வது மிக­வும் எளிது. ஆனால் எந்­த­வி­த­மான வரி உயர்­வாக இருந்­தா­லும் அது மக்­க­ளுக்கு அதிக சுமையை ஏற்­ப­டுத்­தக்கூடாது என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர். நிதிக்கான இரண்­டாம் அமைச்­ச­ரான இந்­தி­ராணி ராஜா, கடந்த நவம்­பர் மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் பேசி­ய­போது சிங்­கப்­பூ­ருக்கு செல்வ வரி அவ­சியமா என்­பது கேள்­வி­யல்ல, அத்­த­கைய வரி­களை எளி­தில் தவிர்க்க முடி­யா­த­படி வலு­வாக அமல்­ப­டுத்­து­வதே முக்­கி­யம் என்று குறிப்­பிட்டு இருந்­தார். பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜேமஸ் லிம் தாக்­கல் செய்த தீர்­மா­னத்­துக்கு பதி­ல­ளித்த அவர், செல்­வந்­தர்­க­ளுக்கு 0.5 முதல் 2 விழுக்­காடு செல்வ வரியை விதிக்­கும் உத்­தேச திட்­டத்தை வெளி­யிட்­டார்.

இத்­த­கைய வரி, சிங்­கப்­பூ­ரின் வரு­மான ஆதா­ரங்­களை பன்­மு­கப்­ப­டுத்­த­வும் ஏற்­றத் தாழ்­வுக­ளைக் குறைக்­க­வும் உத­வும் என்று அவர் கூறி­யி­ருந்­தார்.