2024ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூரின் திருத்தப்பட்ட கரிம வரி விகிதம் இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படலாம். இதன் மூலம் 2030ஆம் ஆண்டு வரை கரிம விலை உயர்வு எந்த அளவுக்கு இருக்கலாம் என்பதை கணிக்க முடியும்.
நாட்டை பசுமையான சூழலுக்கு மாற்றும் ஆதரவு நடவடிக்கைகளும் இடம்பெறக்கூடும் எனவும் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எரிசக்தியை அதிகளவு சேமிக்கும் நடைமுறைகளையும் இயந்திரங்களையும் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புகளை வழங்குவது அத்தகைய ஆதரவு நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கலாம்.
குடியரசில் தற்போது குறைந்தது 25,000 டன் கரியமில வாயுவை வெளியேற்றும் நிறுவனங்களுக்கு ஐந்து வெள்ளி வரி வசூலிக்கப் படுகிறது. ஆனால் இது, மற்ற நாடுகளைவிட மிகவும் குறைவு. உதாரணமாக, அயர்லாந்தில் ஒரு டன் கரிம வெளியேற்றத்துக்கு 41 யூரோ (S$63) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சுவீடனில் ஒரு டன் கரிம வெளியேற்றத்துக்கு ஆக அதிகமாக 1,200 குரோனா (S$172) கட்டணமாக இருந்து வருகிறது.
இது, சிங்கப்பூரின் கரிம வெளியேற்ற வரியுடன் ஒப்பிட்டால் பத்து மடங்கு அதிகம்.

