சிங்கப்பூரின் கொள்கை வகுப்பாளர்கள், மின்னிலக்க உருமாற்றத்துக்கு மேலும் நடவடிக்கைகளை இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிப்பார்கள் என கூறப்படு கிறது.
மாறிவரும் வர்த்தகச் சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை புகுத்த நிறுவனங்களுக்கு பல்வேறு உதவிகளை எதிர்பார்க்கலாம்.
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், கொள்ளைநோய் பாதிப்புகளால் இன்னமும் சிரமங்களிலிருந்து மீளாத துறைகளுக்கு ஆதரவு வழங்குவோடு சிங்கப்பூரர்களின் செலவுக் கவலைகளை நிர்வகிக்க உதவியும் கொள்ளைநோய்க்குப் பிந்திய காலகட்டத்தில் சிங்கப்பூரை வலுவான நிலையில் வைத்திருக்கும் அம்சங்களும் இடம்பெறும் எனறு கோடி காட்டியிருந்தார்.
யுஓபி பொருளியலாளர் பார்பனபஸ் கான், உலகின் தொழில்நுட்பம், புத்தாக்கம், நிறுவனம் ஆகிய மூன்று கூறுகளில் சிங்கப்பூரை வலுவாக்க இடம்பெறும் முயற்சிகளுக்கு அதிக நிதியை அரசாங்கம் செலவழிக்கலாம் என்று கூறியுள்ளார்.

