நினைத்தாலே குலைநடுங்கும் நினைவுகள்

நினைத்தாலே குலைநடுங்கும் நினைவுகள்

1 mins read

ஜப்பானின் தென்கிழக்காசியப் படையெடுப்பானது சிங்கப்பூர் நிலப்பகுதியின் வரலாற்றில் ஓர் ஆறாக் காயம். மலாயாவுக்குள் 1941ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி புகுந்த ஜப்பான், மறுஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி சிங்கப்பூரைக் கைப்பற்றியது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் சிங்கப்பூரில் ஜப்பானிய ஆட்சி நடந்தது. வறுமையின் கோரம் ஒருபுறம், வன்முறையின் கொடூரங்கள் மற்றொருபுறம் என்று மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகினர். அணுகுண்டுத் தாக்குதலுக்கு இலக்கான ஜப்பான் சரணடைந்ததும் தென்கிழக்காசியாவில் அதன் ஆட்சி முடிவுக்கு வந்தது. சிங்கப்பூர் ஜப்பானிடம் விழுந்த 80வது ஆண்டு இது. அந்தத் துயரமான காலத்தின் நினைவுகளோடு வாழும் சிலர் தங்கள் அனுபவங்களின் முதல் பாகம் இன்று இடம்பெறுகிறது. இரண்டாம் பாகம் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வெளிவரும்.