சீனர்கள்
அனுபவித்த அளவுக்கு வன்முறையை இந்தியர்கள் அனுபவிக்கவில்லை என்றாலும் இந்தியர்கள் அடைந்த
துன்பத்தை சாதாரணமாக எண்ணிவிடக்
கூடாது என்று தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் ராஜேஷ் ராய் (படம்).
"தங்களது இயக்கத்தில் இந்தியர்களை ஈடுபடுத்த விரும்பிய ஜப்பானியர்கள், தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா போன்ற நாடுகளில் தங்களது கட்டுமானத்திட்டங்களில் இவர்களை வலுக்கட்டாயமாக வேலையில் அமர்த்தினர்.
"சீனர்களை வேலையில் சேர்த்தால் கட்டுமானங்களுக்கு குண்டு வைத்துவிடுவர் என்றெண்ணி இந்த வேலைக்கு இந்தியர்களையே தேர்ந்தெடுத்தனர்," என்று பேராசிரியர் ராஜேஷ் கூறினார்.
களைப்பு, பசி, நோய், நச்சு விலங்குகள் உள்ளிட்ட காரணங்களால் இந்தியர்கள் தங்களது உயிரை இழந்தனர்.
"நோய்வாய்ப்பட்ட சிலர், குடிசைகளில் வைக்கப்பட்டு தீயில் இடப்பட்டனர்," என்று அவர் கூறினார்
போருக்கு முன்னதாக சிங்கப்பூரில் தமிழர்கள்
லிட்டில் இந்தியா, ஃபேரர் பார்க் மட்டுமின்றி கெப்பல் ரோடு, செம்பவாங் கடற்
படைத்தளப் பகுதி, அட்மிரல்டி போன்ற இடங்களிலும் அதிகம் இருந்ததை அவர் நினைவூட்டினார்.
ஜப்பானியப் படையெடுப்புக்கு முன்னதாக சிங்கப்பூரில் இந்தியர்களின் எண்ணிக்கை கூடி இருந்தபோதும் படையெடுப்பு முடிவுபெறும் காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 19 விழுக்காடு குறைந்தது. அதேநேரம் சீனர்களின் எண்ணிக்கை இதற்கு நேர்மாறாக 9 விழுக்காடு கூடியதாகவும் மலாய்க்காரர்களின் எண்ணிக்கை 11 விழுக்காடு கூடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"ஜப்பானியர்களால் கணிச மான இந்தியர்கள் பலர் மடிந்தது இதன்மூலம் தெரிய வருகிறது.
"நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் இருந்த இந்திய தேசிய ராணுவம் தமிழர்களை ஒருங்கிணைக்க பாடுபட்டது. அந்த இயக்கத்தில் இந்துஸ்தானி முக்கிய பயன்பாட்டு மொழியாக இருந்தபோதும் உரைகளுக்கும் ஆவணங்களுக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு இருப்பதை உறுதி செய்வதில் திரு சந்திரபோஸ் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
"தொடக்கத்தில் இந்த இயக்கம் இந்திய இனத்தவருக்குத் தெம்பு தந்தது. ஆனால் பசி, வறுமை ஆகியவை அதிகரித்து வந்ததால் காலப்போக்கில் ஜப்பானிய ஆட்சி கசப்புணர்வை ஏற்
படுத்தியது," என்று 'சிங்கப்பூரில் இந்தியர்கள்' என்ற தமது நூலில் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் ராஜேஷ்.

