சேவைபுரிவதில் பெருமை: புதிதாக நியமிக்கப்பட்ட அதிபரின் கௌரவ ராணுவ உதவியாளர்கள்

சேவைபுரிவதில் பெருமை: புதிதாக நியமிக்கப்பட்ட அதிபரின் கௌரவ ராணுவ உதவியாளர்கள்

2 mins read
49632389-778d-4432-af0d-84b899d3e0c3
மேஜர் வினோத் குமார், 41, டாக்டர் ரமேஷ் விஜயா, 40. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தற்காப்பு அமைச்சு -
multi-img1 of 2

காலஞ்­சென்ற தமது தந்­தை­யின் ஊக்­கத்­தி­னால் சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யில் சேர்ந்த மேஜர் வினோத் குமார், 41, அதி­ப­ருக்­கான புதிய கௌரவ ராணுவ உத­வி­யா­ளர்­களில் ஒரு­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

உயர்­நி­லைப் பள்­ளிப்­ப­ரு­வத்­தில் சிங்­கப்­பூ­ர் அதி­ப­ரின் பக்­கத்­தில் நிற்­கும் ராணுவ உத­வி­யா­ளர்­க­ளைத் தொலைக்­காட்­சி­யி­லும் செய்­தித்­

தா­ளி­லும் கண்ட திரு வினோத், தாமும் அந்த இடத்­திற்கு வந்­துள்­ளதை எண்ணி மிக­வும் பெருமை அடை­வ­தா­கத் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

அதி­பர் மாளி­கை­ளில் நடை

­பெ­றும் சிறப்பு நிகழ்ச்­சி­க­ளுக்­கான ஏற்­பா­டு­க­ளை­யும் உத­வி­க­ளை­­யும் செய்ய முழு­நேர உத­வி­யா­ளர்­களுக்கு இந்தக் கௌரவ உத­வி­யா­ளர்­கள் துணை­பு­ரி­வர். இந்­தப் பொறுப்­புக்கு கடந்த ஆண்டு 103 பேர் நிய­மிக்­கப்­பட்­ட­போ­தும் அதற்­கான அதி­கா­ர­பூர்வ நிகழ்ச்சி கொவிட்-19 தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக தள்­ளி­வைக்­கப்­பட்டு, இம்­மா­தம் 14ஆம் தேதி நடை­பெற்­றது.

சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை, சிங்­கப்­பூர் காவல் படை, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த அதி­கா­ரி­க­ளான இந்த உத­வி­யா­ளர்­கள், தங்­க­ளது அன்­றா­டப் பணி­க­ளு­டன் இந்­தப் பொறுப்­பை­யும் நிறை­வேற்­று­வர்.

முதல் ஈராண்­டு­க­ளுக்கு இவர்­கள் குறைந்­தது 60 மணி நேரம் பணி­யாற்­று­வர்.

மூன்­றாம் ஆண்டு முதல் ஆண்­டுக்­குக் குறைந்­தது 48 மணி நேரம் இவர்­கள் பணி­யாற்ற வேண்­டி­யி­ருக்­கும்.

2000ஆம் ஆண்டு தேசிய சேவை­யில் அதி­கா­ரி­யாக உயர்ந்த திரு வினோத், ஈராண்­டு­கள் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயின்று குடி­மைப் பொறி­யா­ள­ரா­கப் பட்­டம் பெற்­ற­ தா­க­வும் பின்­னர் முழு­நேர தேசிய சேவை­யா­ள­ராக மாறி அதிரடிப் படை­யில் சேர்ந்­த­தா­க­வும் கூறி­னார்.

காவல்­துறை அதி­கா­ரி­யான தமது தந்­தை­யா­லும் ஆகா­யப் படை அதி­கா­ரி­யான தமது அண்­ண­னா­லும் ஊக்கமும் உந்துதலும் பெற்­ற­தா­கக் கூறி­னார் திரு வினோத்.

2015ஆம் ஆண்டு தேசிய தின அணி­வ­குப்­பின்­போது அதி­ப­ரின் கௌரவ பாது­கா­வ­ல­ரா­கப் பணி­யாற்­றி­ய­போது அள­வில்லா ஆனந்­தம் அடைந்த தமது தந்தை, இப்­போது தமக்­குக் கிடைத்­தி­ருக்­கும் கௌர­வத்­தைக் காண உயி­ரு­டன் இல்­லையே என்ற ஏக்­கம் திரு வினோத்­திற்கு உண்டு.

புதி­தாக நிய­மிக்­கப்­பட்ட கௌரவ ராணுவ உத­வி­யா­ளர்­களில் மற்­றொ­ரு­வ­ரான மேஜர் (என்­எஸ்) டாக்­டர் ரமேஷ் விஜயா, 40, சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­யில் மூத்த அறுவை சிகிச்சை ஆலோ­ச­க­ரா­க­வும் டியூக்-என்­யு­எஸ் மருத்­து­வப் பள்­ளி­யில் மருத்­துவ உதவிப் பேரா­சி­ரி­ய­ரா­க­வும் பணி­யாற்­று­கி­றார்.

2012ஆம் ஆண்டு தமது தேசிய சேவைப் பொறுப்­பு­களை முடித்த பிற­கும் தொடர்ந்து சேவை­யாற்ற தமது தந்தை ஊக்­கு­வித்­த­தாக டாக்­டர் ரமேஷ் தெரி­வித்­தார்.

"இந்­நாட்­டில் முதன்­மு­த­லா­கத் தகு­தி­பெற்ற தேசிய சேவை அதி­கா­ரி­களில் ஒரு­வ­ரான எனது தந்தை, சேவை மனப்­பான்­மை­யின் முக்­கி­யத்­து­வத்தை என்­னுள் நிலை­நாட்­டி­னார்," என்று அதிரடிப் படை­யில் தேசிய சேவையாற்றும் டாக்­டர் ரமேஷ் கூறி­னார்.

இந்­தப் பொறுப்­புக்கு நிய­மிக்­கப்­பட்ட முதல் தயார்­நிலை சேவை­யா­ள­ரான டாக்­டர் ரமேஷ், தமது வழக்­க­மான பணி­யி­லும் தேசிய சேவை­யி­லும் பெறாத அனு­ப­வங்­களை புதிதாகக் கிடைத்திருக்கும் வாய்ப்பின் மூலம் பெற­வி­ருப்­பது குறித்து மகிழ்ச்­சி­யடை­வ­தா­கத் தெரி­வித்­தார்.

செய்தி: கி.ஜனார்த்தனன்