நிறைவேறும் கனவு; நிறைவு தரும் உணவு

நிறைவேறும் கனவு; நிறைவு தரும் உணவு

3 mins read
46b5b531-dc8d-4f96-ac45-9d70dcb643e8
கிர்பாவ் ரோடு 'வில்லேஜ் கறி' உரிமையாளர் திருமதி பிரபா பாலசுப்ரமணியம், சமையல்காரர் திரு பெரியதம்பி நாகராஜன். (வலது) சகுந்தலாஸ் உணவக உரிமையாளர் திரு மாதவன் ஆதிபாலகிருஷ்ணன். படங்கள்: கி.ஜனார்த்தனன் -
multi-img1 of 3

இந்­திய உண­வக உரி­மை­யா­ளர்­க­ளின் நீண்ட நாள் கோரிக்­கையை நிறை­வேற்­றும் வகை­யில் புதிய சட்ட விதி­முறை வந்து உள்­ளது. இந்­திய உண­வ­கங்­கள் இந்­திய நாட்டு சமை­யல்­கா­ரர்­களை வேலை அனு­மதி அட்­டை­பெற இந்­தப் புதிய சட்­டம் வகை செய்­கிறது.

சேவைத்­துறை வேலை­யில் இந்­திய நாட்­ட­வரை வேலை அனு­மதி அட்­டை­யில் (ஒர்க் பர்­மிட்) அமர்த்த முடி­யாது என்­பது தற்­போ­து­வரை உள்ள கட்­டுப்­பாடு.

புதிய விதி­மு­றையை லிட்­டில் இந்­திய உண­வ­கங்­களும் மற்ற இந்­திய உண­வ­கங்­களும் வர­வேற்­றுள்­ளன. ஈராண்­டா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருந்த தமது வர்த்­த­கம் இனி மெல்ல மீண்டு வரும் என்று நம்­பு­வ­தாக சகுந்­த­லாஸ் உண­வக உரி­மை­யா­ளர் மாத­வன் ஆதி­பால கிருஷ்­ணன், 52, தெரி­வித்­தார். கூடு­த­லாக பதார்த்­தத் தெரி­வு­களை வழங்கி வாடிக்­கை­யா­ளர்­களை மகிழ்­விக்­க­லாம் என்று அவர் கூறி­னார்.

"இந்­தி­யா­வி­லிருந்து வரும் சமை­யல்­கா­ரர்­க­ளை இந்­திய உண­வின் சுவைக்­காக பயன்

­ப­டுத்த முடி­யும். நடப்பிலுள்ள விதி­மு­றை­யில் இரண்டு மூன்று சமை­யல்கா­ரர்­கள் மட்­டும் எங்­க­ளுக்­குக் கிடைக்­கின்­ற­னர்," என்று அவர் கூறி­னார்.

இந்­தி­யர் அல்­லா­தோரை சமை­யல் வேலை­யில் வைப்­பது மிக­வும் சிர­மம் என்று முத்து'ஸ் கறி உண­வக உரி­மை­யா­ளர் காசி விஷ்­வ­நாத், 51, குறிப்­பிட்­டார்.

"சமை­யல் கலை கற்ற இந்­தி­யர் அல்­லாத மூவரை வேலை­யில் எடுத்­தோம். அவர்­கள் சில மாதங்­கள் மட்­டும் நீடித்­த­னர். தொழில்­நுட்­பத்தை நாம் எவ்­வ­ளவு பயன்­ப­டுத்­தி­னா­லும் ஆள் பற்­றாக்­கு­றை­யால் புதிய கிளை­க­ளைத் திறந்து மேலும் விரிவு

படுத்த இய­ல­வில்லை," என்று அவர் கூறி­னார்.

சமை­யல் வேலைக்கு $4,000 சம்­ப­ளம் தர முன்­வந்­த­போ­தும் அனு­ப­வ­முள்ள, திற­மை­யான சிங்­கப்­பூ­ரர்­கள் விண்­ணப்­பிப்­ப­தில்லை என்­றார் சிலிகி சாலை­யி­லுள்ள 'அலா­டீன்ஸ் காசல்' உண­வ­கத் தின் உரி­மை­யா­ளர் கார்த்­தி­கே­யன் அரு­ண­நீதி, 36.

வேலை அனு­மதி அட்­டை­யில் அதிக சமை­யல்­கா­ரர்­க­ளைப் பெற வழி­வ­குக்­கும் விதி­முறை மாற்­றத்தை வர­வேற்­றா­லும் கோம­ளாஸ் உரி­மை­யா­ளர் திரு தன­சே­க­ரைப் பொறுத்­த­வரை இது தாம­த­மாக எடுக்­கப்­பட்­டுள்ள முடிவு.

ஐந்து வெளி­நாட்டு சமை­யற்­கா­ரர்­களை வேலைக்கு அமர்த்த 50 உள்­ளூர்க்­கா­ரர்­களை வேலை­யில் வைத்­தி­ருக்க வேண்­டி­யது தற்­போ­தைய நிலை என்று சுட்­டி­னார் காயத்­திரி உண­வ­கத்­தின் உரி­மை­யா­ளர் ச. மகேந்­தி­ரன்.

"எங்­க­ளுக்கு குறைந்­த­பட்­சம் ஐந்து, ஆறு சமை­யற்­கா­ரர்­கள் தேவை. ஆனால் 100 வாடிக்­கை­யா­ளர்­கள் சாப்­பி­டும் உண­வ­கத்­தில் 50 உள்­ளூர்க்­கா­ரர்­களை வைத்­தி­ருப்­பது இய­லாத ஒன்று," என்­றார் அவர். 1990களில் இந்த உண­வ­கத்­தின் பிர­தான கிளை­யில் 24 சமை­யற்­கா­ரர்­கள் இருந்த நிலை மாறி தற்­போது அங்கு 4 சமை­யல்­கா­ரர்­களே உள்­ள­னர்.

உண­வ­கங்­கள், ஊழி­யர் எண்­ணிக்­கை­யில் 53 விழுக்­காட்­டி­னரை மலே­சி­யா­வி­லி­ருந்­தும் தைவான், தென்­கொ­ரியா, மக்­காவ், ஹாங்­காங் ஆகிய இதர ஆசிய நாடு­க­ளி­லி­ருந்­தும் வேலை அனு­ம­தி­யின்­கீழ் சேர்க்­க­லாம். இதே விழுக்­காடு இந்­தி­யர்­களும் அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என திரு மகேந்­தி­ரன் எதிர்­பார்க்­கி­றார்.

2004ஆம் ஆண்டு எஸ் பாஸ் அறி­மு­கத்­திற்­குப் பிறகு சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்ட இடங்­க­ளின் எண்­ணிக்கை படிப்

படி­யா­கக் கூடி, வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அனு­ம­திக்­கப்­படும் எண்­ணிக்கை குறைந்­தது.

தகுந்த ஆட்­களை எடுக்க இய­லா­மல் தத்­த­ளித்து வந்த 'வில்­லேஜ் கறி' என்ற சிறிய உண­வ­கத்­தின் உரி­மை­யா­ளர் திரு­மதி பிரபா பால­சுப்­ர­ம­ணி­யம், வேலை செய்­து­கொண்­டி­ருந்­த­போது அவ­ரது கை கரும்­புச்­சாறு பிழி­யும் இயந்­தி­ரத்­தில் சிக்கி முறிந்­தது. கை இன்­னும் சரி­யாக குண­மா­காத நிலை­யில், நால்­வர் மட்­டும் வேலை பார்க்­கும் அந்த உண வகத்­தில் அவர் தொடர்ந்து வேலை செய்­கி­றார். புதிய மாற்­றம் மூல­மாக மேலும் இந்­தி­யர்­களை வேலை­யில் சேர்க்க முடிந்­தால் கிட்­டத்­தட்ட பத்து ஆண்­டு­க­ளாக நீடித்த தங்­க­ளது விருப்­பம் நிறை­வே­றும் என்று திரு­மதி பிர­பா­கூ­றி­னார். "நான் மட்­டு­மல்ல, என் சமை­யல்­கா­ரர் திரு நாக­ரா­ஜ­னுக்கு உயர்­ ரத்த அழுத்­தம் ஏற்­பட்டு தற்­போது சிறு­நீ­ர­கக் கோளாற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்," என்­றார் அவர்.

புதிய மாற்றம் மிகத் தாமதமாக வருவதாகக் கருதும் ஆம்பூர் பிரி யாணிக் கடை உரிமையாளர் முத்து சாமி ஞானசேகரன், 38, "அடுத்த ஆண்டு நிகழும் மாற்றத்துடன் பிரச்சி னைகள் ஓய்ந்துவிடாது. எஸ் பாஸ் சம்பளம், தீர்வை, ஜிஎஸ்டி உள்ளிட்ட செலவுகள் அதிகரிக்கும் என்பதே எனது கவலை," என்றார். வேலை அனு­மதி அட்டை தொடர்­பான மாற்­றங்­கள் 2023 செப்­டம்­ப­ரில் நடப்­புக்கு வரும். அதற்கு முன்­பா­க, இவ்­வாண்டு செப்­டம்­ப­ரி­லேயே எஸ் பாஸ் ஊழி­யர்­க­ளின் குறைந்­த­பட்ச சம்­ப­ளமும் தீர்­வை­களும் உயர்த்­தப்­ப­ட­வுள்­ளன.

சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவகங்கள் இந்தியாவிலிருந்து சமையல்காரர்களை 'ஒர்க் பெர்மிட்'டில் வேலைக்கு தருவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இங்குள்ள இந்திய உணவக உரிமையாளர்கள் பலரின் நீண்டநாள் கனவு. கனவு கைகூடி வருவதால் அவர்களுக்கு நிம்மதி.