சிங்கப்பூரர்களுக்கும் நன்கு சமைக்கத் தெரியும் என்றும் அவர்கள் விரும்பக்கூடிய வேலைச்சூழலை தந்தால்
இங்குள்ள இந்திய சமையல்காரர்களையே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றும் இந்திய சமையல் கலைஞர்,
சமையல் கலை சங்கத்தின்
தலைவர் பாலசுந்தரம் பிள்ளை
தெரிவித்தார்.
தமது மூன்று உணவகக் கிளையில் ஒரு எஸ்-பாஸ் ஊழியரைக்கூட வைத்திராத திரு பாலா, சிங்கப்பூரையும் மலேசியாவையும் சேர்ந்த இளையர்களை சமையல் கலைஞர்களாக வளர்த்து வரு
கிறார். நல்ல சம்பளம் கொடுப்பதுடன் அடிக்கடி பயிற்சிகளுக்கும் அனுப்புவதால் அவர்கள் தம்முடன் தொடர்ந்து வேலை செய்வதாக திரு பாலா கூறினார். ஒருசில இந்திய உணவகங்களின் வர்த்தக பாணி காலத்துடன் மாறவில்லை என இவர் கருதுகிறார்.
"சில உணவகங்களில் சமையல்காரர்கள் வாரத்திற்கு 5 நாள் உழைக்கின்றனர். அதேநேரம் பல்வேறு இந்திய உணவகங்களில் சமையல்காரர்கள் ஓய்வின்றி வேலை செய்கின் றனர். அத்துடன் சம்பளமும் அவர்களுக்குக் குறைவு. அதிக சம்பளம் கொடுக்கத் தயாராக இருந்தால் திறமையானவர்கள் வருவர்," என்பதே இவரது கருத்தாக உள்ளது.
இந்திய உணவகங்களின் வெளிநாட்டு சமையல் கலைஞர்கள் சிலர், முதலாளிகளால் தாங்கள் மதிக்கப்
படுவதில்லை என்று சொல்வதாகக் கூறும் திரு பாலா, தங்களது வேலைக்காக பயப்படும் அந்த ஊழியர்கள், உள்ளூர்க்காரர்களுக்கு சமையல் கற்றுத்தரவும் தயங்குகின்றனர் என்றார்.
"வேலைக்கான மரியாதை உயரும்போது திறன்மிக்க சிங்கப்பூரர்கள் முன்வருவர். நான் உணவக உரிமையாளராக மட்டுமல்லாமல் சமையல் கலைஞராகவும் இருப்பதால் சமையல்காரர்களின் நிறைகுறைகளை உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்ள முடிகிறது. எனது கருத்துகளைப் பெரும்பாலான உணவக உரிமை
யாளர்கள் ஏற்காமல் இருக்கலாம். ஆனால், உள்ளூர் திறனாளர்களைச் சார்ந்த வர்த்தகங்களே நீண்டகாலத்திற்கு நிலைக்கும் என்பதை நம்புகிறேன்," என்று கூறினார் திரு பாலா.
இவரைப் போன்ற கருத்துடைய பாய் பிரியாணிக் கடை உரிமையாளர் திரு காதர் முகைதீன், 43, உள்ளூர் வாசிகளுக்கு சமையல் பயிற்சி அளித்து வருவதாகக் கூறினார்.

