எந்த முடிவையும் எதிர்கொள்வதில் ஒற்றுமை

குழந்தை ஒன்­றைத் தத்­தெ­டுக்க இள­மை­யி­லி­ருந்தே ஆசைப்­பட்ட திரு­மதி ரதி, தமது விருப்­பத்தை வெளிப்­ப­டுத்­தி­ய­போது வியந்­து­

போ­னார் அவ­ரது கண­வர் திரு சர­வ­ணன். இதைச் சற்­றும் எதிர்­பா­ராத அவர், பல்­வேறு கோணங்­களில் சிந்­தித்த பின்­னர் மனை­வி­யின் முடி­வுக்கு இசைந்­தார். தங்­க­ளது முதல் குழந்­தைக்­குப் பின்­னர் அவர்­கள் குழந்தை அன்­ஷூ­வைத் தத்­தெ­டுத்­த­னர்.

இந்­தி­யா­வின் பீகார் மாநி­லத்­தின் குழந்தை பரா­ம­ரிப்பு இல்­லம் ஒன்­றி­லி­ருந்து அன்­ஷூ­வைத் தத்­தெ­டுப்­ப­தற்கு 4 ஆண்­டு­கள் போரா­டி­னர் இரு­வ­ரும். சட்ட விவ­கா­ரங்­களை முடித்­து­விட்டு கொவிட்-19 சூழ­லின் உச்­சக்­கட்­டத்­தில் இந்­தி­யா­வுக்­குச் செல்­ல­வேண்­டிய நிலை அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டது.

"கிரு­மிப்­ப­ர­வல் மிகுந்­தி­ருந்த அந்­தக் கட்­டத்­தில் இந்­தி­யா­வுக்­குச் செல்­வது சற்று அச்­சத்­தைத் தந்­தது. ஆயி­னும், அப்­போதே சென்று அன்­ஷூவை மீட்­க­வேண்­டும் என்ற ரதி­யின் உறு­தி­யான முடிவே சரியானதாக அமைந்­தது," என்­றார் பொறி­யா­ள­ரா­ன திரு சர­வ­ணன் ஜெய­ரா­மன், 43.

இரு­வ­ரும் மண­மு­டித்து சுமார் 15 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. பெற்­றோர் பார்த்து நடத்­தி­வைத்த திரு­

ம­ணம். எளி­தில் கோபப்­ப­டக்­கூ­டிய கணவரின் சுபா­வத்தை திரு­மணத்­துக்­குப் பின்­னர் அறிந்­தார்

திரு­மதி ரதி.

"நான் நேர­டி­யாக எதை­யும் வெளிப்­ப­டுத்­தி­வி­டு­வேன். கோபத்­தை மாற்­றிக்­கொள்ள வேண்­டும் என்று அவரிடம் நேர­டி­யா­கவே சொல்­லி­விட்­டேன். காலப்­போக்­கில், இரு­வ­ரும் வெளிப்­ப­டை­யா­கப் பேசிக்­கொள்­ளக் கற்­றுக்­கொண்­டோம்," என்­றார் ஆசி­ரி­ய­ரான திரு­மதி ரதி பிரீத்தா, 38.

"எந்­தப் பிரச்­சி­னை­யாக இருந்­தா­லும் உறங்­கச் செல்­லும் முன் அத­னைத் தீர்த்­துக்­கொள்­வதை வழக்­க­மாக்­கிக்­கொண்­டோம். முன்­னர் நடந்த வேண்­டாத சம்­ப­வத்தை குத்­திக்­காட்­ட­வும் மாட்­டோம். இத­னால் மகிழ்ச்­சி­யாக உள்­ளோம்," என்­றார் திரு சர­வ­ணன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!