மண­வாழ்க்­கை­யில் புரிந்­து­ணர்வை வலுப்­ப­டுத்­தும் செயற்­கூட்­டணி

மண­வாழ்க்­கை­யில் புரிந்­து­ணர்வை வலுப்­ப­டுத்­தும் செயற்­கூட்­டணி

1 mins read

அண்­மைக் காலத்­தில் குறைந்து வரும் திரு­ம­ணங்­களும் குறு­கிய காலகட்­டத்­தில் பிரி­யும் மண உற­வு­களும் கவலை அளிக்­கின்­றன. கொவிட்-19 சிக்­கல்­களும் குடும்­பத்­தில் பிள­வு­களை ஏற்­

ப­டுத்­தி­யுள்­ளன. இத்­த­கைய சூழ­லில், ஒற்றைப் பெற்­றோர், இள­

வ­யது தம்­ப­தி­யி­னர், குடும்ப வன்­மு­றைக்கு ஆளா­னோர்

முத­லி­யோ­ருக்­குத் தொடர்ந்து ஆத­ரவு தேவைப்­ப­டு­கின்­றது.

சமு­தா­யத்­தின் ஆணி­

வே­றா­ன குடும்ப அமைப்­பு­களில் நிலைத்­தன்­மையை நாட்­டும் நோக்­கில் திரு­ம­ணங்­கள் மற்­றும் குடும்ப உற­வு­களை வலுப்

­ப­டுத்­தும் செயற்­கூட்­டணி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் இத்­திட்­டத்­தின்­கீழ் உத­வித் திட்­டங்­களும் குடும்ப ஈடு­பாட்டை ஊக்­கு­விக்­கும் முயற்­சி­களும் அம­லாக்­கம் காண­வி­ருக்­கின்­றன.

புது­மணத் தம்­ப­தி­யி­ன­ருக்­கான உறவு கல்­வித் திட்­டத்தை முன்­னிட்டு 4 நாள்­கள் நடத்­தப்­படும் இணை­யப் பட்­ட­றை­யில் தம்­ப­தி­யி­னர் கலந்­து­கொள்­ள­லாம். மே மாத சனிக்­கி­ழ­மை­களில் நடக்­க­வி­ருக்­கும் இப்­பட்­ட­றை­யில் சேர familylife@cornerstoneservices.gov.sg என்ற மின்­னஞ்­சல் முக­வ­ரியை நாட­லாம்.

"காத­லும் உற­வும் மிதி­வண்டி போன்­றது. அதனை நகர்த்த மறந்­து­விட்டு உற­வில் பிள­வு­க­ளைச் சந்­திப்­போர் ஏரா­ளம். வெளிப்­ப­டை­யான எண்­ணப் பரி­மாற்­றங்­கள் நீடித்த உற­வுக்கு வித்­தி­டும். அப்­பு­ரி­தலை ஏற்­ப­டுத்த இத்­திட்­டங்­கள் பெரி­தும் கைக்­கொ­டுக்­கும்," என்­றார் சிங்­கப்­பூர் அனைத்­து­லக சம­ரச நடு­வர் கல்வி நிலை­யத்­தின் துணைத் தலை­வ­ரும் திரு­ம­ணங்­கள் மற்­றும் குடும்ப உற­வு­களை வலுப்­ப­டுத்­தும் செயற்­கூட்­ட­ணி­யின் உறுப்­பி­ன­ரு­மான திரு திரு­நா­வுக்­க­ரசு.

அமைச்­சின் திட்­டங்­கள் குறித்து மேல்விவ­ரங்­கள்

அறிய familiesforlife.sg என்ற தளத்தை நாட­லாம்.