திருமண உறவைப் போற்றி பாதுகாப்பது அவசியம்

"மேற்­கத்­திய கலா­சா­ரத்­தின் தாக்­கத்­தைக் குடும்­பங்­களில் தற்­ச­ம­யம் காண­மு­டி­கின்­றது. முன்­பி­ருந்த அள­வுக்கு ஒழுக்க நெறி­க­ளை­யும் பாரம்­ப­ரி­யத்­தை­யும் சிறு­வ­ய­தி­லி­ருந்தே வலி­யு­றுத்­திச் சொல்­வது குறைந்து வரு­கின்­றது.

"எனவே, ஆசி­யக் கலா­சா­ரத்­தில் காணப்­படும் திரு­மண நெறி­களில் முக்­கி­யத்­து­வம் குன்றி, மேற்­கத்­திய மோகம் காட்­டுத்தீ போல் பரவி வரு­கிறது," என்று பகிர்ந்­து­கொண்­டார் முனை­வர் ராம­சாமி கரு­ணா­நிதி.

சுமார் 33 ஆண்­டு­கா­லம் திரு­

ம­ணம் நடத்தி வைக்­கும் பணி­யில் இருந்த திரு கரு­ணா­நிதி, பல

­த­ரப்­பட்ட தம்­ப­தி­யி­ன­ரைத் தம் அனு­ப­வத்­தில் கண்­டுள்­ளார். திரு­

ம­ணத்­துக்­குப் பின்­னர் ஏற்­படும் தடை­கள் குடும்­பச் சிக்­கல்­க­ளாக முற்­கா­லத்­தில் கரு­தப்­பட்­டன.

"இப்­போதோ, தனிப்­பட்ட சிக்­கல்­க­ளாக அவை பிரிக்­கப்­பட்டு, தவ­றான புரிந்­து­ணர்வு ஏற்­பட வழி­வ­குக்­கின்­றன என்று அவர் கூறி­னார்.

விட்­டுக்­கொ­டுக்­கும் தன்மை இல்­லா­தது, வேலைப்­ப­ளு­வால் புரிந்­து­ணர்வு பாதிக்­கப்­ப­டு­வது, பிற­ரு­டன் ஒப்­பீடு செய்­வது, வீட்­டு­

வே­லை­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளா­தது, வேலை­யி­டத்­தில் தம்­ப­தி­ய­ரின் நிலையை முத­லா­ளி­கள் கண்­டு­கொள்­ளா­தது ஆகிய கார­ணி­க­ளால் பிரிந்து சென்ற தம்­ப­தி­யி­னரை திரு கரு­ணா­நிதி எதிர்­கொண்­டுள்­ளார்.

திரு­ம­ணம் என்­பது ஆயி­ரம் காலத்­துப் பயி­ரென வாழை­யடி வாழை­யாய் வாழ்ந்த தமி­ழர்­கள் கூறிச் சென்­ற­னர். நவீ­னக் கொள்­கை­கள் நிலை­நாட்­டப்­பட்­டுள்ள தற்­போ­தை­யச் சூழ­லிலோ, அக்­கூற்று பொய்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது என்று இவர் கரு­து­கி­றார்.

"இல்­ல­ற­வாழ்க்கை தனி­ம­னி

­த­னுக்கு மட்­டு­மின்றி, மனித சமு­தா­யத்­துக்கே இன்­றி­ய­மை­யாத ஒன்று. மழ­லைச் செல்­வங்­க­ளைப் பெற்று, அவர்­களை நற்­குடிமக்­க­ளாய் வளர்த்­து­விட்­டால், அது­வும் நாட்­டுக்­குச் செய்­யும் ஒரு தொண்­டா­கும்," என்­றார் திரு கரு­ணா­நிதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!