மின்னிலக்க பொம்மலாட்டம் நடத்தும் இளையர்கள்

திரை கட்டி பொம்­மை­களை ஆட வைத்து படைக்­கப்­படும் பொம்­மலாட்­டத்தை கணினித் திரைக்­குக் கொண்டு வந்­துள்­ள­னர் இளை­யர்­கள் சஞ்­சய் முத்­துக்­கு­ம­ர­னும் சக்தி நிவா­ஸும். 'கிளா­ஸிக்­கல் சைபர் ஆர்ட்ஸ்' நிறு­வ­னத்தை நடத்­தும் இரு­வ­ரும் இது­வரை 30 உயர்­நி­லைப் பள்­ளி­களில் பொம்­ம­லாட்­டக் காணொ­ளிப் பயி­ல­ரங்­கு­களை நடத்­தி­யுள்­ள­னர்.

இவ்­வாண்டு உமறுப் புல­வர் தமிழ் நிலை­யத்­தில் அவர்­கள் நடத்­திய பயி­ல­ரங்கு 300 மாண­வர்­களை ஈர்த்­தது. மின்­னி­லக்க முறை­யில் பொம்­ம­லாட்­டக் காணொ­ளி­கள் தயா­ரிப்­பது குறித்து அறிய ஆசி­ரி­யர்­களும் விருப்­பம் தெரி­வித்­த­தாக சஞ்­சய், சக்தி இரு­வ­ரும் கூறி­னர்.

பயி­ல­ரங்­கு­களில் பங்­கேற்­கும் மாண­வர்­கள், புத்­தாக்க முறை­யில் கதை­களை உரு­வாக்­கு­வது பற்றி கற்­றுக்­கொண்டனர். மேலும், தனித்­து­வ­மான பொம்­மை­க­ளைச் செய­லி­யில் வடி­வமைப்­பது, இசை சேர்ப்­பது, முத­லி­ய­வற்­றை­யும் சஞ்­ச­யும் சக்­தி­யும் கற்­றுக்­கொ­டுக்கின்றனர்.

வழக்­க­மா­கப் பொம்­ம­லாட்­டத்­தில் இடம்பெறும் ராமா­ய­ணம் முத­லிய புரா­ணக்­க­தை­க­ளைப் பற்றி இப்­ப­யி­ல­ரங்கு விவ­ரிக்­கிறது. ஆனால், மாண­வர்­கள் தங்­க­ளின் கற்­பனை வளத்­தைக் கொண்டு பிர­பல திரைப்­பட நடிகர்­கள், கேலிச்­சித்­திரக் கதா­பாத்­தி­ரங்­கள் ஆகி­ய­வற்­றைக் கொண்டு சுய­மா­கக் கதை படைக்கவும் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

சென்­னை­யின் தக்­‌ஷினா சித்­திரா கலை அரும்­பொ­ரு­ள­கத்­துக்­குச் சென்­றி­ருந்த சஞ்­சய், அங்கு பொம்­ம­லாட்­டக் கலை­ஞர்­க­ளைச் சந்­தித்து, இக்­க­லை­யைப் பற்றி மேலும் அறிந்து வந்­தார்.

"நவீ­ன­ம­ய­மா­கி­யுள்ள இக்­கா­லத்­தில் படத்­தொ­குப்பு முத­லிய திறன்­கள் இன்­றி­ய­மை­யா­தவை. அவற்றை மாண­வர்­க­ளுக்­குக் கற்­றுக்­கொ­டுக்­கக்­கூ­டிய தனிப்­பட்ட பாடங்­கள் இல்லை. பாரம்­ப­ரி­யத் தமிழ்க் கலை­களில் ஒன்­றான பொம்­ம­லாட்­டத்­தின் மூலம் நவீன திறன்­க­ளை­யும் வர­லாறு குறித்த புரி­த­லை­யும் மாண­வர்­க­ளுக்கு அளிக்க முற்­ப­டு­கி­றோம்," என்­றார் 20 வயது சஞ்­சய்.

தேவைப்­ப­டு­வோ­ருக்கு உதவ இந்­நி­று­வ­னத்­தின் வரு­வா­யைப் பயன்­ப­டுத்த இரு­வ­ரும் முற்­ப­டு­கின்­ற­னர். அதோடு, செயலி உரு­வாக்­கும் கனவை நன­வாக்க வரு­வா­யில் ஒரு பகு­தியை ஒதுக்­கி­யும் வரு­கின்­ற­னர்.

"20 வயது இளை­யர்­க­ளால் என்ன கற்­றுக்­கொ­டுத்­து­வி­ட­மு­டி­யும் என்று பல­ரி­டையே வரும் சந்­தே­கம் எங்­க­ளைச் சோர்­வ­டை­யச் செய்­த­தில்லை. ஏனெ­னில், பெரும்­பா­லான தமிழ் ஆசி­ரி­யர்­களும் அதீத ஆர்­வ­முள்ள மாண­வர்­களும் எங்­க­ளைப் பாராட்­டு­கின்­ற­னர். எங்­க­ளின் பயி­ல­ரங்­கு­க­ளின் மூலம், தமிழ் மொழி­யை­யும் வளர்க்க முற்­படு­கி­றோம்," என்­றார் 20 வயது சக்தி நிவாஸ்.

தற்­போது மின்­னி­லக்­கப் பொம்­ம­லாட்­டத்­தைக் காணொ­ளி­யாக்க மூன்று செய­லி­கள் தேவைப்­ப­டுகின்­றன. அவற்றை ஒரே செய­லி­யில் ஒருங்­கி­ணைக்­க­வும், 4,000 ஆண்டு பொம்­ம­லாட்ட வர­லாற்றை விவ­ரிக்­கும் தளத்தை உரு­வாக்­க­வும், தனிப்­பட்ட செய­லி­யைத் தாமாக உரு­வாக்­கு­வதே இவர்­க­ளின் கனவு..

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!