எளிமை, மென்மை, அமைதி, ஆற்றல்

எளிமை, மென்மை, அமைதி, ஆற்றல்

2 mins read
45cac2b5-10f6-4b50-896e-0bd0335ae781
திரு லாரன்ஸ் வோங் (வலமிருந்து 2வது) 2015 அக்டோபர் 1ஆம் தேதி இஸ்தானாவில் அமைச்சராக பதவி ஏற்றார். திரு வோங் விரைவில் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார்; அடுத்த பிரதமர் என்ற முறையில் பொதுத் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்நோக்க இதன்மூலம் அவருக்குப் போதிய கால அவகாசம் இருக்கும் என்று கவனிப்பாளர்கள் பலர் கூறுகிறார்கள். -

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

பத்­தாண்­டு­க­ளுக்­கும் மேலாக அர­சி­யல் களத்­தில் பவனி வந்­தா­லும் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த அமைக்­கப்­பட்ட அமைச்­சு­கள் நிலைப் பணிக்­குழுவின் இணைத் தலை­வர் என்ற முறை யில் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக அமைச்­சர் லாரன்ஸ் வோங் செய­லாற்றியதைக் கூர்ந்து கவ­னிக்­கக் கூடிய வாய்ப்பு பொது­மக்­க­ளுக்­குக் கிடைத்­தது.

திரு வோங், நெருக்­க­டி­யான கால­கட்டத்­தில் பதற்றம் இல்­லா­மல் செயல்­தி­றன்மிக்­க தலை­மைத்­து­வப் பண்­பு­களை வெளிக்­காட்டி­ய­வ­ராக மக்­கள் மத்­தி­யில் பேசப்­பட்டு வந்ததை ஊட­கங்­க­ளி­லும் சமூக ஊட­கத் தளங்­களி­லும் கண்­டோம்.

குறிப்­பாக, அடிக்கடி தொலைக்­காட்­சி­களில் அவ­ரைக் கண்டு அவ­ரது பேச்­சுத் திறமை உட்­பட பண்­பு­ந­லன்­க­ளைச் சீர்­தூக்­கிப் பார்க்­கும் உன்­னத வாய்ப்பை சிங்­கப்­பூ­ரர்­கள் பெற்­ற­னர்.

இளை­யர் என்ற முறை­யில் எனக்­கும் என் நண்­பர்­க­ளுக்­கும் அமைச்­சர் லாரன்ஸ் வோங் குறித்த கருத்­து­கள் ஒத்­துப்­போகின்றன என்றே கூற­வேண்­டும்.

அர­சி­யல், பொதுச் சேவை, நாட்டு நிர்­மா­ணம் என்­ப­வை­யெல்­லாம் முறையே கடுமை­யானவை,­ சீரிய சிந்­த­னை­மிக்­கவை என்­றா­லும் இளை­யர்­களை ஈர்க்­கும்­வண்­ணம் அவற்றை அவர்­க­ளிடம் கொண்டு செல்­ப­வர் அமைச்­சர் வோங்.

மிக­வும் சிக்­க­லான கொள்­கை­க­ளை­யும் திட்­டங்­க­ளை­யும் எளிய முறை­யில் மக்­களுக்கு எடுத்­துச் சொல்­லும் ஆற்­றல் படைத்­த­வ­ராக அமைச்­சர் லாரன்ஸ் வோங் பல­ரா­லும் வர்ணிக்­கப்­ப­டு­கி­றார்.

செய்­தி­யா­ள­ரா­கப் பல முறை திரு வோங்கை சந்­திக்­க­வும் பேட்டி காண­வும் எனக்கு வாய்ப்பு கிடைத்து உள்­ளது. அந்த நினை­வ­லை­க­ளைப் புரட்­டிப் பார்த்­தால் அவ­ரது மென்­மை­யான பேச்சு தனித்து நினை­வில் நிலைத்­துள்­ளது.

பதி­ல­ளிக்க முடி­யாத சூழ­லிலும் பொறு­மை­யாக விளக்கம் அளிக்கும் குணம் படைத்­த­வர். பார­பட்­சம் பாரா­மல் அனை­வரி­ட­மும் ஒரே மாதிரியாக புன்­சி­ரிப்­பு­டன் பேசக்­கூ­டிய அவரின் பண்பை ரசிப்­ப­தா­க பலரும் தத்­தம் சமூக ஊட­கத் தளங்­களில் பதி­விட்­டுள்­ள­னர்.

அர­சி­யல் தலை­வர் என்­றால் கோட்­பாடு­கள் மிகுந்து, கட்­டுச்­சிட்­டாக, எப்­போ­தும் இறுக்­க­மாக பேசு­ப­வர் என்ற எதிர்­பார்ப்­பு­கள் இருந்­து­வ­ரும் என்­றா­லும் வித்­தி­யாசமாக, அமைதியாக, சக­ஜ­மா­கப் பேசுப வரா­க­, பழ­கு­ப­வ­ரா­க­ திரு வோங் இருப்­பதாக இளை­யர்­கள் பகிர்ந்­த­னர்.

இவற்­றை­யெல்­லாம் தாண்டி, ஆற்­றல்­மிக்­க­வ­ரா­க­வும் பிரச்­சி­னை­கள் எதுவாக­இருந்­தா­லும் சிறந்த முடிவுகளைத் திறம்பட நம்­பிக்­கை­யு­டன் எடுத்து, அதில் நிலையாக இருந்து, மக்­கள் நல­னுக்­கா­க­வும் நாட்­டின் நலன் கரு­தி­யும் அவர் செயல்­பட்­டு­வந்­துள்­ளார் என்ற கருத்­தும் இளை­யர் வட்­டத்­தில் நில­வு­கிறது.

ஆக மொத்­தத்­தில், அவர் இளை­யர்­கள் பல­ரது தனிப்­பட்ட விருப்­ப­மா­க­வும் தெரி­வா­க­வும் உள்­ளார் என்­ப­தைத் தாண்டி இக்­கட்­டான சூழல்­களில் நம்­பிக்­கைக்­குப் பாத்­தி­ர­மாக நம்மை வழி­ந­டத்­துபவரா­க­வும் தலை­மைப் பொறுப்­பைச் சீரிய முறை­யில் ஏற்­கக்­கூ­டி­ய­வ­ரா­க­வும் திரு வோங் கரு­தப்­ப­டு­கி­றார்.

அவர் பிரதமராகும் காலத்தை எதிர்­பார்த்து இளை­யர்­கள் காத்துள்ளனர்.