தோல்வியால் தளராத கனவு

தோல்வியால் தளராத கனவு

2 mins read
376a6d60-f206-4a2e-9246-a3ef3acc450a
-

இவ்­வாண்­டின் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­க­ளின் தேர்­வுப் போட்­டி­க­ளுக்­கா­கக் கடு­மை­யாக உழைத்­தி­ருந்­தார் திவ்யா.

ஆனால், எதிர்­பாராத வகை­யில் பயிற்­சி­யின்­போது திவ்­யா­வின் இரு கணுக்­கால்­க­ளி­லும் உள்ள தசை­கள் துண்­டிக்­கப்­பட்­ட­போது அவர் மன­மு­டைந்து போனார்.

14 ஆண்­டு­கால வாள்­வீச்சு பயிற்­சி­யில் அது­வரை அவர் காய­ம­டைந்­த­தில்லை. சொல்­லொணா வருத்­தத்­தில் பல மாதங்­கள் அவர் ஆழ்ந்­தி­ருந்­தார்.

"உட­ல­ள­வி­லும் மன­த­ள­வி­லும் இக்­கா­யங்­கள் என்னை பாதித்­தன. மீண்­டும் பயிற்­சிக்­குத் திரும்­பு­வ­தற்கு ஒரு மாதத்­துக்கு மேல் பிடித்­தது. இம்­முறை என்­னால் பங்­கு­பெற முடி­யா­விட்­டா­லும், அடுத்த முறை கண்­டிப்­பாக முதல் இரண்டு இடங்­களை நான் பிடிப்பேன் என்­ப­தில் எனக்கு சந்­தே­க­மில்லை. அதை நோக்கி உழைக்கத் தொடங்­கி­விட்­டேன்," என்­றார் 20 வயது லசால் கலைக்­கல்­லூரி பட்­ட­தாரி திவ்யா அஷ்டி சிவகுமார்.

ஆறு வய­தில் தேசிய வாள்­வீச்சு வீரர் ஒரு­வ­ரைக் கண்டு பிர­மித்­துப்போனதில் திவ்யாவும் வாளைப் பிடித்­தார். அன்­றி­லி­ருந்து இன்றுவரை தனது வாளை அவர் கைவி­ட­வில்லை.

திவ்­யா­வின் ஒவ்வொரு வெற்­றி­யி­லும் பங்­கு­கொண்­டி­ருந்­தார், 1970களில் தேசிய குத்­துச்­சண்டை வீர­ராக இருந்த அவ­ரது தாத்தா திரு லோக­நா­தன்.

தனது பதக்­கங்­கள் ஒவ்­வொன்­றை­யும் சிறிது நேரம் கையில் வைத்­துக்­கொண்டு தன்னைப் பார்த்து பெரு­மி­த­ம­டை­வார் என்று கூறி நெகிழ்ந்­தார் திவ்யா.

"வாள்­வீச்சு செலவு அதி­க­மா­ன­தொரு விளை­யாட்டு. மேலும் ஆபத்­து­கள் நிறைந்த வாள்­வீச்சை மேற்­கொள்­ளும் பெண்­கள் சமூகத்­தின் கருத்துகளால் மனம் ­த­ளர்ந்து போவதுண்டு," என்று கூறிய திவ்யா, நிதி நெருக்­க­டி­களா­லும், புண்­ப­டுத்­தும் கருத்­து­களி­னா­லும், தன்­னு­டன் பய­ணித்த பெண் வாள்­வீச்சு வீரர்­கள் இவ்­வி­ளை­யாட்­டி­லி­ருந்து வில­கி­விட்­ட­தா­கக் கூறி­னார்.

"இவ்­வி­ளை­யாட்­டில் ஒரே இந்தி­ய­ராக இருந்­த­தால் பாதிக்­கப்­பட்டு, இந்த விளை­யாட்­டி­லிருந்து வில­கி­வி­ட­லாமா என்று நான் பல­முறை எண்­ணி­ய­துண்டு. ஆனால், இவ்­வி­ளை­யாட்­டில் இன்னும் பல இம­யங்­களை நான் தொட வேண்டி உள்­ளது. அவற்றை அடை­யா­மல் நான் வில­கத் தயா­ராய் இல்லை," என்­றார் அவர்.

விளை­யாட்­டைத் தவிர்த்து, நுண், ஊட­கக் கலை­களில் ஆர்வம் கொண்­டுள்ள திவ்யா பல்­கலைக்­க­ழ­கத்­தில் கலை பயில விரும்­பு­கின்­றார்.