உயரும் செலவினம் பலரும் சிக்கனம்

ஆ. விஷ்ணு

வர்தினி

ஹர்ஷிதா

பாலாஜி

கடந்த ஆண்டைவிட பணவீக்கம் இவ்வாண்டு 2.6% அதிகரித்து உள்ளது. கடந்த ஓராண்டாகவே விலைவாசி உயர்ந்துவரும் நிலையில், குறிப்பாக உணவுப்பொருள்களின் விலையேற்றம் மக்களைப் பெரும் சிரமத்துக்குள்ளாக்கி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த கொவிட்-19 கட்டுப்பாடுகளால் உற்பத்தி, விநியோகத் துறைகளில் ஏற்பட்ட பாதிப்புகள், ரஷ்யா-உக்ரேன் போர் போன்றவை விலையேற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. தவிர்க்க முடியாத இந்த விலையேற்றத்தை வணிகங்களும் குடும்பங்களும் எப்படிச் சமாளிக்கின்றன என்பதை அறிந்தும் ஆராய்ந்தும் வந்தது தமிழ் முரசு.

சிங்­கப்­பூர் பெரும்­பா­லும் உண­வுப் பொருள்­க­ளுக்­கும் மளி­கைப்­பொருள்­க­ளுக்­கும் இறக்­கு­ம­தி­யையே சார்ந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருள்­க­ளை­விட, நியூ­சி­லாந்து, ஆஸ்­தி­ரே­லியா, ஐரோப்­பிய நாடு­க­ளி­லி­ருந்து இறக்­கு­ம­தி­யா­கும் பொருள்­க­ளின் விலை இவ்­வாண்டு பல­ம­டங்கு உயர்ந்­து­விட்­டது என்று தமிழ் முர­சி­டம் பேசிய கடைக்­காரர்­களும் மொத்த விற்­ப­னை­யா­ளர்­களும் கூறி­னர்.

தற்­ச­ம­யம் விமா­னப் போக்­கு­வரத்து கொவிட்-19 பரவலுக்கு முந்­திய நிலைக்­குத் திரும்பி வரு­வதைத் தொடர்ந்து, விலை­யேற்­றம் மட்டுப்படும் என எதிர்­பார்த்­தி­ருந்த மளிகைக் கடைக்­கா­ரர்­க­ளுக்கு அண்மைய நிலைமை ஏமாற்­ற­ம் அளிப்­ப­தாக அமைந்துள்­ளது.

உற்­பத்தி, போக்­கு­வ­ரத்­துச் செல­வி­னங்­கள் அதி­க­ரிப்பால் இறக்­கு­மதி செய்­யப்­படும் மளி­கைப் பொருள்­களின் விலை 10%-15% கூடி­யுள்­ள­தாகக் குறிப்­பிட்­டார் சென்னை டிரே­டிங் & சூப்­பர்­மார்ட் கடை நிர்­வாகி வை. ராம­மூர்த்தி.

இம்­மா­தம் கோதுமை, சர்க்­கரை ஏற்­று­ம­திக்­குத் தற்­கா­லிகத் தடை விதித்த இந்­தி­யா­வின் முடி­வும், செம்­பனை எண்­ணெய் ஏற்­று­ம­தியை நிறுத்த எண்­ணும் இந்­தோ­னீ­சி­யா­வின் திட்­ட­மும் அவற்­றின் விலை­களைப் பாதிக்­கும் என்று அவர் அச்­சம் தெரி­வித்­தார்.

அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளான பால், நெய், எண்­ணெய் முத­லி­யவை மார்ச் மாதத்­தி­லி­ருந்து விலை ஏறி­யுள்­ளது. சமை­யல் எண்­ணெய் விலை முன்­பில்­லாத வகையில் இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்­து உள்­ளது.

விலை கூடியதால்

வாங்கும் அளவு குறைந்தது

வாடிக்­கை­யா­ளர்­களில் சிலர் அதிருப்தி தெரி­வித்­தா­லும், பெரும்­பாலோர் உலக நடப்­பு­களை அறிந்தே இருப்­ப­தால் அவர்­கள் பொருள் வாங்கும் போக்­கு­களை மாற்­றிக்­கொண்­டு­ள்ளனர் என்று பெரும்­பாலான கடைக்­கா­ரர்­கள் கூறினர்.

"பொது­வாக, ஒரு கிலோ பருப்பு வாங்­கு­ப­வர்­கள் இப்­போது அரை, கால் கிலோ­வாக குறைத்­து­விட்­ட­னர். நேற்று ஒரு விலை, இன்று ஒரு விலையா என்று கேட்­போ­ருக்கு என்ன பதில் சொல்­வது என்று தெரி­ய­வில்லை," என்­றார் தண்­ட­பாணி கம்பெனி நிர்­வாகி மீனா ஞான­பண்­டி­தன், 44.

அதே­போல, உக்­ரேன்-ரஷ்யப் போரி­னால் பாதிக்­கப்­பட்ட கச்சா எண்­ணெய் விலை இந்­தி­யா­வி­ல் இ­ருந்து வரக்­கூ­டிய சமையல் எண்­ணெய் இறக்­கு­ம­தியை பாதித்­து இ­ருப்­ப­தா­கக் கூறி­னார் சில்­லறை வணி­கர் ஒரு­வர். இத­னால், அதன் விலை ஓரி­ரண்டு வெள்­ளி கூடியுள்­ளது என்­றார் அவர்.

கொவிட்-19 சூழ­லில் முடக்­க­நி­லை­யைத் தவிர்க்க வீட்டு விநி­யோக சேவை­யைத் தொடங்­கிய கடை­கள் தற்­போது எரி­பொ­ருள் விலை­யேற்­றத்­தி­னால் திணறி வருகின்றன.

"இல­வச வீட்டு விநி­யோக சேவை வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்த்து வந்­தது. ஆனால், இப்­போது குறைந்­த­பட்ச விலையை அல்­லது விநி­யோ­கக் கட்­ட­ணத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தத் திட்­ட­மி­டு­கி­றோம்," என்­றார் வீரா மேங்­கோஸ் கடை உரி­மை­யா­ளர் ஸ்ரீகாந்த் ரெட்டி.

இந்­தி­யன் சூப்­பர்­மார்க்­கெட் கடை நிர்­வாகி வித்யா சேக­ரும், கடந்த சில மாதங்­க­ளா­கக் குறைந்­தது 50 வெள்­ளிக்­குப் பொருள் வாங்­கு­வோ­ருக்கே இல­வ­ச­மாக வீட்­டிற்கு விநி­யோ­கம் செய்­யும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளார்.

விலை ஏறி­யி­ருந்­தா­லும் வாடிக்­கை­யா­ளர்­கள்­மீது சுமையை ஏற்­றா­மல் இருக்க முயன்று வரு­வ­தாக என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ் நிறு­வ­னம் தெரி­வித்­தது. அண்­மைக் காலத்­தில் எண்­ணெய், முட்டை போன்­ற­வற்­றுக்கு விலைக்­க­ழி­வு­க­ளை­யும் அது வழங்கி வரு­கின்­றது.

சிங்­கப்­பூ­ரின் முட்­டைப் பண்­ணை­க­ளில் ஒன்­றான செங் சூன் முட்­டைப் பண்­ணை­யில் ஏற்­பட்ட கிரு­மித்­தொற்­றி­னைத் தொடர்ந்து, ஃபேர்பி­ரைஸ், ஜயன்ட், ஷெங் சியோங் அங்­கா­டி­களில் ஏழு வெள்­ளியை எட்­டிய 30 முட்­டை­க­ளின் விலை இன்­னும் பழைய நிலைக்­குத் திரும்­ப­வில்லை. கோழிக்­குக் கொடுக்­கப்­படும் உண­வின் விலை­யேற்­ற­மும் இதில் முக்கியப் பங்கு வகிக்­கின்­றது.

ரொட்­டி­யின் மூலப்­பொ­ரு­ளான கோது­மை­யின் இறக்­கு­மதி ரஷ்ய-உக்­ரேன் போரால் பாதிக்­கப்­பட்டு உள்ள­தால், இவ்வாண்டு ரொட்­டி­விலை­யும் ஏறக்­கு­றைய 20 காசு உயர்ந்துவிட்டது.

மும்முடங்கு கூடிய போக்குவரத்துச் செலவு

உக்­ரேன்-ரஷ்யா இடையே போர் தொடங்கு­வ­தற்கு முன்­னரே, கொவிட்-19 சூழ­லால் கப்­பல் போக்கு­வ­ரத்­துச் செலவு மூன்று மடங்கு கூடி­விட்­டது.

பொருள் விலை குறை­வாக இருந்­தா­லும் போக்­கு­வ­ரத்­துச் செலவு அதி­க­மாக இருந்­த­தால் மற்­றச் செல­வு­களும் கூடின. போர் தொடங்­கிய பிறகு பெட்­ரோல் விலை மேலும் தாறு­மா­றாக ஏறி­ய­தால் போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­ணங்­கள் மேலும் கூடி­ய­து­டன் பல மூலப் பொருள்­க­ளின் விலை­யும் அதி­க­ரித்துவிட்­டது என்­றார் ஸ்ரீவி­நா­யகா எக்ஸ்­ஃபோர்ட்ஸ் நிறு­வ­னத்­தின் திரு ஜோதி மாணிக்­க­வா­ச­கம்.

"உக்­ரே­னி­லி­ருந்து சூரிய காந்தி விதை ஏற்­று­மதி நின்­று­விட்­ட­தால் சூரி­ய­காந்தி எண்­ணெய் தயா­ரிப்பு வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. துருக்­கி­யும் ஒரு மாத காலத்­துக்கு முற்­றாக ஏற்­று­ம­தியை நிறுத்­தி இருந்­தது. தடை நீக்­கப்­பட்ட பிறகு எண்­ணெய் விலை இரட்­டிப்­பா­கி­விட்­டது.

"மேலும், முன்­கூட்­டியே ஒப்­பந்­தம் செய்த விலை­களை ரத்து செய்த நாடு­கள், போர்க்­கால அடிப்­படை­யில் புதிய விலைக்கு விற்­கின்­றன. போருக்­கு­முன் அடக்­க­விலை ஒரு லிட்­ட­ருக்கு 1 அமெ­ரிக்க டால­ராக இருந்த சூரி­ய­காந்தி எண்­ணய், இப்­போது இரண்டு டால­ரா­கி­விட்­டது.

"ஒரு கொள்­கலன் சூரி­ய­காந்தி எண்­ணெய் பிப்­ர­வ­ரி­யில் 25,000 டால­ராக இருந்­தது. இப்­போது அதனை 38,000 டால­ருக்கு வாங்கி­ இருக்­கி­றோம்.

"இந்­தி­யா­வும் துருக்கி, உக்­ரே­னில் இருந்­து­தான் சூரி­ய­காந்தி எண்­ணெய்யை கொள்­மு­தல் செய்­கிறது. அத­னால், அங்­கி­ருந்து இறக்கு­ம­தி­யா­கும் எண்­ணெய் விலை கூடி­விட்­டது.

"கப்­பல் போக்­கு­வ­ரத்­துக் கட்­டண அதி­க­ரிப்­பால் போலந்­தி­ல் இ­ருந்து வரும் பால் விலை கூடி­விட்­டது, இத்­தா­லி­யி­லி­ருந்து வரும் தக்­கா­ளிச் சாற்றின் விலை 40% கூடி­விட்­டது," என்று விலை­யேற்­றம் குறித்து விளக்­கி­னார் 62 வயது திரு ஜோதி மாணிக்­க­வா­ச­கம்.

லாபத்தைக் குறைத்துக் கொண்ட கடைக்காரர்கள்

விலை­யேற்­றத்­தைச் சமா­ளிக்க லாபத்­தைக் குறைத்­துள்­ள­தா­கக் கூறிய அவர், அப்­போ­து­தான் மக்­கள் வாங்­கு­வார்­கள், பணப்­பு­ழக்­கம் இருக்­கும் என்­றார்.

"எவ்­வ­ளவு விரை­வில் பொருள்­களை விற்க முடி­யும் என்­ப­திலேயே இப்போது கவ­னம் செலுத்­து­கி­றோம். முன்­னர் ஓரிரு மாதங்­களுக்­கான சரக்கு இருக்­கும். இப்­போது ஒரு மாதத்­திற்குத்தான் சரக்கு வைத்­தி­ருக்­கி­றோம்.

இதன்­மூ­லம் சேமிப்­புக் கிடங்கு வாட­கைச் செல­வைக் குறைக்­கிறோம். அதே­போல், ஊழி­யர் செல­வைக் குறைக்க, மிகை­நே­ரப் பணி இல்லாமல் பார்த்­துக்­கொள்­கிறோம்," என்று செல­வுக் குறைப்பு நட­வடிக்­கை­கள் குறித்து அவர் விளக்­கினார்.

"மலே­சியா கோழி ஏற்­று­ம­தியை நிறுத்­த­வி­ருக்­கிறது. இந்­தியா சர்க்­கரை, கோதுமை ஏற்­று­ம­தியை நிறுத்­தி­விட்­டது.

"இப்­படி ஒவ்­வொரு நாடும் தங்­கள் தேவை­க­ளைக் கருதி ஏற்­று­மதியை நிறுத்­தும்­போது, சிங்­கப்­பூர் போன்ற இறக்­கு­ம­தியை நம்­பி இருக்­கும் நாடு­கள் பெரிதும் சிர­மப்­பட வேண்­டி­யுள்­ளது. அடுத்த இரண்டு, மூன்று மாதங்­களில் தீர்வு கிடைக்­கும்," என்று நம்­பிக்­கை­யோடு எதிர்­பார்க்­கி­றார் 27 ஆண்­டு­க­ளாக மொத்த விற்­ப­னைத் தொழில் செய்துவரும் திரு ஜோதி மாணிக்­க­வா­ச­கம்.

உணவுப்பொருள் இருப்பை உறுதிப்படுத்த தொடர் முயற்சி

தத்தம் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உணவுப்பொருள் ஏற்று மதிக்குச் சில நாடுகள் தடைவிதிப்பது சிங்கப்பூர் போன்ற இறக்குமதியைச் சார்ந்துள்ள நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அத்துடன், ரஷ்யா-உக்ரேன் போர், உயர்ந்து வரும் பணவீக்கம் போன்ற காரணிகளாலும் உணவு விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இடையூறால் சிங்கப்பூரும் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் ஆயினும் அது வியப்பான ஒன்றல்ல என்றும் பிரதமர் லீ சியன் லூங் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இருப்பினும், போதிய அளவிற்கு உணவுப் பொருள்கள் இருப்பதை உறுதிப்படுத்த சிங்கப்பூர் நீண்டகாலமாகவே பல முயற்சிகளை எடுத்து வருவதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.

கையிருப்பை அதிகப் படுத்துவதும் உணவுப் பொருள்களைப் பெறும் வழிகளைப் பலமுனைப் படுத்துவதும் அவற்றில் அடங்கும்.

"உணவுப்பொருள்கள் ஓரிடத்தில் இருந்து வருவது தடைபட்டால், அதாவது ஓர் இடத்தில் இருந்து கோழியை வாங்க முடியவில்லை என்றால் இதர நாட்டில் இருந்து நாம் அதை வாங்க முடியும்," என்றார் அவர்.

ஆயினும், இப்போது புதிய கோழி இறைச்சிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது போல், அடுத்ததாக வேறு ஏதாவது பிரச்சினை தலைதூக்கலாம் என்பதால் எதையும் எதிர்கொள்ளத் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!