எரிபொருள் விலையேற்றம் ஏற்படுத்தியுள்ள தாக்கம்

எரிபொருள் விலையேற்றம் ஏற்படுத்தியுள்ள தாக்கம்

1 mins read
098799fa-2990-4eb8-8a14-7d9f86ea24f9
-

பெட்­ரோல், டீசல் முத­லிய எரி­பொருள் விலை­ லிட்­ட­ருக்கு மூன்று வெள்­ளி­யைத் தாண்­டி­விட்­ட­தால் வாடகை வாக­னக் கட்­ட­ணங்­களும் உயர்ந்­துள்­ளன. இத­னால், பய­ணம் செய்ய பெரும்­பா­லும் பொதுப் போக்கு­வரத்­தையே பயன்­ப­டுத்­து­வ­தா­க­வும், பொருள்­களை அதி­கம் வாங்­கும்­போது மட்­டுமே வாடகை உந்து­வண்­டியை நாடு­வ­தா­க­வும் பல­ரும் குறிப்­பிட்­ட­னர்.

கிராப், டடா, ரைட் வாக­னப் பகிர்­வுச் செய­லி­க­ளைப் பயன்­ப­டுத்­தும் முழு­நேர வாடகை கார் ஓட்டு­நரான திரு விக்­டர் ஆல்­பர்ட், கட்­டண ஏற்­றம் விலை உயர்­வைச் சமா­ளிக்­கவே போது­மா­ன­தாக இல்லை என்­றார்.

"ஒரு நாளைக்­குக் கூடு­த­லாக பத்து, இரு­பது வெள்ளி அதி­கம் சம்­பா­திக்­கி­றேன். இருந்­தா­லும், அப்­ப­ணம் எரி­பொ­ருள் விலை­யேற்­றத்­தைச் சமா­ளிக்­கவே செல­வாகி­வி­டு­கிறது," என்­றார் திரு விக்டர்.

பகு­தி­நே­ர­மாக கிராப் ஃபுட் விநி­யோக ஓட்­டு­ந­ரா­கப் பணி­யில் சேர்ந்­துள்ள இளை­யர் ஸ்ரீராம் பால­சுப்­ர­மணி­யம், ஒவ்­வொரு தரு­விப்பு ஆணைக்­கும் இப்­போது ஒரு சில வெள்ளி கூடு­த­லா­க பணம் கிடைப்­பது கைச்­செ­ல­விற்கு உதவுவதாகச் சொன்­னார்.