பெரிதாக விரிவடைகிறது முஸ்தபா நகைக்கடை

3 mins read
4242d196-b8a1-42ff-8ee9-e7d68cb031e5
புதுப்பிக்கப்பட்டு வரும் 'முஸ்தபா டிராவல்ஸ்' கட்டடம். -
multi-img1 of 2

வெர்­டன் சாலை­க் கட்டடத்தில் முஸ்­தபா நகைக்­கடை அமைய உள்ளது. முன்பு முஸ்­தஃபா டிரா­வல்ஸ் செயல்­பட்ட 'ஸ்பா பில்­டிங்' கட்­ட­டம் புதுப்பிப்புப் பணிகளோடு மேம்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது.

"கிட்­டத்­தட்ட மூன்று மாத காலத்­தில் இந்த இடத்தில் புதிய நகைக்­கடை தயா­ராகிவிடும். முன்பு­ போ­லவே நாணய மாற்­றுப் பிரி­வும் இங்கு இருக்­கும்," என்று தெரி­வித்­தார் முஸ்­தபா சென்­ட­ரின் உரி­மை­யா­ள­ரான திரு முஸ்தாக் அக­மது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் சுற்­று­லாத் துறை மோச­மான பாதிப்­பைச் சந்­தித்­த­போது முஸ்­தபா டிரா­வல்ஸ் சிறிது காலத்­திற்கு தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டது.

பயண முக­வர் சேவையை மீண்­டும் முஸ்­தபா சென்ட­ரின் ஒரு பகு­தி­யில் திறப்­ப­தற்கு திட்­டம் உள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

விமா­னப் பய­ணச்­சீட்டு, சுற்­றுலா சேவைத் தொகுப்பு ஆகி­ய­வற்றுடன் விசா சேவை­யை­யும் முஸ்­தபா டிரா­வல்ஸ் வழங்கி வந்­தது. அத்­து­டன், இந்­தி­யா­விற்கு பணம் அனுப்­பும் சேவை­யும் இங்கு வழங்­கப்­பட்­டது. தொடக்­கத்­தில் பெரிய அள­வில் செயல்­பட்டு வந்த முஸ்­தபா டிரா­வல்ஸ், விமான நிறு­வ­னங்­க­ளின் நேரடி இணை­யச் சேவை­க­ளால் அதன் வளர்ச்சி படிப்­ப­டி­யா­கக் குறை­யத் தொடங்­கி­யது.

"இச்­சே­வை­களை இணை­யத்­தின் மூலம் பல­ரும் நாடு­வ­தால் முஸ்­தபா டிரா­வல்­சுக்­கான தேவை மிக­வும் குறைந்­து­விட்­டது, கொவிட்-19 கிரு­மிப் பர­வல் காலத்­தில் பயண முக­வர் சேவை­க­ளுக்­கான தேவை கிட்­டத்­தட்ட இல்­லா­மலே போய்­விட்­டது, " என்­றும் திரு முஸ்தாக் கூறினார்.

எண் 5, வெர்­டன் சாலை­யில் உள்ள முஸ்­தபா டிரா­வல்ஸ் கட்­டடம் 1986ஆம் ஆண்­டு கட்­டப்­பட்­டது. 894 சதுர அடி பரப்­ப­ள­வில் அமைந்­துள்ள இது ஏழு மாடி­க­ளைக் கொண்­டது.

வணி­கம் மற்­றும் குடி­யி­ருப்­புப் பயன்­பா­டு­க­ளுக்­காக இயங்கி வந்த இக்­கட்­டடத்­தில் முஸ்­தபா ஏர் டிரா­வல்ஸ் பிரை­வேட் லிமி­டட் 1989ல் ஆண்­டில் தொடங்­கப்­பட்­டது. வெர்­டன் சாலை­யில் இருக்­கும் இக்­கட்­ட­டம் தற்­போது புதிய மாற்­றங்­க­ளு­டன் புதுப்­பிக்­கப்­ப­டு­கின்­றது. முஸ்­தபா சென்­ட­ரின் கீழ்த்­தளத்­தில் இருப்பதுபோல தங்­கம், ஆப­ர­ணப் பிரிவு இங்கும் அமைக் கப்படுகிறது.

கொவிட்-19 பாது­காப்பு நடை­மு­றை­கள் தளர்த்­தப்­பட்­ட­தால் சுற்­றுப்­ப­ய­ணி­கள் சிங்­கப்­பூ­ருக்கு வரும் விகி­தம் அதி­க­ரித்து வரும் நிலை­யில், பல வணி­கங்­களும் மெல்ல மெல்ல தலை­தூக்­கு­கின்­றன. முஸ்­தபா நிறுவனமும் விரி­வாக்­கம், மேம்­பாட்­டுப் பணி­க­ளு­டன் வணி­கத்­தைப் பெருக்­கும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளது.

தற்­போது காலை 9.30 மணி முதல் இரவு 11.30 மணி­வரை திறந்­தி­ருக்­கும் முஸ்­தபா சென்­டர், செயல்­படும் நேரத்தை மேலும் கூட்­ட­வுள்­ளது.

ஜூலை 1ஆம் தேதி முதல் பின்­னி­ரவு 2 மணி­வரை அதிக நேரம் கடை திறந்­தி­ருக்­கும் எனக் குறிப்­பிட்­டார் முஸ்­தபா சென்ட­ரின் மனி­த­வள மேலா­ள­ரான திரு முகம்­மது கவுஸ்.

1971ஆம் ஆண்டு கேம்­பல் லேனில் சிறிய கடை­யா­கத் தொடங்­கப்­பட்ட முஸ்­தபா நிறு­வ­னம், 1985ல் சிராங்­கூன் பிளா­சா­வுக்கு இடம் மாறி முதல் பகு­தி­வா­ரிக் கடை­யைத் திறந்­தது. 1995ல் சையத் ஆல்வி ரோட்­டில் முஸ்­தபா சென்­டர் பேரங்­கா­டி­யாக திறக்­கப்­பட்­டது. 1999ல் இணைய வணி­கத்­தைத் தொடங்­கிய முஸ்­தபா, 2003 முதல் 24 மணி­நே­ர­மும் இயங்கி வந்­தது.

லிட்டில் இந்தியா வட்டாரம் பல மாற்றங்களைக் கண்டு வருகிறது. இங்கு வந்துசெல்லும் மக்களுக்குப் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வசதிகளும் மாற்றங்களும் என்னென்ன என்று அவ்வப்போது படம்பிடித்து வாசகர்களுக்குத் தரும் முரசின் முயற்சி இந்தப் பதிப்பில் தொடங்குகிறது.