சொல்லிப் பழகிய 'நல்லி'யை சொந்தம் கொண்டாடும் இருவர்

சொல்லிப் பழகிய 'நல்லி'யை சொந்தம் கொண்டாடும் இருவர்

4 mins read
dfb30f67-dac6-449e-ac2a-1489ec825cd6
பஃப்ளோ ரோட்டில் 'நல்லி' பெயரைத் தாங்கிய இரு புடவைக் கடைகள். படங்கள்: இணையம் -
multi-img1 of 2

லிட்­டில் இந்­தி­யா­வின் பஃப்ளோ ரோட்டி­லுள்ள புட­வைக் கடை­கள் இரண்டு, 'நல்லி' என்ற பெயரை தங்­க­ளது பொருள்­களில் எவ்­வாறு பயன்­ப­டுத்­தலாம் என்­பது குறித்து நீதி­மன்­றத்­தில் மோதிக்கொண்­டன.

'நல்லி' என்பதைப் பெயர்ப் ­ப­ல­கை­யில் இரு வேறுமாதி­ரி­யாக போட்­டுக்­கொண்­டுள்­ளதை வைத்தே அவ்விரு கடை­களும் வெவ்­வேறு என அடை­யா­ளம் காணமுடி­யும்.

இந்­தப் பெய­ரைப் பயன்­ப­டுத்­து­வது குறித்து இவ்­விரு கடை உரி­மை­யா­ளர்களுக்கு இடையே 1997ல் ஒப்­பந்­தம் ஏற்­பட்­டது.

அதன்­ப­டியே 'நல்லி' என்பதை எவ்­வாறு பயன்­ப­டுத்தி சிங்­கப்­பூ­ரில் தொழில் செய்­ய­லாம் என இரு தரப்­பும் ஒப்­புக்­கொண்­ட­தாக உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி ஆண்ட்ரே மணி­யம் வழக்கு விசா­ர­ணையின்போது கூறி­னார்.

"இருதரப்­பி­ன­ரும் அந்த ஒப்­பந்­தத்­தின்­படி செயல்­ப­டும்­வரை அவர்­கள் இரு­வ­ரும் வணிக முத்­திரை சட்டமீற­லில் ஈடு­பட்­ட­தா­கக் கூற­மு­டி­யாது.

"பெய­ரைப் பயன்ப­டுத்­தும் விதத்­தில் குழப்­பம் இருந்­தா­லும், ஒப்­பந்­தப்­படி அவர்­கள் நடந்­து­கொண்­டால் வணிக முத்­திரை சட்டமீற­லிலோ மற்­றொ­ரு­வ­ரின் பொருள்­க­ளைப் போல் தமது பொருள்­களை விற்­கும் குற்­றச்­சாட்­டுக்கோ ஆளாக மாட்­டார்­கள்," என்று நீதி­பதி ஆண்ட்ரே மணி­யம் விளக்­கி­னார்.

'நல்லி சின்­ன­சாமி செட்டி பிரை­வேட் லிமி­டெட்', 'நல்லி பிரை­வேட் லிமி­டெட்' ஆகிய இரு நிறு­வ­னங்­களும் தங்­களது வர்த்­த­கத்­துக்கு 'நல்லி' என்ற பெய­ரைப் பயன்­

ப­டுத்­த­லாம்.

நல்லி சின்­ன­சாமி செட்டி பிரை­வேட் லிமி­டெட் நிறு­வ­னம், தன்னை 'சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் ஒரே நல்லி வர்த்­த­கம்' என விளம்­பரப்படுத்திக் கொள்­ளக்­கூ­டாது. அது தனது வர்த்­த­கத்தை 'நல்லி சின்­ன­சாமி செட்டி' என்­று­தான் விளம்­ப­ரப்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டுமே தவிர 'நல்லி' என்று மட்­டும் கூறிக்­கொள்­ளக்­கூ­டாது.

எண் 16 பஃப்ளோ ரோட்டி­லுள்ள நல்லி சின்­ன­சாமி செட்டி பிரை­வேட் லிமி­டெட், தமிழ்­நாட்­டில் நல்லி சின்­ன­சாமி செட்டி என்ற நிறு­வ­னத்­தின் புட­வை­களை இங்கு விற்­பனை செய்­கிறது. இந்த நிறு­வ­னம் 'நல்லி' என்ற தனது பெயரை விளம்­ ப­ரப் பல­கை­யில் சாய்ந்த நிலை­யில் வடி­வ­மைத்­திட வேண்­டும்.

இதற்கு மாறாக, 'நல்லி பிரை­வேட் லிமி­டெட்' என்னும் மற்­றொரு நிறு­வ­னம் 'நல்லி' என்பதைத் தனிப்­பெ­ரும் பெய­ராக தனது வர்த்­தக முத்­தி­ரை­யா­கவோ வர்த்­த­கப் பெய­ரா­கவோ பயன்­ப­டுத்­தக்­கூ­டாது.

இந்த ஒப்­பந்­தத்தை நல்லி பிரை­வேட் லிமி­டெட் மீறி­விட்­ட­தாக தமிழ்­நாட்­டைச் சேர்ந்த நல்லி சின்­ன­சாமி செட்டி நிறு­வ­ன­மும் சிங்­கப்­பூ­ரின் நல்லி சின்­ன­சாமி செட்டி பிரை­வேட் லிமி­டெட் நிறு­வ­ன­மும் தங்­களது வழக்­க­றி­ஞர்­கள் மூல­மாக வாதா­டி­னர்.

அவர்­க­ளின் வழக்­க­றி­ஞர்­கள் நல்லி பிரை­வேட் லிமி­டெட் நிறு­வ­னம் 'நல்லி' என தனது பெயரை பிரதான­மாக விளம்­ப­ரப்­ப­டுத்­தி­

யு­டன் அத­னு­டன் இணைந்­தி­ருக்க வேண்­டிய பிரை­வேட் லிமி­டெட் என்ற வாச­கங்­கள் எண் 2C பஃப்ளோ ரோடு கடை­யில் முக்­கி­யத்­து­வ­மில்­லாத வகையில் பெயர்ப்­ ப­ல­கை­யில் சிறி­ய­தாக இடம்­பெ­று­வ­தாக வாதிட்­ட­னர்.

அத்­து­டன், தங்­களது வணிக முத்­தி­ரை­யா­க­வும் தங்­களது விற்­ப­னைப் பைகள், புட­வைப் பெட்­டி­கள், விலைப் பட்­டி­யல் அட்­டை­களில் 'நல்லி', 'நல்லி சிங்­கப்­பூர்' ஆகிய பெயர்­களே இடம்­பெ­று­வ­தா­கக் கூறி­னர்.

மேலும், நல்லி பிரை­வேட் லிமி­டெட் நிறு­வ­னத்­தார் தங்­கள் கடை­யின் காட்­சிப் பெட்­ட­கத்­தில் 'மூல நல்லி பொருள்­கள்' என்ற வாச­கத்­தில் 'நல்லி' என்ற வார்த்­தைக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் நல்லி சின்­ன­சாமி செட்டி நிறு­வ­னத்­தின் வழக்­க­றி­ஞர்­க­ளான ராதா­கி­ருஷ்­ண­னும் சூரிய பிர­காஷ் உத­ய­சூ­ரி­ய­னும் வாதா­டி­னர்.

நல்லி பிரை­வேட் லிமி­டெட் நிறு­ வ­னம் சார்­பாக பிர­யன் மானாஃப் கவுஸ், ஜாஸ்­மின் டோ ஆகிய வழக்­க­றி­ஞர்­கள் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யாகி வாதா­டி­னர்.

நல்லி பிரை­வேட் லிமி­டெட் சார்­பில் இந்த வழக்கு நீதி­மன்ற வழக்­கா­டும் முறையை தவ­றா­கப் பயன்

­ப­டுத்­து­வ­தற்கு ஒப்­பா­கும் என்­றும் குடும்பத் தக­ராற்றை நீதி­மன்­றத்­தில் கொண்­டு­வந்­துள்­ளா­க­வும் கூறி இதை நிரா­க­ரிக்கக் கோரி­னர்.

இந்த வாதத்தை நிரா­க­ரித்த நீதி­பதி மணி­யம், "இது குடும்­பத் தக­ரா­றாக இ­ருக்­க­லாம். எனி­னும், துர­திர்ஷ்டவச­மாக பல குடும்ப தக­ராறு தொடர்­பான வழக்­கு­களில் வாதி, பிர­தி­வாதி ஆகி­யோ­ரின் உரி­மை­க­ளுக்கு நீதி­மன்­றம்­தான் விளக்­கம் தர­மு­டி­யும்.

"பிர­தி­வா­தி­யின் நட­வ­டிக்­கை­கள் சரி­யில்லை என்­றால், வாதி இதில் வழக்குத் தொடர உரி­மை­யுண்டு," என்று கூறி, நல்லி சின்­ன­சாமி செட்டி பிரை­வேட் லிமி­டெட் நிறு­வ­னத்­துக்கு சாத­க­மாக தீர்ப்பு வழங்­கினார்.

நல்லி சின்னசாமி செட்டி நிறுவனம் தமிழ்நாட்டில் 1928ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதன் இரண்டு பங்­கு­தா­ரர்­கள் நல்லி சின்­ன­சாமி செட்டி பிரை­வேட் லிமி­டெட் நிறு­வ­னத்­தின் பங்­கு­தா­ரர்­கள். இவர்­கள் நல்லி சின்­ன­சாமி செட்டி அவர்­க­ளின் முதல் மனை­வி­யின் வாரி­சு­கள்.

மற்­றொரு புறம் பிர­தி­வாதி நிறு­வ­ன­மான நல்லி பிரை­வேட் லிமி­டெட்­டின் முக்­கிய பங்­கு­தா­ரர்­களில் ஒரு­வ­ரான திரு­மதி ஏ.எம். மாத­வன், சின்­ன­சாமி செட்டி அவர்­க­ளின் இரண்­டாம் மனை­வி­யின் பேத்தி.

இந்த வழக்­கில் ஒப்­பந்­தத்தை மீறி­ய­தற்­காக பிர­தி­வாதி நல்லி பிரை­வேட் லிமி­டெட் தர­வேண்­டிய இழப்­பீட்டுத் தொகை குறித்து பின்­னொரு தேதி­யில் விசா­ரிக்­கப்­படும் என்று நீதி­பதி திரு மணி­யம் மே 27ஆம் தேதி தமது தீர்ப்­பில் கூறி­னார். மேலும், தங்­கள் பைகள், புடவை விற்­ப­னை­யில் பயன்­ப­டுத்­தப்­படும் விற்­ப­னைப் பைகள், புட­வைப் பெட்­டி­கள், விலைப் பட்­டி­யல் போன்ற­வற்­றில் நல்லி என்ற பெயர், ஒப்­பந்­தத்தை மீறும் வகை­யில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தால் அதற்குத் தடை­யுத்­த­ரவு விதித்­தும் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.