தஞ்சோங் பகார் நகர மன்றம் வழிநடத்திய அக்கம்பக்க குடி
யிருப்பு வட்டார புதுப்பிப்புத் திட்டத்தின்கீழ் லிட்டில் இந்தியாவில் அண்மையில் நிகழ்ந்த பல மாற்றங்களை கவனித்திருப்போம்.
அதில் ஒன்று, பயணிகள் ஏறி, இறங்குவதற்கான இடம். மேற் கூரையுடன் கூடிய இந்த வாகன நிறுத்தம் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி தேக்கா ஈரச் சந்தை அருகில் திறந்து வைக்கப்பட்டது.
லிட்டில் இந்தியாவுக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் உதவும் நோக்கத்துடன் இந்த முயற்சி எடுக்கப்பட்டது.
"முன்பைவிட புதிய வாகன நிறுத்தம் மிகவும் வசதியாக இருக்கிறது." என்றார் ச.கனகேஸ்வரி, 55.
மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காத்துக்கொள்ள இந்தப் புதிய வசதி உதவியாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
"இதற்கு முன்பு, காய்கறிகளை வாங்கிக்கொண்டு கனமான பை களுடன் ரேஸ் கோர்ஸ் சாலை வரை நடக்கவேண்டியிருக்கும்.
"அது மிகவும் அசௌகரியமாகவும் களைப்பாகவும் இருக்கும்," என்று கூறிய சு.மோகனா, 50, இந்த இடத்தில் வாகன நிறுத்தம் அமைத்தது சிறந்த யோசனை என்று பாராட்டினார்.
ச.சீத்தாலெட்சுமி, 60, என்ப வர் கூறுகையில், "தைப்பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் சாலை நெரிசலில் இருந்து விடுபட இது உதவியாக இருக்கும் என்றார்.
கார், டாக்சி, வேன் போன்ற வாகனங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கும் வகையில் இந்தப் புதிய வாகன நிறுத்தத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது இந்தப் பகுதியில் நடமாடுவது சிரமாக இருந்தது என்றும் இருப்பி னும் தற்போது வாடிக்கை யா ளர்களுக்கு இது மிகவும் வசதி யாக அமைந்துள்ளது என்றும் கூறினார் கடை ஒன்றின் உரிமை யாளரான சு. மாரிமுத்து.
"முன்பு பணியாட்கள் ரேஸ் கோர்ஸ் சாலை டாக்சி நிறுத்தம் வரை சென்று வாடிக்கையாளர்களுக்குப் பொருள்களைக் கொடுக்கவேண்டி இருந்தது.
"ஆனால், புதிய வாகன நிறுத்தம் எங்களுக்குப் பக்கத்தி லேயே அமைந்திருப்பது மிகவும் சௌரியமாக இருக்கிறது," என்றும் அவர் பகிர்ந்துகொண்டார்.
அத்துடன், இது கடைத்தொகுதிகளுக்கு இடையில் அமைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கும் வணிகங்களுக்கும் சிறப்பாக இருக்கிறது என்றார், இன்னொரு கடை உரிமையாளரான மு. வேலுமணி, 53.
துணிக்கடைகள், ஈரச்சந்தை, மளிகைக்கடைகள் என்று எல்லாப் பொருள்களையும் ஒரே இடத்தில் வாங்கிக்கொண்டு செல்வதற்கு வாகன நிறுத்தத்தின் இட அமைப்பு அருமை என்று அவர் புகழ்ந்தார்.
மேலும், இந்தப் புதிய வசதியால் தம்முடைய வியாபாரம் பெருகியிருக்கிறது என்று மு.கௌதமன், 54, கூறினார்.
குறிப்பாக, முதியோர் கடைக்கு வந்துசெல்வதற்கு இந்த வாகன நிறுத்தம் உதவியாக இருக்கிறது என்ற அவர், இன்னும் பெரும்
பாலான வாகன ஓட்டுநர்களுக்கு இவ்விடத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்ற கருத்தையும் பதிவுசெய்தார்.
ஆக, தேக்கா ஈரச் சந்தை அருகில் புதிதாக அமைந்திருக்கும் வாகன நிறுத்தம் அங்கு வந்து செல்லும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது என லாம்.
செய்தி: அருணா கந்தசாமி
'தேக்கா கதைகள்' பகுதியில் இடம்பெற்ற படங்கள்:
திமத்தி டேவிட்

